பலத்த சம்பவம்.. இனி Twitterஐ மொபைலில் வைத்திருந்தாலே கட்டணம்! மேட்டர் என்னனு பாருங்க.!

|

எலான் மஸ்க் ட்விட்டரை பயன்படுத்த ஒவ்வொருவரிடமும் சந்தாக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Twitter இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கு திரும்பினால் ட்விட்டர்

எங்கு திரும்பினால் ட்விட்டர்

இந்த தகவல் நிச்சயமாக அனைத்து ட்விட்டர் பயனர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. பத்தோடு பதினொன்றாக பயன்படுத்தப்பட்ட வந்த சமூகவலைதளம் தான் ட்விட்டர். ஆனால் சமீப காலமாக எங்கு திரும்பினால் ட்விட்டர் ட்விட்டர் என்ற வார்த்தை தான் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணமும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அது இதோ.

எலான் மஸ்க் இன் ட்விட்டர்

எலான் மஸ்க் இன் ட்விட்டர்

பெரிய காரணம் எல்லாம் ஒன்றுமில்லை இத்தனைக்கும் காரணம் ஒரே ஒரு பெயர் தான். அது எலான் மஸ்க். ஆம், சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கினார். ட்விட்டரை வாங்கியதில் இருந்தே மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒவ்வொரு தகவலும் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒரு பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து Twitter பயனர்களுக்கும் கட்டணம்

அனைத்து Twitter பயனர்களுக்கும் கட்டணம்

இதுகுறித்து வெளியான தகவலில் உள்ள விவரங்களை முதலில் பார்க்கலாம். பெரும்பாலான அல்லது அனைத்து பயனர்களுக்கும் ட்விட்டரைப் பயன்படுத்த சந்தாக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ப்ளூ டிக் சேவையை பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு சந்தாக் கட்டணம் நிர்ணயித்து அதன் விலையும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அனைத்து பயனர்களுக்கும் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திட்டம் தீட்டும் மஸ்க்

திட்டம் தீட்டும் மஸ்க்

அனைத்து பயனர்களுக்கும் கட்டணம் என்ற யோசனை சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஊழியர்களுடன் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்டக் காலத்திற்கும் இந்த கட்டணம் வசூலிக்க மஸ்க் விரும்புவதாக அறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த மஸ்க் தீவிரமாக திட்டமிட்டுள்ளாரா என்பது சரியாக தெரியவில்லை.

ப்ளூ டிக் சந்தா

ப்ளூ டிக் சந்தா

ட்விட்டர் சமீபத்தில் அறிமுகம் செய்த ப்ளூடிக் சந்தா சேவையின் விரிவாக்க முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதிலே பெரிய குழப்பம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டரை வாங்கிய மஸ்க்

ட்விட்டரை வாங்கிய மஸ்க்

ஆரம்பக்கட்டத்தில் ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்த மஸ்க், பின் இந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இதற்கு பிரதான காரணமாக ஒன்றை குறிப்பிட்டார். அதாவது ட்விட்டரில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த விவரத்தை நிர்வாகம் முறையாக சமர்பிக்கவில்லை என மஸ்க் கூறினார். இதையடுத்து பல்வேறு விவாதங்கள் சர்ச்சைகள் எழுந்தது. இவை அனைத்துக்கும் பிறகும் மஸ்க் ட்விட்டரை வாங்க மீண்டும் விருப்பம் தெரிவித்து அதை வாங்கவும் செய்தார்.

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள்

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள்

ட்விட்டரை மஸ்க் வாங்கியவுடன் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த நடவடிக்கை எடுப்பாரா? முந்தைய நிர்வாகத்தின் குற்றத்தை சுட்டிக்காட்டிய மஸ்க் அவரது தலைமையில் பொறுப்பேற்ற உடன் அதை சரி செய்வாரா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மஸ்க் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.

ஆள்மாறாட்ட கணக்குக்கு தடை

ஆள்மாறாட்ட கணக்குக்கு தடை

ட்விட்டரில் ஒரு பிரபலத்தின் பெயரில் போலி கணக்கு ஓபன் செய்து ஆள்மாறாட்டம் செய்வது என்பது பெரிய தலைவலியாக இருந்தது. அரசியல் தலைவர்கள், நடிகர்களில் தொடங்கி ஒவ்வொரு பிரபலங்களுக்கும் இந்த ஆள்மாறாட்ட கணக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. அது என் கணக்கு அல்ல, இது தான் எனது அதிகாரப்பூர்வ கணக்கு என பலரும் விளக்கமளித்ததை பார்த்திருப்போம். அந்தளவிற்கு ட்விட்டரில் போலி ஆள்மாறாட்ட கணக்குகள் இருந்தது.

எச்சரிக்கை இன்றி தடை

எச்சரிக்கை இன்றி தடை

இதுகுறித்த அறிவிப்பை மஸ்க் ட்வீட்டின் மூலம் வெளியிட்டார். அதில், ட்விட்டர் தற்போது நேரடியாக கணக்குகளை இடை நிறுத்தும் எனவும் மற்றவர்களை போல் ஆள்மாறாட்டம் செய்வது கண்டறியப்பட்டால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் பயனர்களின் உண்மைத் தன்மைக்கு இந்த நடவடிக்கை உகந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Twitter users shocked by the subsequent information: Elon Musk Plans To Charge All Twitter Users?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X