இந்தியா: மிகவும் எதிர்பார்த்த வசதி ட்விட்டரில் அறிமுகம்.! ஃப்ளீட் வசதி..!

|

உலகம் முழுவதும் இந்த ட்விட்டர் தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த தளத்தின் மூலம் மக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். பின்பு இந்த தளத்தில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று அம்சம் வாட்ஸ்அப்

தற்சமயம் லைக்,ரீட்வீட், ரிப்ளை இல்லாமல் 24மணி நேரத்தில் தானகவே அழிந்துவிடும்படி ‘ஃப்ளீட்' வசதியை ட்விட்டர் நிறுவனம்
பயனர்களுக்கு வழங்கியுள்ளது. இதேபோன்று அம்சம் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களிலும் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

கமெண்ட் மட்டும்தான் செய்ய முடியும்

அதாவது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்; போன்ற தளங்களில் ஸ்டோரி என்ற பெயரில் வழங்கப்படும் சேவைதான் ட்விட்டரில்ஃப்ளீட் என அழைக்கப்படுகிறது. இதில் பயனர்கள் ட்வீட் செயும் தகவல்கள் சரியாக 24மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும்.இதனை லைக்கோ, ரீட்விட்டோ செய்ய முடியாது என்றும், தனிப்பட்ட முறையில் கமெண்ட் மட்டும்தான் செய்ய முடியும் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

One Airtel தான் பெஸ்ட் திட்டம் - 200 Mbps டேட்டா, மொபைல், பிராட்பேண்ட் & பைபர் எல்லாம் ஒரே பில்!One Airtel தான் பெஸ்ட் திட்டம் - 200 Mbps டேட்டா, மொபைல், பிராட்பேண்ட் & பைபர் எல்லாம் ஒரே பில்!

அனைவரும் இந்த வசதியை

இந்த புதிய வசதி கடந்த மாதம் பிரேசில் நாட்டில் முதல்முறையாக அமலுக்கு வந்தது, தற்போது இந்தியாவில் உள்ள அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். பயனர்களின் நீண்டநாள் கோரக்கையை ஏற்று இந்த அப்டேட்டை கொடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

யனர்கள் மற்றவர்கள் ட்விட்டர்

குறிப்பாக மற்ற ட்வீட்கள் போல் இல்லாமல், ஸ்டோரியில் போடும் டிவீட்களை ஷேர் செய்வது கடினம் என்றும், பயனர்கள் மற்றவர்கள் ட்விட்டர் கணக்கை பின் தொடரவில்லை என்றாலும், அவர்களது ஃப்ளீட்களை பார்க்க முடியும், வாட்ஸ்அப்-ல் வருவதுபோல் நாம் போடும் ஸ்டோரியை யார் யார் பார்க்கிறார்கள் என்பதையும் ட்விட்டர் அப்டேட்டில் தெரிந்து கொள்ளலாம் என்பது
குறிப்பிடத்தக்கது.

கொடுக்கப்பட்டுள்ளது, இணையதளங்களி

கண்டிப்பாக ட்விட்டர் செயலியை பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே இந்த புதிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது, இணையதளங்களில்ட்விட்டர் பயன்படுத்துபவர்களால் இந்த வசதியை பயன்படுத்த முடியாது என விளக்கம் கொடுத்துள்ளனர்.

சத்தமில்லாமல் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!சத்தமில்லாமல் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

 நிறுவனம் தெரிவித்துள்ள

மேலும் புகைப்படங்கள், செய்திகள், GIF உள்ளிட்டவைகளை ட்விட்டர் ஃப்ளீட்டில் பகிர முடியும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இந்த வசதியை பெற ட்விட்டர் கணக்கு வைத்துள்ள பயனர்கள் செயலியை அப்டேட் செய்தால் போதும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Twitter Brings Fleets, a Stories-Like Feature, to India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X