Twitter யூசர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் அனுப்பிய Elon Musk.. கதிகலங்கும் பேஸ்புக், வாட்ஸ்அப்!
மெட்டாவின் (Meta) மெசஞ்சர் (Messenger), வாட்ஸ்அப் (WhatsApp) ஆப்ஸ்களில் இருக்கும் மிக முக்கியமான இரண்டு வசதிகளை விரைவில் ட்விட்டரில் (Twitter) அறிமுகப்படுத்த உள்ளதாக ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த வசதிகள் என்ன?, இதனால் துவண்டுபோய் இருக்கும் ட்விட்டர் யூசர்கள், மீண்டும் காலரை தூக்கிவிட்டு செல்வார்களா? என்பதை இங்கு பார்ப்போம்.
உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2022ஆம் ஆண்டு, பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். கிட்டத்தட்ட ரூ.3.30 லட்சம் கோடி செலவு செய்து வாங்கிய ட்விட்டரில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு லாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

அப்படி ட்விட்டர் நிறுவனம் தனது கைக்கு வந்த உடனேயே ஆயிரக்கணக்கான ட்விட்டர் ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்து, அந்த நிறுவனத்தினருக்கே முதலில் ஷாக் கொடுத்தார். அப்போது சிஇஓவாக இருந்த பராக் அகர்வால் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல உலகம் முழுவதும் முக்கிய ட்விட்டர் நிர்வாகிகளும், ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து பிரபலங்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் சந்தா கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினார் மஸ்க். ட்விட்டரின் பறவை லோகோவை மாற்றி நாய் லோகோவை வைத்தார். பின்பு, மீண்டும் பறவை படத்தையே மாற்றினார். அண்மையில் ட்விட்டர் சந்தா கட்டாதவர்களின் ப்ளூ டிக்கை பறித்தார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படி பல சம்பவங்களால் ட்விட்டர் வாசிகள் கலக்கத்தில் இருந்தனர். மற்ற சமூக ஊடக ஆப்ஸ்களின் யூசர்கள், ட்விட்டர் யூசர்களை கிண்டல் செய்யவே தொடங்கிவிட்டனர். இப்படிப்பட்ட சூழலில் ட்விட்டர் யூசர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் செய்தியொன்றை எலான் மஸ்க் அனுப்பி அவர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
அதாவது, ட்விட்டரில் ஆடியோ கால் (Twitter Audio Call) மற்றும் வீடியோ கால் (Twitter Video Call) வசதியை விரைவில் கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புதிய அப்டேட் ட்விட்டரில் வந்தால், தனிப்பட்ட மொபைல் போன் நம்பரை பயன்படுத்தாமல், ட்விட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்துகொள்ள முடியும். இதனால், ட்விட்டர் யூசர்கள் ஆடியோ, வீடியோ காலுக்காக வேறொரு ஆப்-பை பயன்படுத்த வேண்டியது இருக்காது.
இதுகுறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "விரைவில் ட்விட்டர் பிளாட்பார்மில் ஆடியோ மற்றும் வீடியோ சாட் வசதியை நீங்கள் பயன்படுத்தலாம். இதன்மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் கூட உங்களது தனிப்பட்ட போன் நம்பரை பயன்படுத்தாமல், ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசிக்கொள்ள முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் மெசஞ்சர், சிக்னல், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட முக்கிய ஆப்ஸ்களுடன் போட்டி போட முடியும். அண்மை காலமாக ட்விட்டரில் இருந்து லட்சக்கணக்கான யூசர்கள் வெளியேறி வருகின்றனர். ட்விட்டருக்கு மாற்றாக ப்ளூஸ்கைக்கு (Bluesky) மாறி வருகின்றனர்.
சொல்லப்போனால், ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தாதாரர்களே தங்களது சந்தாவை கட்டமால், ரத்து செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் ட்விட்டர் நிறுவனம், தனது யூசர்கள் திசை திரும்பாமல் இருக்க ஒரு மாஸ் அப்டேட்டை கொண்டுவர திட்டமிட்டுவந்தது. இந்த நிலையில் ட்விட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








