பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் மக்களே: டுவிட்டர்: எதற்கு?

இப்போது ஏற்பட்டுள்ள இந்த பாஸ்வேர்டு சார்ந்த பிரச்சனையை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டது, இருப்பினும் மக்களுக்கு அந்நிறுவனம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

|

டூவிட்டர் நிறுவனம் உலகின் மிக முக்கியமான சமூக வலைத்தளம். ஃபேஸ்புக்குக்கு அடுத்தபடியாக இருப்பதும் ட்விட்டர் தான், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த கொண்டுள்ளது இந்த சமூக வலைத்தளமான ட்விட்டர்.

பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் மக்களே: டுவிட்டர்: எதற்கு?

தற்சமயம் டூவிட்டர் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் பாஸ்வேர்டு (கடவுச்சொல்) அந்நிறுவனத்தின் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது, மேலும் பலரின் பாஸ்வேர்ட் பற்றிய தகவல்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது.

வேண்டுகோள்:

வேண்டுகோள்:

இப்போது ஏற்பட்டுள்ள இந்த பாஸ்வேர்டு சார்ந்த பிரச்சனையை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டது, இருப்பினும் மக்களுக்கு அந்நிறுவனம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது, அது என்னவென்றால் பாதுகாப்புக்கு வேண்டி அனைத்து மக்களும் கண்டிப்பாக பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

டுவிட்டர் நிறுவனம்:

டுவிட்டர் நிறுவனம்:

மேலும் இப்போது ஏற்ப்பட்ட கோளாரு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை, குறிப்பாக இதுபோன்ற பிரச்சனைகள் வரும் காலத்தில்
நடக்கமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

புக்மார்க்ஸ் :

புக்மார்க்ஸ் :

தற்சமயம் ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை சேமித்து வைக்க புதிய புக்மார்க்ஸ் (Bookmarks) எனும் வசதியை அறிமுகம் செயத்துள்ளது அந்நிறுவனம். இந்த புதிய வசதி பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேர் எனும் புதிய அம்சம்:

ஷேர் எனும் புதிய அம்சம்:

மேலும் ட்விட்டர் செயலியில் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கம் ஷேர் ஐகானை கிளக் செய்து ட்விட்களை மற்றவர்களுக்கு எளிமையாக பகிர்ந்து கொள்ளவோ, அவறறை புக்மார்க் செய்யவோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ட்விட்களை மிக எளிமையாக பகிர்ந்துகொள்ள ஷேர் எனும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)
ஹோம் பேஜ்:

ஹோம் பேஜ்:

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு அம்சங்களும் ஷேர் எனும் ஒற்றை பட்டனில் வழங்கப்பட்டிருக்கிறது, இதனால் வாடிக்கையாளர்கள் மிக ட்விட்களை சேர் செய்யவும் மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் ஹோம் பேஜ் சென்று புக்மார்க் செய்யப்பட்ட ட்விட்களை எளிமையாக பார்க்க முடியும், மேலும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி இந்த புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு மேலும் பல்வேறு புதிய அம்சங்கள் ட்விட்டரில் இடம்பெறும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Twitter urges all users to change passwords after glitch; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X