இருக்க விவகாரம் போதாதா?- டுவிட்டருக்கு ரூ,1,100 கோடி அபராதம்: உடனே மஸ்க் சொன்ன பதில்!

|

பயனர் தனியுரிமை மீறல் காரணமாக $150 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும் என டுவிட்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, நிறுவனம் தனது பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை விளம்பர நோக்கங்களுக்காக ஏமாற்றி பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டது.

சுமார் 229 மில்லியன் பயனர்களை கொண்ட டுவிட்டர்

சுமார் 229 மில்லியன் பயனர்களை கொண்ட டுவிட்டர்

டுவிட்டர் நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 229 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான தங்கள் பயனர்களின் போன் நம்பர் உள்ளிட்ட தகவலை சேகரித்து வந்ததாகவும் அதை விளம்பர நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. டுவிட்டர் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு அறிவித்த விதிமுறைகளை மீறியதாக அமெரிக்காவின் ஃபெடரல் டிரேட் கமிஷன் இதுகுறித்து புகார் அளித்திருந்தது. இது டுவிட்டர் வருவாயை அதிகரித்ததாகவும் இதன்மூலம் 140 மில்லியன் பயனர்கள் பாதிப்புக்கு உள்ளானர்.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி

மேலும் இந்த சிக்கலானது 2019-ல் தீர்க்கப்பட்டது எனவும் டுவிட்டரை பயன்படுத்தும் நபர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டுவிட்டரின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கீரன் குறிப்பிட்டுள்ளார். பயனர்கள் தரவை பாதுகாப்பதற்கும் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும் ஃபெடரல் டிரேட் கமிஷனுடன் இணைந்து இயங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ரூ.1,100 கோடி அபராதம் விதித்து உத்தரவு

ரூ.1,100 கோடி அபராதம் விதித்து உத்தரவு

இந்த நிலையில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.1,100 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஃபெடரல் கமிஷன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பயனர்களின் தரவை பாதுகாக்க புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த புகாரை கலிபோர்னியா மாகாண நீதிமன்றம் ஊர்ஜிதப்படுத்தும் பட்சத்தில் டுவிட்டர் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

வேறு எது உண்மையல்ல என மஸ்க் டுவிட்

டுவிட்டர் இங்கே உண்மையாக இல்லாவிட்டால் வேறு எது உண்மையல்ல என மஸ்க் டுவிட் செய்துள்ளார். விளம்பரத்தை விட சந்தாக்கள் செலுத்துவதையே அதிகம் நம்பியிருக்கும் நிறுவனமாக டுவிட்டரை மாற்றுவது குறித்து தனது முந்தைய கருத்தையும் அவர் வலியுறுத்தினர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்று நிறுவனங்களில் நிறுவனரான எலான் மஸ்க், சமீபத்தில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது உறுதி செய்யப்பட்டது.

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள்

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள்

டுவிட்டரில் 5 சதவீதம் மட்டுமே ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான முறையான ஆவணங்களை மஸ்க் கேட்டு மஸ்க் வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து மஸ்க் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். டுவிட்டர் தளத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவான ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் தற்போது வரை முறையாக சமர்பிக்கப்படவில்லை. குறைந்த விலையில் ஒப்பந்தம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. ஒருவர் குறிப்பிடுவதை விட மோசமான ஒன்றுக்கு நீங்கள் அதே விலையை கொடுத்து வாங்க முடியாது என குறிப்பிட்டிருக்கிறார்.

எலான் மஸ்க் டுவிட்டரில் மிக பிரபலமானவர்

எலான் மஸ்க் டுவிட்டரில் மிக பிரபலமானவர்

எலான் மஸ்க் டுவிட்டரில் மிக பிரபலமானவர். எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே டுவிட்டரின் 9.2% பங்குகளை மஸ்க் தன் கைவசம் வைத்திருந்தார். மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் டுவிட்டரின் ஆதார ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படாது என மஸ்க் அறிவிப்பு

ஒப்பந்தம் நிறைவேற்றப்படாது என மஸ்க் அறிவிப்பு

இதில், டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டுவிட்டரில் மஸ்க்கை பின்தொடர்பவர்களில் பாதி பேர் போலியானவர்கள் சமீபத்திய தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் மஸ்க் டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இதுவரை பார்க்கவில்லை என குறிப்பிட்டார். முறையான ஆவணங்கள் சமர்பிக்கும் வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்படாது என மஸ்க் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Best Mobiles in India

English summary
Twitter Get $150 million Fine Due to Breaches of User Privacy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X