Home
News

ஏர்டெல் சிம் இருக்கா.. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்.. தினமும் 3ஜிபி டேட்டா.. இந்த 2 திட்டங்களை விட்றாதீங்க..

ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். சமீபத்தில் கூட வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது ஏர்டெல்.

மேலும் ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களைச் சற்று விரிவாகாப் பார்க்கலாம்.

ஏர்டெல் சிம் இருக்கா.. இந்த 2 திட்டங்களை விட்றாதீங்க..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid recharge plan) ஆனது பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது. மேலும் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் சந்தா மற்றும் அதிக டேட்டா கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 1199 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.1199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளன.

ஏர்டெல் சிம் இருக்கா.. இந்த 2 திட்டங்களை விட்றாதீங்க..

அதாவது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Two budget priced Airtel plans that offer netflix amazon prime subscription: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X