முதன்முதலில் எடிட் செய்த ட்வீட் இதுதான்.. Twitter இல் எடிட் ஆப்ஷன் ஆக்டிவேட் செய்வது எப்படி?

|

சமூகவலைதளங்களில் பிரதான ஒன்றாக இருக்கும் Twitter நிறுவனம், பயனர்களின் தேவையறிந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் பயனர்கள் அதிருப்தி நிலையில் தொய்வுடனே இருந்தனர். காரணம், இது எல்லாம் சரி நாங்க கேட்ட அந்த அம்சம் எங்கே என பயனர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அந்த அம்சத்தை இறுதியாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

எடிட் பட்டன் செயல்பாடு..

எடிட் பட்டன் செயல்பாடு..

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் முதல் அடிமட்ட உறுப்பினர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்த அம்சம் "Tweet Edit Button" ஆகும்.

ட்விட்டரில் நீண்ட காலமாக எதிர்பார்த்த எடிட் ஆப்ஷன் பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டரில் முதன்முதலாக எடிட் செய்த ட்வீட்டை நிறுவனம் தனது பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ட்விட்டர் பதிவிட்ட பதிவின் மூலம் அறிய முடிகிறது.

தயக்கத்துடன் அறிமுகமான அம்சம்

தயக்கத்துடன் அறிமுகமான அம்சம்

ட்விட்டர் பயனர்கள் பல ஆண்டுகளாக ட்வீட்களை திருத்தும் ஆப்ஷன் குறித்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் எடிட் ஆப்ஷன் வேண்டுமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பையும் நடத்தியது. இந்த அம்சம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ள காரணத்தால் ட்விட்டர் இதை அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டி வந்தது.

இந்த நிலையில், ட்விட்டர் சிறிய எண்ணிக்கையிலான பயனர்கள் மூலம் இந்த அம்சத்தை சோதனை செய்ய தொடங்கி, தற்போது ப்ளூ பயனர்களுக்கு கொண்டு வந்துள்ளது.

கடைசியாக எடிட் செய்த நேரம்

கடைசியாக எடிட் செய்த நேரம்

எடிட் செய்யப்பட்ட ட்வீட்டின் கீழ் முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்டது போல் பென்சில் ஐகான் காட்டப்படுகிறது. இதன்மூலம் இந்த ட்வீட் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

பென்சில் ஐகானுக்கு அருகில் Last Edited என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த ட்வீட் கடைசியாக எப்போது எடிட் செய்யப்பட்டது என்ற நேரத்தை அறிய முடியும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதில் Edit History என்ற விருப்பமும் காட்டப்படுகிறது.

30 நிமிட கால அவகாசம்

30 நிமிட கால அவகாசம்

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ட்வீட் திருத்தம் செய்வற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ட்வீட் பதிவிட்ட 30 நிமடங்களுக்குள் இதை திருத்த வேண்டும் என கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் ட்வீட்டில் உள்ள பிழையை திருத்தவோ அல்லது ஹேஷ்டேக்குகளை இணைக்கவோ எடிட் பட்டன் உதவும் என ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.

Edit History

Edit History

Last Edited என்ற விருப்பத்தை கிளிக் செய்யும் பட்சத்தில் Edit History காட்டப்படுகிறது. இதன்மூலம் முந்தைய ட்வீட் என்ன, எடிட் செய்யப்பட்ட திருத்தம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் இந்த எடிட் ஆப்ஷன் முறையாக கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. சரி, இதை யாருக்கெல்லாம் கிடைக்கும் எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள்

ட்விட்டர் எடிட் பட்டன் ஆப்ஷன் இன்னும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. எடிட் பட்டன் ஆப்ஷனை நிறுவனம் முதலில் தங்களது ஊழியர்களிடம் அறிமுகம் செய்து சோதித்து பார்த்தது.

இதையடுத்து ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியது. எனவே ட்விட்டர் எடிட் பட்டனை பயன்படுத்த பயனர்கள் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களாக இருக்க வேண்டும். ட்விட்டர் ப்ளூ சந்தா உறுப்பினராக மாறுவது எப்படி, கட்டணம் எவ்வளவு என்ற தகவலை பார்க்கலாம்.

ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டுமே

ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டுமே

ட்விட்டர் ப்ளூ பயன்பாடு என்றால் என்னவென்று கேள்வி வரலாம், ட்விட்டர் ப்ளூ என்பது நிறுவனத்தின் ப்ரீமியம் சந்தா சேவையாகும்.

ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு நிறுவனம் கூடுதல் செயல்பாடு மற்றும் வரவிருக்கும் அம்சங்களுக்கான அணுகலை வழங்குகிறது.

எடிட் பட்டனை பயன்படுத்த ட்விட்டர் ப்ளூ சந்தாதாரராக மாற வேண்டும்.

இந்திய பயனர்களுக்கு கிடைக்குமா?

இந்திய பயனர்களுக்கு கிடைக்குமா?

இதற்கு மாதம் $4.99 செலுத்த வேண்டும். Twitter Blue சேவை இன்னும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை, இந்த சந்தா சலுகையானது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டுமே கிடைக்கிறது.இந்திய பயனர்கள் எடிட் பட்டனை அணுகுவதற்கு சிறது காலம் காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Twitter posted the firstever edited tweet: How to Activate Edit Button?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X