புதிய விதிகள் குறித்து ஒரு வழியாக வாயை திறந்த டுவிட்டர்: "உங்களுக்காக எதையும் செய்வோம்"
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை நடைமுறையில் கொண்டுவர முயற்சிப்போம் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தடையின்றி டுவிட்டர் சேவையை தொடர்வதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் பொதுமக்களின் தொடர்புக்கு டுவிட்டர் சேவை கட்டாயமாக உள்ளது எனவும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய டுவிட்டர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுடன் ஏற்பட்ட முரண்பாடு
மேலும் அரசுடன் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் டூல்கிட்டு பிரச்சனை குறித்து அவர் விளக்கம் அளித்தார். அதேபோல் பேச்சு உரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த அவர் இந்த விவகாரத்தில் காவல்துறை தங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி புதிய டிஜிட்டல் கொள்கையை ஏற்றுக் கொண்டாலும் பேச்சுரிமையை தடுக்கும் வகையில் விதிகள் இருந்தால் அதை எதிர்க்க டுவிட்டர் கண்டிப்பாக குரல் கொடுக்கும் என குறிப்பிட்டார். இறுதியாக டுவிட்டர் இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு பதிலளித்துள்ளது. மேலும் இந்தியாவில் பொருந்தக் கூடிய சட்டத்திற்கு இணங்க முயற்சிக்கும் என கூறியுள்ளது.

ஆழ்ந்த அர்ப்பணிப்போடு டுவிட்டர்
இந்திய மக்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்போடு டுவிட்டர் இருக்கிறது. தங்கள் சேவை பொது உரையாடலுக்கு முக்கியமானதாக இருக்கிறது எனவும் எங்கள் சேவை கிடைக்க இந்தியாவில் பொருந்தக் கூடிய சட்டத்திற்கு இணங்க முயற்சிப்போம் எனவும் டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தங்களது வெளிப்படைத் தன்மை, சேவையில் ஒவ்வொரு குரலும் மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் சட்டத்தின் கீழ் கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை பாதுகாப்பு ஆகியவையை கண்டிப்பாக வழிநடத்துவோம் என டுவிட்டர் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள்
இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த தளங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

குறைகளை கேட்டறியும் அதிகாரி
சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது. கூ என்ற இந்திய சமூகவலைதளம் தவிர வேறு எந்த முன்னணி சமூகவலைதளம் நிறுவனத்தின் குறைகளை கேட்கும் அதிகாரி போன்ற எதையும் நியமிக்கவில்லை.

இடையீட்டாளர்கள் என்ற நிலை இழக்க நேரிடும்
இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும். இது எதையும் சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை, இது அரசு தரப்பை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

புதிய சமூக ஊடக விதிகள்
புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் (இந்தியாவில் வசிக்கும் ஊழியர்கள்) ஆகியோரை நியமிக்க அனைத்து சமூகவலைதளத்திற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது. பெரும்பாலான சமூகவலைதளம் இந்த விதிகளை பின்பற்ற தவறவிட்டன. அரசு இதற்கு வழங்கிய 3 மாத கால அவகாசம் மே 25 உடன் முடிவடைகிறது. ஆனால் இந்தியாவில் பேஸ்புக் தடை, இன்ஸ்டாகிராம் தடை அல்லது டுவிட்டர் தடை இருக்குமா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சில தளங்கல் ஆறு மாதம் வரை கால அவகாசம் கோரியுள்ளன. அதேபோல் சில தளங்கள் அமெரிக்காவில் இருக்கும் தலைமையின் பதிலுக்கு காத்திருக்கின்றன. இருப்பினும் இதற்கு கால அவகாசம் நீடிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications