Home
News

கம்மி விலையில் 3 மாதங்களுக்கு அசத்தல் நன்மையை வழங்கும் இரண்டு Airtel திட்டங்கள்.!

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகளையும் வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது.

குறிப்பாக ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக ஓடிடி நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் மூன்று மாதங்களுக்கு ஓடிடி நன்மைகளை வழங்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

3 மாதங்களுக்கு அசத்தல் நன்மையை வழங்கும் இரண்டு ஏர்டெல் திட்டங்கள்.!

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக மூன்று மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 84ஜிபி டேட்டாவை பெற முடியும்.

ஏர்டெல் ரூ.839 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இது அதன் பயனர்களுக்குக் கிட்டத்தட்ட 3 மாதம் நெருங்கிய செல்லுபடி காலத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், அதன் பயனர்கள் தினசரி 2ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். அதாவது, இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மொத்த டேட்டாவின் அளவு 168 ஜிபி ஆகும். இந்த திட்டத்துடன், பயனர்களுக்குக் கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது.

இந்த ஏர்டெல் ரூ.839 திட்டத்தில் பயனர்கள் பெறும் நன்மைகளின் பட்டியல் இன்னும் நீடிக்கிறது. பாரதி ஏர்டெல் மூன்று மாதங்களுக்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் இந்த திட்டத்துடன் வழங்குகிறது. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக், ஒரு மாதத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள் நன்மை, ஃபாஸ்டேக்கில் ரூ.100 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் இலவச விங்க் மியூசிக் உள்ளிட்ட கூடுதல் பலன்களையும் வழங்குகிறது.மேலும் இந்நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட
நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், Xstream App, ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் , அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
அதேபோல் ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா
இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒரு வருட சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர Airtel Thanks நன்மைகளையும் வழங்குகிறது இந்த ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Two Airtel prepaid plans that offer the benefit of 3 Month Disney+ Hotstar Subscription : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X