2ஜிபி டேட்டா.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகளுடன் அசத்தும் 2 BSNL திட்டங்கள்.. என்ன விலை?
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் இரண்டு அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது. அதாவது ரூ.599 மற்றும் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. இப்போது இந்த இரண்டு திட்டங்களை நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கும் இந்த திட்டம்.

ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) போன்ற சேவைகளையும் இலவசமாகவழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரபெய்ட் திட்டம். குறிப்பாக ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் எக்கச்சக்க நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம்.
84 நாட்கள் வேலிடிட்டி வேண்டாம் ஒரு வருட வேலிடிட்டி வேண்டும் என எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.1999, ரூ.2399மற்றும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் 395 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே ஒரு வருடம் வேலிடிட்டி விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இந்த ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக மாற்றப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டமானது 395 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் வழங்கும். கூடுதல் நன்மைகளைப் பொறுத்தவரை, இது முதல் 30 நாட்களுக்கு ரிங்டோன்,ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகலை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்டமானது 600ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்கும். குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு (அதாவது 600ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு) இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் அணுக கிடைக்கும். கூடுதல் நன்மைகளைப் பொறுத்தவரை, 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்றவைகள் இலவசமாகக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








