Home
News

எலான் மஸ்க் நீங்க தெரியாம சிங்கத்தை தட்டி எழுப்பிடீங்க! BlueSky இனி Twitter-ஐ வேட்டையாடும் - ஜாக் டோர்சி!

எலான் மஸ்க் கைகளுக்கு டிவிட்டர் நிறுவனம் கைமாறியதில் இருந்து, டிவிட்டர் தலைகீழாக மாறிவிட்டது. பல டிவிட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பல பயனர் பக்கங்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து பல சர்ச்சைக்குள் டிவிட்டர் சிக்கி சின்னாபின்னம் ஆனது. இது நாம் அனைவருக்குமே தெரியும்.

உண்மையில், டிவிட்டர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமானதில்லை என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். டிவிட்டர் சமூக வலைப்பக்கத்தை ஜாக் டோர்ஸி என்ற நபர் தான் முதன் முதலில் உருவாக்கினார். இவர் ஐடியா செய்து உருவாக்கிய தளம் தான் டிவிட்டர். இதில் எலான் மஸ்க் ஒரு பயனராக மட்டுமே இருந்து வந்தார். திடீரென அவர் காட்டில் பண மழை பொழியவும், டிவிட்டரின் சொந்தக்காரராக மாறிவிட்டார்.

எலான் மஸ்க் நீங்க தெரியாம சிங்கத்தை தட்டி எழுப்பிடீங்க! வேட்டை ஆரம்பம்

தூங்கிய சிங்கத்தை தட்டி எழுப்பிடீங்க மிஸ்டர் எலான் மஸ்க்.!

இவரின் கைகளுக்கு, டிவிட்டர் சென்ற பிறகு பல மாற்றங்களைப் பெறத் துவங்கியது. இதைச் சிலர் ஏற்றுக்கொண்டாலும். இன்னும் பலரது மனது ஏற்க தவறுகிறது. இந்த குளறுபடிக்கு நடுவில், ஒரு புதிய சமூக ஊடக பயன்பாடு இப்போது களத்தில் இறங்கியுள்ளது. இது புளூஸ்கி (Bluesky) என்று அழைக்கப்படுகிறது. இது ட்விட்டரின் நிறுவனர் மற்றும் முன்னால் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சியால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயன்று, ப்ளூஸ்கை அதன் பீட்டா சோதனையை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், புளூஸ்கி ஒரு "பரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல்" என்று உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 இல், இது ட்விட்டரின் நீட்டிக்கப்பட்ட கையாக இருந்தது, ஆனால் கடந்த ஆண்டு ஒரு சுயாதீன நிறுவனமாக மாறியது என்பது கவனிக்கத்தக்கது.

ப்ளூஸ்கை பற்றி 2019 இல் கூறப்பட்டதாவது, "இந்த திட்டத்தின் வெற்றிக்கு எங்கள் சுதந்திரம் முக்கியம் என்பதை ட்விட்டர் மற்றும் புளூஸ்கை இருவரும் உணர்ந்துள்ளனர். அதனால் தான், நாங்கள் பரந்த சாத்தியமான நலன்களுக்குச் சேவை செய்வதை உறுதிசெய்ய ஒரு சுயாதீன நிறுவனத்தை நிறுவினோம்." என்று முன்பு ஜாக் டோர்ஸியால் கூறப்பட்டது. உண்மையில், BlueSky என்றால் என்ன? இது எத்தகையது?

எலான் மஸ்க் நீங்க தெரியாம சிங்கத்தை தட்டி எழுப்பிடீங்க! வேட்டை ஆரம்பம்

Bluesky பயன்படுத்தி பார்க்க உங்களுக்கும் ஆர்வமா? அப்போ இதை செய்யுங்க.!

நீங்கள் ப்ளூஸ்கையை அணுக விரும்பினால், நீங்கள் இணையதளம் வழியாகக் காத்திருப்போர் பட்டியலில் முதலில் சேர வேண்டும். பின்னர், ஆப்ஸின் பீட்டா பதிப்பு ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இப்போதைக்கு இது ஒரு இன்வைட் ஒன்லி அம்சமாகும். இன்னும் சிறிய காலத்திற்குப் பிறகு அனைவரின் பொது பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.

ப்ளூஸ்ஸை எத்தகையது? இது எப்படி செயல்படுகிறது? இது எப்படியான தளம் என்றால், இது டிவிட்டரைப் போன்றது தான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளது. "என்ன விஷயம்?" என்பதற்குப் பதிலாக "என்ன நடக்கிறது" என்பதை நமக்கு தெரியப்படுத்தும் தளமாக ப்ளூஸ்கை இருக்கப்போகிறதாம். எழுத்து வரம்பு 256 எழுத்துகள் மற்றும் படங்களைச் சேர்ப்பதற்கான எளிய விருப்பம் இதில் உள்ளது.

டிவிட்டரைப் போலவே, "போஸ்ட்ஸ்" மற்றும் "போஸ்டஸ் மற்றும் ரிப்ளை" வெவ்வேறு ஊட்டங்களுடன் முகப்பு காலவரிசையில் புதுப்பிப்புகளைப் பார்க்கப் பயனர்களை இது அனுமதிக்கிறது. கொஞ்சம் உற்று நோக்கினால், இது ட்விட்டர் போல் தெரிகிறது. இது அப்படித் தான் இருக்கிறது. விரைவில் இது டிவிட்டருக்கு போட்டியான தளமாக மாறப்போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சரி, இந்த புதிய ப்ளூஸ்கை தளத்தை நீங்களும் ட்ரை செய்து பார்க்க விரும்புகிறீர்களா? உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Twitter Founder Jack Dorsey Launched Bluesky Social Media Platform Now Available On App Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X