இதே வேலையா ஒரே வாரத்தில் 2-வது முறை: "ஆத்திரமடைந்த பயனர்கள்"., ஏதோ தவறு நடந்துருச்சு- டுவிட்டர் விளக்கம்!
ஒரே வாரத்தில் இரண்டாவது முறை டுவிட்டர் கணக்கு முடங்கியதால் அதன் பயனர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து டுவிட்டர் இதற்கு ஏதோ மேலோட்டமாக பதிலளித்துள்ளது. அதில் ஏதோ தவறு நடந்து விட்டது தற்போது மீண்டும் முயற்சிக்கவும் என குறிப்பிட்டுள்ளது. முடங்கியதற்கான காரணம் குறித்து டுவிட்டர் இதுவரை விளக்கமளிக்கவில்லை. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான டுவிட்டர் பயனர்கள் டுவிட்களை பதிவிட முடியவில்லை உள்ளிட்ட சிக்கலை சந்தித்தாக புகார் அளித்தனர்.

பிழைகள் ஏற்பட்டு சரி செய்யப்பட்டதாக டுவிட்டர் விளக்கம்
தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக பிழைகள் ஏற்பட்டு சரி செய்யப்பட்டதாக டுவிட்டர் விளக்கம் அளித்தது. சுமார் அரை மணிநேர பாதிப்பைத் தொடர்ந்து இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்பின்பே டுவிட்டர் பயனர்களால் தொடர்ந்து தங்கள் டுவிட்களை பதிவிட முடிந்தது. மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டர் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக செயலிழந்திருக்கிறது. பிப்ரவரி 17 அன்று டுவிட்டர் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக செயலிழப்பை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி இரவு 9:41 மணியளவில் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது முறையாக செயலிழந்து விட்டன
பல பயனர்கள் டுவிட்டரை திறக்க முயற்சிக்கும் போது இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் "சம்திங் வெண்ட் ராங்" என்பதை மட்டுமே பார்க்க முடிந்ததாக தெரிவிக்கின்றனர். மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டர் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக செயலிழந்து விட்டன. இதுகுறித்து சைபர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அமித் துபே கருத்துப்படி, டுவிட்டரின் சர்வர் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக செயலிழந்தது. சமூகவலைதள அணுகலில் தற்போது சிக்கலை சந்திக்கிறது. அது தன்னைத்தானே சரி செய்ய வேண்டும், என பதிவிட்டுள்ளார்.

உண்மையான சிக்கல் இதுவா
அதேபோல் டுபே கூற்றுப்படி, டுவிட்டர் சர்வர் செயலிழக்க செய்யும் விதத்திற்கு, ஹேக்கிங் முயற்சிகளே மூலக் காரணம் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நிறுவனம் உண்மையான சிக்கலை சந்தித்து இருந்தால் ஒரு வார காலத்திற்குள் இரண்டாவது முறையாக முடங்காது என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் டூபே குறிப்பிடுகையில், நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் கிடைக்கும் தன்மை ஆகிய மூன்று வழிகளில் குறிவைத்து ஹேக்கர்கள ஹேக்கிங் முயற்சியை மேற்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

டுவிட்டர் பயனர்களின் தரவு பாதுகாப்பு
இருப்பினும் டுவிட்டர் பயனர்களின் தரவு பாதுகாப்பாக இருக்கும் எனவும் அது நம்பகத்தன்மை அல்லது ஒருமைப்பாட்டுக்கு இலக்கு ஏற்படுத்தாது திருடப்படாது எனவும் டுவிட்டர் நிச்சயமாக கிடைக்கும் சிக்கலை சமாளிக்கும் எனவும் டுவிட்டர் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி 11 ஆம் தேதி சுமார் ஒரு மணி நேரம் டுவிட்டர் சர்வர் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் டுவிட்டர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது, செயலிழப்பின் பின்னணியில் தொழில்நுட்ப பிழை இருந்தது எனவும் அது சரிசெய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் டுவிட்டர் சேவையகம் செயலிழந்ததாக சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

தனியுரிமைக் கொள்கை விவகாரம்
டுவிட்டர் நிறுவனம் அதன் ஒவ்வொரு பயனரின் தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, அதன் தனியுரிமைக் கொள்கையை கடந்த டிசம்பர் மாதம் புதுப்பிப்பதாக அறிவித்தது. இந்த புதிய தனியுரிமை புதுப்பிப்பு கொள்கைகள் இன்று முதல் அதிரடியாக உடனுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. இனி இந்த புதிய கொள்கைகளின் படி, பயனர்களின் அனுமதியின்றி தனிப்பட்ட நபர்களின் படங்கள் அல்லது வீடியோக்கள் போன்ற மீடியா கோப்புகளைப் பகிர நிறுவனம் அனுமதிக்காது என்று கூறியது. இத்துடன் பயனர்களின் வீட்டு முகவரி, அடையாள ஆவணங்கள் மற்றும் தொடர்புத் தகவல் போன்ற முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் மீடியா கோப்புகளை நிறுவனம் ஏற்கனவே அதன் தளத்தில் தடை செய்துள்ளது. எவ்வாறாயினும், புதிய விதிகள் அவர்களின் தனிப்பட்ட இடத்தை துன்புறுத்துவதற்கு அல்லது படையெடுப்பதற்கு வழிவகுக்கும் இடுகைகளைக் கடுமையாக ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தனியுரிமை கொள்கைகள்
இந்த புதிய தனியுரிமை கொள்கைகள், டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரான 'ஜாக் டோர்சி' சமீபத்தில் வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த 'பராக் அகர்வால்' டுவிட்டர் நிறுவனத்தின் புதிய CEO -வாக ஆகிய பின்னர் வெளிவந்தது இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரக் அகர்வால் டுவிட்டரில் 'தயாரிப்பு பொறியாளராக' பணியாற்றத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 37 வயதில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரியான முதல் நபர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications