அவ்ளோ தான்.. Twitter-ஐ மறந்துடுங்க.. இனிமேல் Bluesky தான்! என்னது அது?
கடந்த வாரத்தில் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி உள்ளார்.

இதுதவிர ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இதுதவிர பணியைச் சரியான காலக்கெடுவுக்குள் செய்து முடிக்காத ஊழியர்களைக் கூட எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ய முடிவும் செய்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் கட்டணம்
அதேபோல் ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டரின் முன்னாள் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, டிவிட்டருக்குப்
பதிலாக புதிய சமூக தளத்தைச் சோதனை செய்வதாகத் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜாக் டோர்சி
அதாவது ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தனது bluesky எனும் புதிய சமூக வலைதளத்தின் பீட்டா சோனை நடைபெற்று வருவதாகவும், இதற்கு சோதனையளர்களை தேடுவதாகவும் ஜாக் டோர்சி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூஸ்கை
இந்த bluesky எனும் தளத்தை கடந்த 2019-இல் உருவாக்கத் தொடங்கினார். பின்னர் கடந்த நவம்பர் 2021-இல் அவர் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விட்டு விலகி முழுமையாக இந்த புதிய தளத்தை உருவாக்கும் பணியில் இறங்கினார். குறிப்பாக ப்ளூஸ்கை
என்ற சொல் பரந்த-விரிந்த வாய்ப்பை எடுத்துக்காட்டுகிறது. கண்டிப்பாக இந்த தளம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இருக்கும் சமூக வலைத்தளங்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் ப்ளூஸ்கை வெளிவரும் என்றும், அதன்பின்பு இது பல நிறுவனங்களுக்குப் போட்டியாக இருக்கும் என்றும் ஜாக் கடந்த வாரம் தனது ட்விட்டரில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை
அதேபோல் ப்ளூஸ்கை தளம் ஆனது பல்வேறு பாதுகாப்பான வசதிகளுடன் வெளிவரும். பின்பு இதை மேம்படுத்த நெறிமுறை சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக ப்ளூஸ்கை தளம் அறிமுகமானால் ட்விட்டருக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜாக் டோர்சி இந்த ப்ளூஸ்கை தளத்தை அதிகம் நம்புகிறார். ஆனாலும் சோதனை முடிந்து சந்தைக்கு வரும் போது தான் உண்மை நிலைமை தெரியவரும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications