Home
News

களையெடுக்கும் ட்விட்டர் கலக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ்.!!

By Meganathan

உலக அமைதியை கெடுப்பதோடு மக்களுக்கு எந்நேரமும் தொந்தரவு செய்வதை தீவிரவாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் சமீப காலமாக உலகை அச்சுறுத்தி வரும் பேரழவு இயக்கம் தான் ஐஎஸ்ஐஎஸ்.

அதிபயங்கர நாச வேலைகளுக்கான திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பிரத்யேக செயலிகளை பயன்படுத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது அனைவரும் அறிந்ததே.

தற்சமயம் இதனை உறுதிபடுத்தும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிரபல சமூக வலைதள நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் ஸ்லைடர்களில்..

ட்விட்டர்

ட்விட்டர்

உலகில் வாழும் சக மக்களை போன்றே நாங்களும் தீவிரவாத இயக்கங்களை கடுமையாக எதிர்க்கின்றோம். மேலும் தீவிரவாதத்தை பரப்பும் எவ்வித தகவல் பரிமாற்றத்தையும் ட்விட்டர் அனுமதிக்காது.

நீக்கம்

நீக்கம்

இதன் காரணமாக ட்விட்டரில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு தொடர்புடையதாக கண்டறியப்பட்ட சுமார் 125,000 கணக்குகள் கடந்த ஆண்டு மத்தியில் இருந்து இதுவரை நீக்கப்பட்டுள்ளது.

முதல் முறை

முதல் முறை

இது போன்ற தகவல்களை முதல் முறை அறிவித்திருக்கும் ட்விட்டர் நிறுவனம் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளது.

கணக்கு

கணக்கு

ஏரதாழ 46,000 ட்விட்டர் கணக்குகளை ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் பயன்படுத்தி வந்ததாக ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்திருக்கின்றது.

கவனம்

கவனம்

ட்விட்டர் சார்ந்த பயன்பாடுகளை ஐஎஸ்ஐஎஸ் அதிகரித்திருக்க வேண்டும் அல்லது ட்விட்டர் நிறுவனம் இதனை கண்டறிய அதிக கவனம் எடுத்திருக்க வேண்டும் என்பதையே இந்த நிகழ்வு பிரதிபலிக்கின்றது.

அனானமஸ்

அனானமஸ்

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக ஆன்லைன் போர் ஒன்றை அறிவித்ததோடு இது சார்ந்த பல்வேறு தகவல்களை வெளியிட அனானமஸ் எனும் ஹேக்கர் பிரிவு ட்விட்டர் தளத்தை பயன்படுத்தியதோடு தொடர்ந்து பயன்படசத்தியும் வருவதும் குறிப்பிடத்தக்கது.

நிறுத்தம்

நிறுத்தம்

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த முடிவின் மூலம் ஒரே வீச்சில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் செய்லபாடுகளை நிறுத்த முடியாது என்றாலும், தகவல் பரிமாற்றத்தை மட்டுமாவது ஓரளவு குறைக்கும் என்பது உறுதி.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Twitter shocks ISIS and shuts down 125K accounts Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X