இது இரண்டாவது முறை- சர்ச்சையை தூண்டுகிறதா டுவிட்டர்: இந்தியா மேப்பில் ஏற்பட்ட பிழை!
டுவிட்டரின் டுவீப் லைஃப் பிரிவில் உள்ள வரைப்படம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை இந்தியாவுக்கு வெளியே இருப்பது போல் காட்டியுள்ளது. இந்தியாவின் வரைப்படத்தை டுவிட்டர் தவறாக சித்தரிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக லே பகுதியை சீனாவின் ஒரு பகுதியாக காட்டியது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டர் காண்பித்த வரைபடம்
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை தனி நாடுபோல் காண்பித்து இந்தியாவின் சிதைந்த வரைபடத்தை டுவிட்டர் காண்பித்ததன் பிறகு ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு டுவிட்டர் தனது வலைதளத்தின் தவறான வரைபடத்தை திருத்தியுள்ளது.

சிதைந்த புகைபடம்
மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் தொழில் பிரிவில் தோன்றிய இந்த வரைபடம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் நாட்டில் இருந்து பிரிந்திருப்பதை காட்டுகிறது. இருப்பினும் டுவிட்டர் இந்தியாவின் சிதைந்த புகைப்படத்தை காண்பிப்பது இது முதன்முறை அல்ல. முதன்முறை ஏற்பட்ட பிழையை அடுத்து கடந்தாண்டு டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதியது, அதில் இந்திய வரைபடம் குறித்து தவறாக சித்தரிப்பது கடும் மறுப்புக்கு உரியது.

இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி
அண்மையில் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரை நியமித்தது. இந்த நிலையில் இவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப சட்டங்களை பின்புற்றுவதில் டுவிட்டருக்கும் மத்திய அரசுக்கும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள்
இதற்கிடையில் டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரியாக தர்மேந்தரா சத்தூர் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டுவிட்டர் இணையதளத்தில் இவரது பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் ஒன்று உள்ளூரில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதாகும். இந்த விதிகளை நியமிப்பத்தில் மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திரா சத்தூர் நியமிக்கப்பட்டு இருந்தது டுவிட்டர் நிறுவனம் புதிய விதிகளை பின்பற்றத் தொடங்கும் நடவடிக்கையாக இருந்தது.

ஓரிரு நாளில் பதவி விலகல்
இந்த நிலையில் புதிய குறை தீர்க்கும் அதிகாரி தர்மேந்திரா சத்தூர் பதவியேற்ற ஓரிரு நாளில் பதவி விலகியருப்பதாக வெளியான தகவல் டுவிட்டர் தொடர்ந்து அடுத்தடுத்த சிக்கலை சந்தித்து வருகிறது. சுமார் 50 லட்சம் பயனர்கள் கொண்ட இந்தியாவில் பயன்பாட்டு புகார்களை பெறுவதற்கு அதிகாரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்
இந்தியாவின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு டுவிட்டர் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் டுவிட்டர் இந்தியாவின் சட்ட ஆலோசகர் ஷாகுப்தா மற்றும் ஆயுஷி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் டுவிட்டர் நிறுவனம் தனக்கென வரையறுக்கப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாகவும் தனிநபர் கருத்து சுதந்திரம் உரிமைகளை மதித்து செயல்படுவதாகவும் விளக்கம் அளித்தனர்.

தகவல் தொழில்நுட்பத்திற்கான நாட்டின் விதிகள்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க மறுக்கும் வகையில் டுவிட்டர் செயல்பட்டு வருவதாக குழு உறுப்பினர்கள் விமர்சனம் முன்வைத்தனர். தகவல் தொழில்நுட்பத்திற்கான நாட்டின் விதிகளை மீறுவதற்கு டுவிட்டர் நிறுவனத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

விலக்கை இழக்க நேரிடும் என எச்சரிக்கை
சமீபத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்., டுவிட்டருக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் உடனடியாக புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கும்படி கேட்டுக் கொண்டதோடு, விதிமுறைகளை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலக்கை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டது.


Click it and Unblock the Notifications