காபி ஆர்டர் எடுத்து சர்வ் செய்யும் "Twitter CEO": நீங்க நம்பலனாலும் அதான் நிஜம்!

|

மைக்ரோ-பிளாக்கிங் தளமான டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பராக் அகர்வால் காபி ஆர்டர் எடுப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் வாங்குவது உறுதியானது. இதற்கான ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கினால் தற்போதைய சிஇஓ பராக் அகர்வால்-ன் பதவி பறிபோகுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து வருகிறது.

டிவிட்டர் நிறுவனத்தின் CEO யார்?

டிவிட்டர் நிறுவனத்தின் CEO யார்?

ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய பராக் அகர்வால் டிவிட்டரின் மேம்பாட்டுக்காக மிக முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆக செயல்பட்டு வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் ஐஐடி பாம்பேயில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பி-டெக் படித்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தவர்.

காபி ஆர்டர் எடுக்கும் டிவிட்டர் சிஇஓ

காபி ஆர்டர் எடுக்கும் டிவிட்டர் சிஇஓ

இந்த நிலையில் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் காபி ஆர்டர் எடுப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் பெரிதளவு வைரலாகி வருகிறது. ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) காபி ஆர்டர் எடுத்து பரிமாறுவது என்பது சாதாரண நிகழ்வு அல்ல. டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் காபி ஆர்டர் எடுக்கும் புகைப்படத்துக்கான விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்.

ஊழியர்களை நேரில் சந்தித்து மேம்பாடு குறித்து விவாதம்

ஊழியர்களை நேரில் சந்தித்து மேம்பாடு குறித்து விவாதம்

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சிஇஓ பராக் அகர்வால் டிவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி டிவிட்டர் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து தங்களது ஊழியர்களை நேரில் சந்தித்து விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக பராக் அகர்வாக் பிரிட்டனில் உள்ள அலுவலகத்தில் தங்களது ஊழியர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார்.

காபி ஆர்டர் எடுத்து பரிமாறும் பணி

காபி ஆர்டர் எடுத்து பரிமாறும் பணி

கடந்த வாரம் பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தின் லண்டன் அலுவலகத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஊழியர்களுக்கு பராக் அகர்வால் காபி ஆர்டர் எடுத்து பரிமாறும் வேலையை செய்தார். அதோடு இங்கிலாந்தின் டிவிட்டர் நிர்வாக இயக்கனரான தாரா நாசாரும், டிவிட்டர் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் ஆகியோரும் பராக் அகர்வாலுடன் தங்களது ஊழியர்களுக்கு பிஸ்கட் மற்றும் காபி பரிமாறினர்.

அனைத்து உயர் அதிகாரிகளும் சேவை

டிவிட்டர் CEO, MD மற்றும் CFO ஆகியோர் இணைந்து தங்களது ஊழியர்களுக்கு காபி பரிமாறிய செயல் பலரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்த புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பராக் அகர்வால் அருகில் "அமெரிக்கானோ, கப்பச்சீனோ, சாய் லட்டு, எஸ்பிரெசோ, பிளாட் ஒயிட், பராக் ஸ்பெஷல் மற்றும் நெட்டின் குக்கீஸ் என கவுண்டரில் போர்ட் வைக்கப்பட்டுள்ளது". இந்த புகைப்படத்தை டிவிட்டர் ஊழியர்கள் தங்களது சமூகவலைதள கணக்கில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர்.

மகிழ்ச்சியோடு சமூகவலைதளங்களில் பதிவு

அதன்படி ரெபேக்கா என்ற பெண் தனது டிவிட்டர் கணக்கில் மூன்று படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் டிவிட்டர் சிஇஓ, நெட் செகல் ஆகியோர் கவுண்டரில் காபி பரிமாறுகின்றனர். அந்த சமயத்தில் ஊழியர்கள் தங்கள் ஆர்டர்களை பெற வரிசையில் நிற்கிறார்கள்.

வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பேன்: பராக் அகர்வால்

வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பேன்: பராக் அகர்வால்

முன்னதாக டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால், டுவிட்டரில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அறிவித்தார். இதன் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதற்கு பராக் அகர்வால் விளக்கமும் அளித்தார். அதில், கடந்த சில வாரங்களில் நிறைய நடந்திருக்கிறது. இதற்கு தற்போது பகிரங்கமாக விளக்கமளிக்கிறேன். டுவிட்டர் கையகப்படுத்தப்பட்டால் ஏற்படும் மாற்றம் குறித்து அறிவேன், அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். டுவிட்டருக்கு எது சரியோ அதை செய்வதில் தான் என் எண்ணம் இருக்கிறது. டுவிட்டருக்கு தற்போதும் நான் தான் பொறுப்பாளி, நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்காக எந்த முடிவை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன் என குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Twitter CEO Parag Agarwal Takes Coffee Order to his Staffs at London Office

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X