Home
News

இப்போ இதெல்லாம் வேண்டாம்: கொரோனா பரவல் குறித்து 50 டுவிட்களை நீக்கிய டுவிட்டர்- இதுதான் காரணம்

கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி, கடும் சோர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை கொரோனா தொற்று அறிகுறி எனவும் இந்த தொற்றுகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுபடியும் மருத்துவர்களை அணுகும்படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று

அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனோ தொற்று 15 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டது மேலும் பீதியை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல் கொரோனா இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் சப்ளை தட்டுப்பாட்டால் இந்தியா திக்குமுக்காடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர், ஊடகத்தினர் உள்ளிட்டோர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகள்

சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகள்

இதற்கிடையில் கொரோனா வைரஸ் குறித்து சமூகவலைதளங்களில் வதந்திகள் தொடர்ந்து பரவி வருகிறது. கொரோனா தொற்று பீதியில் இருக்கும் நபர்களுக்கு மத்தியில் பரப்பப்படும் வதந்திகளால் அச்சுறுத்தல் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தேவையற்ற வதந்திகளையும், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், வதந்திகள் தொடர்ந்து பரவிய வண்ணம் இருக்கிறது.

52 பதிவுகளை நீக்கம்

52 பதிவுகளை நீக்கம்

இந்த நிலையில் ஆளும் மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து மைக்ரோ பிளாக்கிங் தளம் டுவிட்டர், கொரோனா வைரஸ் தொடர்பான 52 பதிவுகளை நீக்கியுள்ளதாக தனியார் செய்தி தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்கள் பெரும்பாலானவை கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை குறித்து மத்திய அரசு கையாளும் விதத்ததை குறிப்பிடுவதாக இருக்கிறது.

டுவிட்கள் அகற்றப்பட்ட காரணம்

டுவிட்கள் அகற்றப்பட்ட காரணம்

அகற்றப்பட்ட பல டுவிட்கள், மருத்து பற்றாக்குறை, படுக்கைகள், வெகுஜன தளங்கள் மற்றும் தொற்று நோய்க்கு மத்தியில் கும்பமேளாவில் கூடிய கூட்டம் தொடர்பான உள்ளடக்கமாக இருக்கிறது. இந்த டுவிட்கள் நாட்டிற்கு வெளிப்பகுதியில் தொடர்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

டுவிட்டர் பெற்ற உத்தரவின் விவரங்கள்

டுவிட்டர் பெற்ற உத்தரவின் விவரங்கள்

டுவிட்டர் பெற்ற உத்தரவின் விவரங்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெர்க்கமன் க்ளீன் சென்டர் ஃபார் இன்டர்நெட் மற்றும் சொசைட்டி திட்டமான லுமேன் தரவுத்தளத்தில் சேகரிக்கப்பட்டன. இது வலைதளத்தின் கருத்துகளை அகற்றுவதற்கான கோரிக்கைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 28 ஆம் முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Twitter Removes Over 50 Posts: Maximum tweets about Covid-19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X