இனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.!
மேலும் பேஸ்புக்கை விட மேம்பட்ட அம்சங்களுடன் செய்தி இடல் வசதியை புகுத்த ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிவிட்டர் பக்கத்தில் தற்சமயம் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது, அதன்படி டிவிட்டர் நிறுவனம் அதன் பயனர்களின் டைம்லைனில் நிகழ்நேர செய்திகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் ஏற்கனவே பேஸ்புக் வலைதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பேஸ்புக்கை விட மேம்பட்ட அம்சங்களுடன் செய்தி இடல் வசதியை புகுத்த ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த புதிய அம்சம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர்
மேலும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் பயனர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களுக்கு விருப்பமான செய்திகளை
அவர்களின் கணக்கில் காட்சிப்படுத்தும் அம்சத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது என அந்நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளது.

புதிய வசதி
குறிப்பாக பயனர்கள் எவ்விதமான செய்தி வேண்டும் என்பதை தீர்மாணித்து கொள்ளலாம், என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புத்தம் புதிய வசதியை"Explore" எனும் புதிய தாவலையும் தனது வலைப்பக்கத்தில் அறிமுகம் செய்யும் அந்நிறுவனம்.

பயனர்களின் தகவல்கள்
இதற்கு முன்பு பேஸ்புக் பக்கத்தில் இருந்து பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை அடுத்து பாதுகாப்பு செயற்கூறுகளை அனைத்து சமூக வலைதளங்களும் கடைபிடித்து வருகின்றன. எனவே பயனர்களின் தகவல்களை பாதுகாக்க பல அம்சங்களை ட்விட்டர் மேம்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனம் ஒரு பயனாளிக்கும் இன்னொரு பயனாளிக்கும் அனுப்பப்படும் ரகசிய மெசேஜ்களை அனுப்பும் வசதியை முடித்து கொண்ட நிலையில் தற்போது இதன் அதிகாரபூர்வ செயலிகளில் ஒன்றான ஆண்ட்ராய்டு டிவி, ரோகு மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஆகியவற்றின் சேவைகளையும் நிறுத்த டுவிட்டர் முடிவு செய்துள்ளது. மிக குறைந்த பயனாளிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த வசதியை நிறுத்த போவதாக மேக் செயலி கூறியதை அடுத்து டுவிட்டரும் இந்த முடிவை எடுத்துள்ளது.

அப்டேட்
மேலும் டுவிட்டர் நிறுவனம் சர்வர் பக்கத்தில் இருந்து செய்யப்பட்டுள்ள புதிய அப்டேட் காரணமாக மூன்றாவது பார்ட்டியின் ஏபிஐ வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவையில்லாத செயலிகளான டுவிட்டரிஃபிக், டாலோன்ஸ் மற்றும் டுவிட்பாட் போன்றவற்றை டுவிட்டர் பயனாளிகள் இனி தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications