ட்விட்டரில் Happy Diwali ஈமோஜி அறிமுகம்.! ஆக்டிவேட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் அனைத்தும் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. தற்சமயம் ட்விட்டர் இந்தியா அதன் ஹேப்பி தீபாவளி ஈமோஜியை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக லைட்ஸ் அவுட் டார்க் மோட்-ஐ தேர்வுசெய்யும்போது அதன் சுடர் விட்டு பிரகாசிப்பது போன்று காட்சியளிக்கிறது. மேலும் இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ட்விட்டர் பயனர்கள் #LightUpALife, #EkZindagiKaroRoshan, #HappyDiwali, #HappyDeepavali, #Diwali, #Deepavali போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தும் போது இந்த புதிய #HappyDiwali ஈமோஜியை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பயனர்கள் பிராந்திய இந்திய மொழிகாளான தமிழ், பெங்காலி, ஒடியா, குஜராத், இந்தி போன்ற மொழிகளில் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தும்போது இதை ஆக்டிவேட் செய்யலாம். பின்பு ட்விட்டர் இந்தியா அதனுடைய புதிய 'தியா' ஈமோஜியுடன், ஒரு நேர்மறையான மாற்றததை செய்ய மக்களை ஊக்குவிக்க எண்ணுகிறது மற்றும் #LightUpALife என்பதின் மூலம் சிந்தனைமிக்க வார்த்தைகள் மற்றும் செயல்களை ஊக்குவிக்கிறது.

இந்தியாவின் ஹேப்பி தீபாவளி ஈமோஜியை செயல்படுத்த பயன்படுத்தக்கூடிய வேறு சில ஹேஷ்டேக்குகள் இதுதான், #தீபாவளிநல்வாழ்த்துக்கள், #दिवाली, #दीपावली, #शुभदीपावली, #શુભદિવાળી, #शुभदीपावळी, #শুভদীপাবলি, #ਦਿਵਾਲੀਮੁਬਾਰਕ, #ଶୁଭ ଦୀପାବଳି, #దీపావళిశుభాకాంక్షలు, #ದೀಪಾವಳಿಹಬ್ಬದಶುಭಾಷಯಗಳು, #ദീപാവലിആശംസകള്.

அண்மையில் பலர் ட்விட்டரில் மற்றவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள், மேலும் உண்மையான அர்த்தமுள்ள மற்றம் நேர்மறையான உரையாடல்களை இயக்குகிறார்கள். மேலும் இந்த தீபாவளி, மக்கள் கொண்டாட்டத்தின் வழியாக ஒன்று சேருவதால் அது பிஸிக்கலாகவோ அல்லது விர்ச்சுவலாகவோ, புதிய ஈமோஜிகளுடன், நேர்மறையான உரையாடல்கள் மற்றும் கருணைச் செயல்களுடன் தொடர்ந்து #லைட்ஸ்ஆப்ஏலைஃப்-ஐ தொடர அவர்களை ஊக்குவிக்க விரும்புகிறோம், என்று ட்விட்டர் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி ஒரு அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2020-ம் ஆண்டு அனைவருக்கும் ஒரு கடினமான சவாலகா இருந்து வருகிறது. இருந்தபோதிலும் ட்விட்டர் வழியாக மக்கள் ஒரு சமூககமாக ஒன்றிணைந்து தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதை காணமுடிகிறது.


Click it and Unblock the Notifications