Home
News

குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா தரும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: வாங்க பார்ப்போம்!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பல அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களையும் வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன. ஆனால் பிஎஸ்ன்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. இருந்தபோதிலும் கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வரும். அதாவது தினசரி 3ஜிபி டேட்டா தரக்கூடிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா தரும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் இரவு நேரத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இலவச BSNL ட்யூன்ஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். மேலும் இந்நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், இலவச PRBT உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

 குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா தரும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்ததிட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில்ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ்,
வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த ரூ.239 திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL Tunes, Eros Now சேவைகள், ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவை, அரீனா மொபைல் கேமிங் சேவை, லோக்துன், ஜிங் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.269 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Two BSNL prepaid plans that offer 3GB data per day at low cost: Check Them Out : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X