280-இல் இருந்து 2500-க்கு நீளும் Twitter! ஆட்டத்தை ஆரம்பிக்கும் எலான் மஸ்க்?

|

ட்விட்டர் நிறுவனத்தை பற்றி எந்த செய்தி வந்தாலும் கொஞ்சம் திக்கென்று தான் இருக்கிறது! இருக்காதா பின்ன? ட்விட்டர் நிறுவனத்திற்குள் எலான் மஸ்க் அல்லவா இருக்கிறார்!

இந்நிலைப்பாட்டில் தான், ட்விட்டர் தளத்திற்கு - மிகவும் சுவாரசியமான - ஒரு புதிய அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் எலான் மஸ்க்கிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? அதென்ன அப்டேட்? அதன் நன்மைகள் என்ன? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

ஒருவழியாக வந்து சேர்ந்த - ட்விட்டர் நோட்ஸ்!

ஒருவழியாக வந்து சேர்ந்த - ட்விட்டர் நோட்ஸ்!

ட்விட்டர் இன்க் (Twitter Inc) நிறுவனம், கடந்த புதன்கிழமையன்று (அதாவது ஜூன்.22 அன்று) 'நோட்ஸ்' (Notes) எனப்படும் ஒரு புதிய அம்சத்தை 'டெஸ்டிங்' செய்து வருவதாக அறிவித்தது.

இந்த அம்சம், சற்றே நீளமான போஸ்ட்களை அதாவது கட்டுரை போன்ற ரைட்-அப்களை (Essay-like write-ups) ட்விட்டர் தளத்தில் எழுத அனுமதிக்குமாம்.

280-இல் இருந்து 2500-க்கு!

280-இல் இருந்து 2500-க்கு!

நினைவூட்டும் வண்ணம் தற்போது வரையலாக ஒரு ட்விட்டர் போஸ்ட்டில் 280 எழுத்துகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனால், இனிமேல் 280 கேரக்டர்ஸ் அல்ல 2500 வார்தைகள் (Words) வரை எழுதலாம்!

கூடுதல் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த நோட்ஸ் அம்சம் வழியாக எழுதப்படும் கட்டுரைகளில் GIF-கள் மற்றும் புகைப்படங்களை சேர்த்தல் மற்றும் சில அம்சங்களும் அணுக கிடைக்குமாம். மேலும் இது ட்விட்டரிலும், அதற்கு வெளியேயும் (லிங்க் வடிவில்) படிக்கக்கூடியதாகவும் இருக்குமாம்.

எல்லாவற்றை விடவும் முக்கியமாக, யூசர்கள் தங்கள் நோட்ஸ்-களை வெளியிட்ட பிறகு அவற்றை எடிட் செய்யவும் முடியுமாம். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த 'நோட்ஸ்' அம்சம் ட்விட்டர் ரைட்டின் (Twitter Write) ஒரு பகுதியாக இருக்கும்.

அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?

இதில் எலான் மஸ்க்கின் பங்களிப்பு உள்ளதா?

இதில் எலான் மஸ்க்கின் பங்களிப்பு உள்ளதா?

இல்லவே இல்லை! ஏனெனில் இந்த அம்சம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆக இதற்கும் எலான் மஸ்க்கிற்கும் சம்பந்தம் இல்லை என்பது வெளிப்படை!

மேலும் ட்விட்டர் நோட்ஸ் அம்சமானது, ஒரு சிறிய எழுத்தாளர்கள் குழுவை கொண்டு சோதிக்கப்படுகிறது மற்றும் இது எப்போது பரந்த அளவிலான வெளியீட்டை சந்திக்கும் என்று, அதாவது எப்போது அனைத்து யூசர்களுக்கும் அணுக கிடைக்கும் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை.

எங்கெல்லாம் 'டெஸ்ட்' செய்யப்படுகிறது?

எங்கெல்லாம் 'டெஸ்ட்' செய்யப்படுகிறது?

ஏற்கனவே பல எழுத்தாளர்கள் ட்விட்டர் பிளாட்பார்மில் தங்களது நோட்ஸ்-களை பப்ளிஷ் செய்துள்ளனர். அவைகள் ட்வீட்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என ஒரு கலவையாக, ஒரு நீண்ட வடிவிலான போஸ்ட்களாக தோன்றுகின்றன.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீளவுள்ள இந்த சோதனையில் கனடா, கானா, யு.கே மற்றும் யு.எஸ் போன்ற நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்களின் சிறிய குழு பணியாற்றும்.

ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!

லிங்க்-ஐ கிளிக் செய்தால் போதும்!

லிங்க்-ஐ கிளிக் செய்தால் போதும்!

இந்த புதிய அம்சம் யூசர்களை, ட்விட்டர் சுற்றுச்சூழல் அமைப்பில் (Twitter eco-system) வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது வாசகர்கள் ஒரு தலைப்பைப் பார்க்க முடியும் மற்றும் குறிப்பிட்ட லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம் நீளமான நோட்ஸ்-ஐ அணுக முடியும்.

ஆரம்ப நாட்களில் இருந்தே, எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும், கவனிக்கப்படவும், பிற படைப்புகளை படிக்கவும், அது தொடர்பான உரையாடலை உருவாக்கவும் ட்விட்டரை சார்ந்துள்ளனர். இதற்கிடையில் ட்விட்டர் அறிவித்துள்ள நோட்ஸ் அம்சம் ஆனது, விடுபட்ட சில பகுதியை நிரப்பும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நோட்ஸ் வந்தாச்சு.. அடுத்தது 'எடிட்' பட்டன் தானே?

நோட்ஸ் வந்தாச்சு.. அடுத்தது 'எடிட்' பட்டன் தானே?

"ட்வீட்கள் சிறியதாக இருக்கும் வரை தான் நன்றாக இருக்கும். அதுவே மிகவும் நீளமாகி விட்டால், கண்டிப்பாக படிப்பதற்கு சலிப்பாகத்தான் இருக்கும்!" என்கிற குரல்களையும் ஆங்காங்கே கேட்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் 2500 வார்த்தைகளை சிலர் படிக்கத் திணறலாம்!

எலோன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை "கையகப்படுத்தில்" இருந்து அது செல்லும் மற்றும் செல்லப்போகும் திசை குறித்த கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் வந்துள்ள நோட்ஸ் அம்சம், ட்விட்டரின் வணிக வாய்ப்புகளை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் நோட்ஸ் அம்சத்தில் 'எடிட்' விருப்பம் அணுக கிடைப்பதால், அடுத்தது ட்வீட்களுக்கான எடிட் பட்டன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம், இந்நிறுவனம், எடிட் பட்டனில் வேலை செய்வதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்து இருந்தது. அதவாது, எடிட் பட்டன் போன்ற அம்சங்கள் மிகவும் அவசியம் என்று பேசிக்கொண்டு இருந்த எலான் மஸ்க் நிறுவனத்தின் ஒரு பெரிய பங்கை வாங்கிய நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியானது!

இருப்பினும் நடக்கும் நிகழ்வுகள், எலான் மஸ்க் உடன் தொடர்பில்லாதவை என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. அப்பிடின்னு சொல்றாங்க.. நம்பித்தானே ஆகணும்!

Best Mobiles in India

English summary
Twitter Notes feature allows you to write a blog essay using 2500 words add GIFs Photos in a tweet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X