ஒரே காதலுனுக்காக 38 செல்போன்களை கொள்ளையடித்த இரண்டு கல்லூரி மாணவிகள்:அடடே.!

செல்போன்கள் திருடிய டீனா என்பவர் முதலாம் ஆண்டு கலைக் கல்லூரி மாணவி ஆவார். மேலும் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

|

குறிப்பாக திருட்டு சம்பவங்கள் பெண்கள் பயனிக்கும் மின்சார ரயில்களில் அதிகமாக நடக்கிறது, அதன்படி மும்பையில் மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் மொபைல் சாதனங்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து
வந்தது.

ஒரே காதலுனுக்காக 38 செல்போன்களை கொள்ளையடித்த இரண்டு கல்லூரி மாணவிகள்.!

இது தொடர்பாக பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் பல புகார்களை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போரிவாலி - சாண்டாகுரூஸ் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இந்த திருட்டு சம்பவம் அதிகமாக நடைபெற்றுள்ளது
என்பதை ரயில்வே குற்றப்புலணாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பெண் காவலர்:

பெண் காவலர்:

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது, மேலும் கடந்த 30-ம் தேதி காலை பெண் காவலர் ஒருவர் போரிவாலி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறினார். அந்த சமயம் செல்போனை திருடி டிவிங்கிள் சோனி என்ற 20 வயது கல்லூரி மாணவியை பெண் காவலர் கையும் களவுமாக பிடித்தார்.

 டிவிங்கிள் சோனி :

டிவிங்கிள் சோனி :

டிவிங்கிள் சோனி என்ற அந்த பெண் கட்டிடக்கலை துறையை சேர்ந்தவர், டிவிங்கிள் சோனியிடம் இருந்து 9 விலையுயர்ந்த செல்போன்களை
கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரைப் போலவே செல்போன்களை திருடிய டீனா பர்மர் என்ற 19 வயது கல்லூரி மாணவியும் சிக்கினார்.
பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 3 லட்சம் ரூபாய்:

3 லட்சம் ரூபாய்:

இரண்டு கல்லூரி மாணவிகளும் திருடிய செல்போன்களை ராகுல் ராஜ்புரோகித் என்பவரிடம் விற்பனை செய்துள்ளது தெரியவந்ததைத்
தொடர்ந்து ராகுலையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த கல்லூரி மாணவிகளும் சுமார் 3 லட்சம் ரூபாய் அளவிற்கு ராகுலிடம்
செல்போன்களை விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

 விசாரணை

விசாரணை

செல்போன்கள் திருடிய டீனா என்பவர் முதலாம் ஆண்டு கலைக் கல்லூரி மாணவி ஆவார். மேலும் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தெரிவித்து என்வென்றால் இருவரும் கல்லூரிக்கு மின்சார ரயிலில் காலை
மற்றும் மாலை வேளைகளில் சென்று வரும் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஹிருஷி சிங்

ஹிருஷி சிங்

பின்னர் இருவருமே ஹிருஷி சிங் என்ற வாலிபரை காதலித்து வந்ததும், இவருக்காகவே தாங்கள் செல்போன்களை திருடியதாகவும், திருடிய செல்போன்கள் மூலம் கிடைத்த பணத்தை காதலருக்கு அளித்து வந்த அதிர்ச்சிகர விவரமும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

 38 செல்போன்கள்:

38 செல்போன்கள்:

இரண்டு கல்லூரி மாணவிகளிடம் இருந்து இதுவரை 38 விலையுயர்ந்த செல்போன்களும், 30 மெமரி கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் இருவரும் தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Two college girls steal 38 phones for ‘a boyfriend’: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X