யாருயா இவரு: தன்னைத் தானே கேலி செய்து டுவிட்டர் போர்ட் மீட்டிங்கிற்கு தயாரான மஸ்க்- ஆர்வம் ரொம்ப!

|

டுவிட்டரின் மிகப் பெரிய பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், உலகப் பணக்காரர்கள் பட்டியல் பிரதான ஒருவர் என்ற பல புகழ் இவருக்கு இருந்தாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்கப்படும் ஆக்கப்பூர்வமான கேள்விக்கான பதில்கள் மற்றும் உரையாடல்களை அடிப்படை தரப்பினரிடமும், இளைஞர்களிடமும் மேற்கொள்வார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழு மீட்டிங்கில் இணைய இருக்கிறார் என தகவல்கள் வெளியானது.

எலான் மஸ்க் மீது அதிக நம்பிக்கை

எலான் மஸ்க் மீது அதிக நம்பிக்கை

இதுகுறித்து கூறிய டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் அதிக நம்பிக்கை வைத்திருப்பதோடு அவ்வப்போது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வழங்குவார். தற்போது மஸ்க் டுவிட்டர் குழுவில் இணைய இருப்பது தளத்தை மேலும் பலம் சேர்க்கும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டார். டுவிட்டர் குழு நியமனத்திற்கு பிறகு டுவிட்டர் போர்ட் மீட்டிங்-ல் இணைய இருப்பதை மீம் மூலம் எலான் மஸ்க் தெரிவித்தார்.

டுவிட்டர் விதித்த கட்டுப்பாடு

டுவிட்டர் விதித்த கட்டுப்பாடு

2024 ஆம் ஆண்டு வரை இவர் இயக்குனர் குழுவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் பதவியில் இருக்கும் காலம் மற்றும் இந்த காலம் முடிந்து 90 நாட்கள் வரை இவர் சார்ந்தோ அல்லது இவரை சார்ந்து இருப்பவர்களின் வழியாக 14.9 சதவீதத்துக்கு மேல் டுவிட்டரில் பங்கு வைத்துக் கொள்ள முடியாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் குழு மீட்டிங்-ல் இணைய இருப்பதை மீம் மூலம் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் குழுவில் இணைந்த பணியாற்றுவதற்கு ஆர்வமத்துடன் இருப்பதாக மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

மீட்டிங்கில் அவர் கலந்து கொள்வது உறுதி

எலான் மஸ்க், தற்போது மிகப்பெரிய டுவிட்டர் இன்க்., தளத்திந் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்து இருக்கிறார். மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9% பங்குகளை வாங்கி இருக்கிறார். இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மஸ்கை டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைத்தார். டுவிட்டர் போர்ட் மீட்டிங்கில் அவர் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மஸ்க் தன்னைத்தானே கேலி செய்து, அடுத்து என்ன நடக்கும் என கணித்து மீம் ஒன்றை வெளியிட்டார்.

தன்னைத்தானே கேலி செய்து டுவிட்

எம்எம்ஏ நிபுணரும் நகைச்சுவரை நடிகருமான ஜோ ரோகன் தொகுத்து வழங்கிய போட்காஸ்டான ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் நிகழ்ச்சியில் 2018 ஆம் ஆண்டு மஸ்க் பங்குபெற்றார். இதில் மார்ஸ், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பல்வேறு தலைப்புகள் குறித்து இரண்டரை மணி நேரம் மஸ்க் விவாதித்தார். இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது. ரோகனுடன் மஸ்க் மரிஜூவானா புகைக்கும் காட்சி இணையத்தில் மீம்ஸ்களாக நிரப்பப்பட்டது. டுவிட்டரில் எடிட் பட்டன் குறித்த சிந்தனையை மஸ்க் டீஸ் செய்திருந்தார். மஸ்க் தன்னை பின்தொடர்பவர்களிடம் எடிட் பட்டன் டுவிட்டரில் தேவையா என வாக்கெடுப்பை நடத்தினார். அதில் 73.6% பேர் ஆம் என வாக்களித்தனர். தொடர்ந்து 2021 ஆம் டுவிட்டர் எடிட் விருப்பத்தில் வேலை செய்து வருவதாகவும், எந்த கருத்துக்கணிப்பின் மூலமாகவும் இந்த சிந்தனை வரவில்லை என டுவிட்டர் குறிப்பிட்டது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்

சமீபத்தில் ஸ்பேக் எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில், ஆக்செல் ஸ்பிரிங்கரின் தலைமை நிர்வாக அதிகாரி மத்தியோஸ் டோப்ஃப்னருடன் சமீபத்தில் நேர்காணலில் ஈடுபட்டார். அதில் மஸ்க் பல தலைப்புகளில் குறித்து விவாதித்தார். அதில் நீண்ட காலத்திற்கு பிறகு உடலை பராமரிக்க விரும்புவதாகவும் ஆனால் எனக்கு இறப்பிற்கு பயம் இல்லை எனவும் குறிப்பிட்டார். மேலும்"நாம் நீண்ட காலம் வாழ முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இது சமூகத்தில் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

Best Mobiles in India

English summary
Twitter's Next Board Meeting is Gonna be Lit: Elon Musk Mocks Himself With Meme

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X