தற்போதுவரை டுவிட்டர் இதை செய்யவில்லை: குற்றச்சாட்டு வைக்கும் மத்திய அரசு!
சமூகவலைதளங்களுக்கு என மத்திய அரசு புதிய விதிகளை விதித்துள்ளது. இந்த விதிகளுக்கும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் சமூகவலைதளங்கள் பிப்ரவரி 25முதல் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து அதை நிறைவேற்ற 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

அதிகாரிகளை நியமிக்கவில்லை
இருப்பினும் கடந்த 1 ஆம் தேதி முதல் விதிகளை பின்பற்றவில்லை எனவும் அதிகாரிகளை நியமிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க மூன்று மாதங்கள் வழங்கப்பட்டதாகவும் அதன்பின்பும் நிலத்தின் சட்டத்தை மீறுவதாகவும் டுவிட்டர் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி
அண்மையில் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரை நியமித்தது. இந்த நிலையில் இவர் நியமித்த ஓரிரு நாட்களில் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப சட்டங்களை பின்புற்றுவதில் டுவிட்டருக்கும் மத்திய அரசுக்கும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்
இதற்கிடையில் டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரியாக தர்மேந்தரா சத்தூர் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. டுவிட்டர் இணையதளத்தில் இவரது பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் ஒன்று உள்ளூரில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதாகும். இந்த விதிகளை நியமிப்பத்தில் மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திரா சத்தூர் நியமிக்கப்பட்டு இருந்தது டுவிட்டர் நிறுவனம் புதிய விதிகளை பின்பற்றத் தொடங்கும் நடவடிக்கையாக இருந்தது.

டுவிட்டர் தொடர்ந்து அடுத்தடுத்த சிக்கல்
இந்த நிலையில் புதிய குறை தீர்க்கும் அதிகாரி தர்மேந்திரா சத்தூர் பதவியேற்ற ஓரிரு நாளில் பதவி விலகியருப்பதாக வெளியான தகவல் டுவிட்டர் தொடர்ந்து அடுத்தடுத்த சிக்கலை சந்தித்து வருகிறது. சுமார் 50 லட்சம் பயனர்கள் கொண்ட இந்தியாவில் பயன்பாட்டு புகார்களை பெறுவதற்கு அதிகாரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என முடிவு
இந்தியாவின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு டுவிட்டர் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் டுவிட்டர் இந்தியாவின் சட்ட ஆலோசகர் ஷாகுப்தா மற்றும் ஆயுஷி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் டுவிட்டர் நிறுவனம் தனக்கென வரையறுக்கப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாகவும் தனிநபர் கருத்து சுதந்திரம் உரிமைகளை மதித்து செயல்படுவதாகவும் விளக்கம் அளித்தனர்.


Click it and Unblock the Notifications