அதிரடி பணி நீக்கத்தில் டுவிட்டர் சிஇஓ பராக்.,டுவிட்டர் வாங்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைத்த மஸ்க்: என்ன நடக்கிறது

|

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், டுவிட்டரில் பணிபுரிந்து வந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எலான் மஸ்க் உலகளாவிய செய்தியடல் தளமான டுவிட்டரின் புதிய உரிமையாளராக ஆவதற்கு தயாராக இருப்பதால், பெரும்பாலான பணியமர்த்தல் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. டுவிட்டரின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கு தலைமை தாங்கும் பொது மேலாளரான கேவோன் பெய்க்பூர், தயாரிப்புகளின் தலைவர் ப்ரூஸ் பால்க் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி இடம் தெரிவித்தார்.

கேவோன் பெய்க்பூர் தெரிவித்த தகவல்

கேவோன் பெய்க்பூர் தெரிவித்த தகவல்

இதுகுறித்து கேவோன் பெய்க்பூர் தெரிவித்த தகவல் குறித்து பார்க்கையில், கடந்த 7 ஆண்டுகளாக டுவிட்டரில் பணியாற்றி இருக்கிறேன். டுவிட்டரை விட்டு வெளியேறுவேன் என்பதை தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த முடிவை நான் எடுக்கவில்லை, டுவிட்டரை வேறு பாதைக்கு கொண்டு செல்ல விரும்புவதாக தெரிவித்த பராக் என்னை டுவிட்டரில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டார். தற்போதுவரையிலான பயணத்தில் தன்னுடைய பங்களிப்பை நினைத்து மிகவும் பெருமை அடைந்து, இதுபோன்ற விஷயங்களில் ஆறுதல் அடைகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டுவிட்டை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை

டுவிட்டை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை

இதை தொடர்ந்து ப்ரூஸ் ஃபலாக், தனது பணியில் இருந்து அகற்றப்பட்டதாக டுவிட் செய்திருந்தார். ஆனால் இதை தொடர்ந்து அந்த டுவிட்டை நீக்கினார். இவர் டுவிட்டை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை, இருப்பினும் அவர் தனது டுவிட்டர் கணக்கில் வேலையற்றவர் அதாவது unemployed என பதிவிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனம் இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த வாரம் முதல் வணிக முக்கிய பதவிகளை தவிர அனைத்து பணியமரத்தளையும் இடை நிறுத்தி வைத்திருக்கிறது.டுவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. 44 பில்லியன் டாலர் செலவில் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்பட்டது. இந்த கையகப்படுத்தல் ஒப்பந்தமானது 2022 இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தம்

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தம்

இந்த நிலையில் திடீரென டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்திவைக்கப்படுவதாக மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவரங்கள் முறையாக வழங்கப்படாமல் இருக்கும் காரணத்தால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்திருக்கிறார். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5 சதவீதத்துக்கும் குறைவான பயனர்களையே பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த தகவல் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பில் கேட்ஸ், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்தார். தி வால் ஷ்ட்ரீட் ஜர்னல், சிஇஓ கவுன்சில் கூட்டத்தை நடத்தியது. இதில் பங்கேற்ற பில்கேட்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்லார். போலி தகவல்களை கையாளும் முறையில் எலான் மஸ்க் தலைமையிலான டுவிட்டர் நிறுவனம் மேலும் மோசமான நிலையை சந்திக்கும் என பில் கேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

டுவிட்டர் மோசமானதாக மாறலாம்

டுவிட்டர் மோசமானதாக மாறலாம்

மேலும் பில்கேட்ஸ் எலான்மஸ்க் குறித்து கூறுகையில், எலான் மஸ்க் தலைமையிலான டுவிட்டர் மோசமானதாக மாறலாம். ஆனால் இது அவரின் செயல் கிடையாது. காரணம் அவரது டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சாதனைகள் மிகப் பெரியது. அந்தந்த துறைகளின் வல்லுனர்களை பணிக்கு தேர்ந்தெடுத்து மஸ்க் வெற்றி பெற்று விட்டார். ஆனால் சமூகவலைதளம் என்பது அப்படி கிடையாது. இந்த துறையில் அப்படி வெற்றிப் பெற முடியாது. பல கோடி பேர் பயன்படுத்தும் தளமாக சமூகவலைதளம் இருக்கிறது. இதில் எலான் மஸ்க் எண்ணம் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்விக் குறி தான் என பில்கேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இம்முறை அவர் வெற்றி என்பது சந்தேகம் தான். ஆனால் பரந்த மனதுடன் அணுக வேண்டும் காரணம் எலான் மஸ்க்கை குறைத்து மதிப்பிடவே முடியாது என தெரிவித்திருக்கிறார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Twitter CEO Parag Agarwal Fires Top Executive, Why Musk Hold Twitter Deal?- Do You know the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X