புதுப்பொலிவுடன் வரும் ஆப்பு! Twitter பயனர்களே ரெடியா இருங்க.. மீண்டும் வருகிறார் எலான் மஸ்க்.!
எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டரில் Twitter Blue சந்தா சேவை மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. இந்த சேவையானது இன்று டிசம்பர் 12 தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் ப்ளூ சேவை பெறுவதற்கு கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பது நல்லது.

ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை
எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டரில் ட்விட்டர் ப்ளூ சந்தா சேவையை டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது என நிறுவனம் அதிகாரப்பூர்வ ட்வீட் மூலம் அறிவித்துள்ளது. இந்த சந்தா சேவையானது ப்ளூ டிக், 1080 பிக்சல் வீடியோக்கள் பதிவிடும் திறன், ட்வீட் திருத்தம் உள்ளிட்ட பல ப்ரீமியம் அம்சங்களுக்கான அணுகலை பயனர்களுக்கு வழங்குகிறது.

ப்ளூ டிக் சந்தா கட்டணம்
இதுகுறித்து ட்விட்டர் தெரிவித்துள்ள தகவலில், "நாங்கள் @TwitterBlue ஐ திங்கட்கிழமை மீண்டும் தொடங்குகிறோம் - ப்ளூ டிக் உள்ளிட்ட அணுகலை பெறுவதற்கு ஆண்ட்ராய்டு பயனர்கள் $8/மாதம் மற்றும் iOS பயனர்கள் $11/மாதம் என செலுத்த வேண்டும் என நிறுவனம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ட்விட்டர் ப்ளூ சேவையை மறு ஆய்வு செய்து மூன்றாவது முறையாக நிறுவனம் வெளியிடுகிறது.

ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு கட்டணம் குறைவு
ப்ரீமியம் ட்விட்டர் ப்ளூ அம்சங்களை அணுக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற விவரத்தை பார்க்கலாம். ட்விட்டர் ப்ளூ அம்சத்தை பெறுவதற்கு ஐஓஎஸ் பயனர்களை விட ஆண்ட்ராய்ட் பயனர்கள் குறைவாகவே கட்டணம் செலுத்த வேண்டும் என மைக்ரோ பிளாக்கிங் தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏன் அதிகம்?
ஆண்ட்ராய்டில் பயனர்கள் ப்ளூ டிக் சேவைக்கு மாதம் $8 செலுத்த வேண்டும். அதேபோல் iOS பயனர்கள் சேவையைத் தொடங்குவதற்கு $11 செலுத்த வேண்டும். ஐபோன் பயனர்களுக்கு மட்டும் ஏன் அதிகத் தொகை என்ற விவரத்தை நிறுவனம் எதுவும் விளக்கவில்லை. ஆனால் ஆண்ட்ராய்ட் பயனர்களை விட ஐஓஎஸ் பயனர்கள் $3 அதிகமாக செலுத்த வேண்டும்.

ப்ளூ டிக் பலன் என்ன?
அதேபோல் அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் 'ப்ளூ டிக்' பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் ப்ளூ டிக் இருக்கும்.

முடிவில் உறுதியாக இருக்கும் எலான் மஸ்க்
ப்ளூடிக் மூலம் ட்விட்டரில் பல அம்சங்களை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக்கிற்காக பயனர்களிடம் மாதம் குறிப்பிட்ட டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது. ட்விட்டரின் இந்த சந்தா கட்டண தொகை முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ட்விட்டர் கட்டண முடிவில் எலான் மஸ்க் உறுதியாக இருக்கிறார்.

ட்விட்டர் எடிட் அம்சம்
ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ப்ளூடிக் சேவையில் பல கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. அதாவது ப்ளூ டிக், 1080 பிக்சல் வீடியோக்கள் பதிவிடும் திறன், ட்வீட் திருத்தம் உள்ளிட்ட பல ப்ரீமியம் அம்சங்களுக்கான அணுகல் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இதில் ட்விட்டர் எடிட் அம்சம் இடம்பெறாது என கூறப்படுகிறது. காரணம் மஸ்க் ட்விட்டர் எடிட் அம்சத்தை அனைத்து பயனர்களுக்குமானதாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

நிறைய வித்தியாசம் இருக்கும்
எது எப்படியோ எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் ட்விட் ப்ளூ சேவைக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருப்பது உறுதி. எனவே ட்விட்டர் பயனர்கள் ப்ளூடிக் சேவைக்கு கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பது நல்லது. அதேபோல் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கும் சாதாரண ட்விட்டர் பயனர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications