Twitter Circle அறிமுகம்: கேட்டது ஒன்னு கொடுத்தது ஒன்னு., இனி உங்க ட்வீட் உங்க உரிமை!

|

ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்களுக்கு விருப்பமான வரையறுக்கப்பட்ட பயனர்களுடன் மட்டும் உங்கள் பதிவுகளை பகிர அனுமதிக்கிறது. இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் உள்ளது போன்றே செயல்படுகிறது.

இன்ஸ்டா பயன்பாட்டில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சில பயனர்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு குழுவை உருவாக்கிக் கொள்ளலாம். அதேபோன்று தான் ட்விட்டர் சர்க்கிள் பயன்பாடும் செயல்படுகிறது.

ட்விட்டர் சர்க்கிள் அம்சம்

ட்விட்டர் சர்க்கிள் அம்சம்

புதிய ட்விட்டர் சர்க்கிள் அம்சமானது பயனர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் அம்சமாகும். இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் தனியுரிமை தகவல் பரிமாற்றத்தை கையாளலாம்.

ட்விட்டர் சர்க்கிள் அம்சத்தின் மூலம் பயனர்கள் பிரத்யேகமாக ஒரு வட்டாரத்தை உருவாக்கி, தங்கள் பதிவுகளை அவர்களுக்கு மட்டும் காண்பிக்கச் செய்யலாம்.

இந்த குழுவில் 150 நபர்கள் வரை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழமான தொடர்புகளை ஏற்படுத்த உதவும்

ஆழமான தொடர்புகளை ஏற்படுத்த உதவும்

குறிப்பிட்ட ட்வீட்கள் இந்த குழுவில் மட்டும் பிரத்யேகமாக பகிரலாம். அப்படி நீங்கள் பகிரும் ட்வீட்கள் உருவாக்கப்பட்ட குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கவும், பதிலளிக்கவும், தொடர்பு கொள்ளவும் முடியும்.

உங்களது நெருக்கமான பின்தொடர்பவர்களுடன் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்த இந்த அம்சம் உங்களுக்கு உதவும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

பிரத்யேக ட்வீட் என்பதை எப்படி அறிவது?

பிரத்யேக ட்வீட் என்பதை எப்படி அறிவது?

புதிய ட்விட்டர் சர்க்கிள் அம்சமானது தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிரத்யேக ட்வீட் என்பதை எப்படி அறிவது என்ற கேள்வி வரலாம்?

உங்கள் சர்க்கிளில் உள்ள குழுவிற்கு அனுப்பப்பட்ட ட்வீட்களின் கீழ் பச்சை நிற பேட்ஜ் காட்டப்படும்.

ட்விட்டர் சர்க்கிள் அம்சம்

ட்விட்டர் சர்க்கிள் அம்சம்

ட்விட்டர் சர்க்கிள் அம்சமானது மே 2022 முதல் குறிப்பிட்ட iOS, Android பயனர்களுக்கு கிடைத்து வந்தது. இந்த அம்சம் வெற்றிகரமாக செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்குமானதாக மாற்றப்பட்டு இருக்கிறது.

ட்விட்டரில் இந்த அம்சம் ட்விட்டர் பிரியர்களுக்கு பேருதவியாகவும் தங்களுக்கு நெருக்கமான பின்தொடர்பவர்களிடும் மிகவும் ஆழமான நட்புறவை ஏற்படுத்த உதவியாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

ட்விட்டர் சர்க்கிள் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

ட்விட்டர் சர்க்கிள் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

ட்விட்டர் சர்க்கிள் அம்சத்தை பயனர்கள் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

Profile தேர்வுக்குள் சென்று compose tweet என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இதில் பதிவிட வேண்டிய கருத்துகளை டைப் செய்துவிட்ட ட்வீட் செய்வதற்கு முன்னதாக பார்வையாளர்களின் பட்டன் என்ற விருப்பம் காட்டப்படும் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

அதை கிளிக் செய்வதன் மூலம் புதிய சர்க்கிள் என்ற விருப்பம் காட்டப்படும். இதை கிளிக் செய்து விருப்பமான நபர்களை தேர்ந்தெடுத்து உங்கள் சர்க்கிளை உருவாக்கலாம்.

இப்படி பதிவிடப்படும் ட்வீட்களின் கீழ் பச்சை நிற பேட்ஜ் காட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கேட்டது ஒன்னு கொடுத்தது ஒன்னு..

கேட்டது ஒன்னு கொடுத்தது ஒன்னு..

ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் சர்க்கிள் என்ற அம்சத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக ட்விட்டர் பயனர்கள் எதிர்பார்க்கப்படும் அம்சம் "ட்வீட் எடிட்" ஆகும்.

ட்விட்டர் பயனர் ஒரு ட்வீட்டை பதிவிட்டால் அதை திருத்த முடியாது. எனவே அதை டெலிட் செய்ய வேண்டும் என்பது மட்டுமே ஒரே வழி.

எனவே ட்விட்டரில் எடிட் அம்சம் வந்துவிடாதா என அதன் பயனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அம்சம் தற்போது வரை சோதனையில் தான் இருக்கிறது.

ட்விட்டர் ப்ளூ பயன்பாடு

ட்விட்டர் ப்ளூ பயன்பாடு

ட்விட்டர் எடிட் அம்சம் ட்விட்டர் ப்ளூ பயன்பாட்டில் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த பயன்பாடு பயன்படுத்தத் தொடங்கிய குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டணம் கட்டவேண்டியது இருக்கும் என கூறப்படுகிறது.

பாதிப்பு இல்லாமல் எடிட் செய்யலாம்

பாதிப்பு இல்லாமல் எடிட் செய்யலாம்

ட்விட்டரின் சந்தா சேவை தளம் தான் ட்விட்டர் ப்ளூ ஆகும். ட்வீட் எடிட் அம்சம் தற்போது சோதனையில் இருக்கிறது.

இந்த அம்சம் அறிமுகமாகும் பட்சத்தில் உங்கள் ட்வீட் பெறும் லைக்குகள், ரீட்வீட்கள் உள்ளிட்டவை பாதிக்காமல் ட்வீட்டில் உள்ள பிழையை சரி செய்யலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Twitter Circle Feature Launched by Twitter: Its Allow to Make Private Groups

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X