எல்லாமே சீனாவுக்கு ஆதரவான கருத்து: மொத்தம் 1.70 லட்சம் கணக்குகள்: அதிர்ந்து போன டுவிட்டர் அதிரடி!

|

டுவிட்டர் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கத்தில் இருந்து சீனாவுக்கு ஆதரவான கருத்துகளை பரப்பும் வகையில் செயல்பட்டு வந்த 1,70,000 கணக்குகளை நீக்கியுள்ளது.

1,70,000 கணக்குகளை நீக்கிய டுவிட்டர்

1,70,000 கணக்குகளை நீக்கிய டுவிட்டர்

டுவிட்டர் சுமார் 1,70,000 கணக்குகளை தனது சமூகவலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் சீனாவுக்கு ஆதரவாக கருத்துகளை பரப்பு வகையில் செயல்பட்டு வந்தது. இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் இணைந்து பணியாற்றிவரும் நிபுணர்கள் தெரிவிக்கையில் இந்த கணக்குகள் அனைத்து ஹாங்காங் போராட்டம், கொரோனா தொற்று மற்றும் பிற முக்கிய நிலைமைகள் குறித்து போலியான தகவல்களை பரப்பி வந்துள்ளனர்.

சீன மொழியில் பதிவிடப்பட்டு வந்துள்ளது

சீன மொழியில் பதிவிடப்பட்டு வந்துள்ளது

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் சீன மொழியில் பதிவிடப்பட்டு வந்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிரதான சமூகவலைதளமான டுவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விபிஎன் மூலம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நினைத்துக் கூட பார்க்க முடியாத விலை: Nokia 5310 ஜூன் 16 அறிமுகம்!நினைத்துக் கூட பார்க்க முடியாத விலை: Nokia 5310 ஜூன் 16 அறிமுகம்!

கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பது

கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பது

இதுகுறித்து ஆஸ்திரேலியா ஆய்வு நிறுவனம் கூறுகையில்., சீனா ஆதரவு கணக்குளின் நோக்கமானது வெளிநாட்டு வாழ் சீனாவை சேர்ந்தவர்கள் திறனை பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதன் முயற்சி என தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் ஆண்-ல் இருந்து சீனப் பெண்ணாக மாற்றம்

பங்களாதேஷ் ஆண்-ல் இருந்து சீனப் பெண்ணாக மாற்றம்

எடுத்துக்காட்டாக ஒரு டுவிட்டர் கணக்கு திடீரென அதன் புகைப்படத்தை பங்களாதேஷ் ஆண்-ல் இருந்து சீனப் பெண்ணாக மாற்றம் செய்து ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சீன மொழியில் டுவிட் செய்ய தொடங்குகிறது.

அமெரிக்காவுக்கு எதிரான கருத்துகள்

அமெரிக்காவுக்கு எதிரான கருத்துகள்

இந்த டுவிட்களின் முக்கிய நோக்கம் ஹாங்காங் எதிர்ப்பாளர்கள் வன்முறையாளர்களாக இருந்தன, மேலும் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துகள், குவோ பற்றிய குற்றச்சாட்டுகள், தைவான் தேர்தல், மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் ஒழிக்கு சீனா பாடுபட்டு வருகிறது போன்ற டுவிட்கள் ஆகும்.

டாப் ஹேஷ்டேக்குகளாக கொண்டுவர முயற்சி

டாப் ஹேஷ்டேக்குகளாக கொண்டுவர முயற்சி

அதேபோல் இதுபோன்ற கணக்குகள் முடக்கப்பட்டு வரும் சூழலிலும் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் மறுபயன்படுத்தப்பட்ட(அதாவது எடுத்துக்காட்டாக கூறியது போல்) கணக்குகள் மற்றும் புதிய கணக்குகள் மூலம் பிரச்சாரங்கள் தொடர்ந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பிட்ட விஷயங்களை டாப் ஹேஷ்டேக்குகளாக கொண்டுவந்து அவற்றை உயர்த்தி பிடிக்கும் பிரசார ஆபரேட்டகளாக்க அதிக டுவிட்கள் செய்து முயற்சி செய்து வருகின்றனர்.

ஜனவரி மாதத்திலேயே தொடக்கம்

ஜனவரி மாதத்திலேயே தொடக்கம்

இந்த கணக்குகள் பலவை ஜனவரி மாதத்திலேயே தொடங்கிப்பட்டிருக்கலாம் எனவும் அவை அனைத்தும் கொரோனா குறித்து பதிவுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டிருக்கின்றன எனவும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க சீனா பாடுபட்டு வருகிறது, ஹாங்காங் போராட்டம், அமெரிக்காவை விரோதிகளாக சித்தரிப்பது போன்ற டுவிட்களை பதிவு செய்து வருவதாகவும் ஸ்டான்ட்போர்டு இணைய ஆய்வக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக டுவிட்டர் நீக்கிய கணக்குகள்

முன்னதாக டுவிட்டர் நீக்கிய கணக்குகள்

முன்னதாக டுவிட்டர் ரஷ்ய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 1000 கணக்குகள், ஹாங்காங் அரசியல் தொடர்பாக சீனாவில் செயல்பாட்டில் இருந்த 1000 கணக்குகள், துருக்கி அரசுக்கு ஆதராக செயல்பட்டு வந்த 7340 டுவிட்டர்கள் கணக்குகளை நிறுவனம் நீக்கியிருந்தது.

Lonar Lake: பிங்க் நிறமாக மாறிய 50,000 ஆண்டு பழமையான லோனார் ஏரி! நிற மாற்றத்திற்கு இதான் காரணம்!Lonar Lake: பிங்க் நிறமாக மாறிய 50,000 ஆண்டு பழமையான லோனார் ஏரி! நிற மாற்றத்திற்கு இதான் காரணம்!

1,70,000-த்துக்கும் மேற்பட்ட கணக்குகள் நீக்கம்

1,70,000-த்துக்கும் மேற்பட்ட கணக்குகள் நீக்கம்

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக அரசியல் கருத்து பரப்புவது, சீனாவிற்கு சாதகமாக செய்திகளை உருவாக்கிவதற்கு முக்கிய நெட்வொர்க்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த 23750 கணக்குகளை கண்டறிந்ததாகவும், இந்த 23750 கணக்குகளும் டுவிட் செய்யும் போது அதை ரீடுவிட் செய்வதற்கென 1,50,000 கணக்கள் பயன்படுத்தி வந்ததை நிறுவன் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

source: theguardian.com

Best Mobiles in India

English summary
Twitter removed more than 170,000 accounts: tweet focused on covid-19, hongkong protest, US protest!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X