Home
News

ஹோட்டல் ரூம்களாக மாறிய Twitter ஹெட் ஆபீஸ்.. அதிகாலையில் Elon Musk செய்த சம்பவம்!

உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) மனதில்பட்டத்தை அப்படியே பேசுவதையும், செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நேரத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் (Twitter) தலைமை அலுவலகம், ஹோட்டல் ரூம்களாக மாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அதில் அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். இருப்பினும், அவருக்கு ட்விட்டர் நிறுவனம் மூலம் லாபம் கிடைக்கவில்லை. வெளியில் பார்ப்பதற்கு ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து மாதத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதுபோல தோன்றலாம். ஆனால், ட்விட்டர் நிறுவனத்தால், எலான் மஸ்க்குக்கு தொடர்ந்து தலைவலியே ஏற்பட்டுவருகிறது.

ஹோட்டல் ரூம்மாக மாறிய Twitter ஹெட் ஆபீஸ்.. Elon Musk செய்த சம்பவம்!

2022ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபோது, உலகம் முழுவதும் இருக்கும் ட்விட்டர் ஹெட் ஆபீஸ்களுக்கு பல மாதங்கள் வாடகை பாக்கியிருந்தது. இதையெல்லாம் வழக்கம்போல, ட்விட்டரின் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் கவனித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு முக்கிய நிர்வாகிகள் உள்பட பல ட்விட்டர் ஊழியர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தார்.

இதனிடையே தற்காலிக சிஇஓவாக பதவிவகித்த எலான் மஸ்க், லண்டன் (London), சான் பிரான்சிஸ்கோ (San Francisco), நியூயார்க் சிட்டி (New York City) ஆகிய நகரங்களில் இருக்கும் அலுவலங்களின் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறும், அதில் சில மாற்றங்களை கொண்டுவருமாறும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டட உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கவே, எலான் மஸ்க் வாடகை கட்டுவதை நிறுத்திவிட்டார்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக வாடகை பாக்கி இருப்பதாகவும், அதனை எலான் மஸ்க் உடனே கட்ட வேண்டும் என்றும் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் ஹெட் ஆபீஸிஸ் நிலைமை படுமோசமாக இருக்கிறது. ட்விட்டர் தரப்பும், அந்த கட்டடத்தின் உரிமையாளர் தரப்பும் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

ஜனவரியில் இருந்து கட்டட உரிமையாளர், ட்விட்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள ரூம்களை ஹோட்டல்களாக மாற்றி பயன்படுத்தியதாக ட்விட்டர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல உரிமையாளர் தரப்பு, எலான் மஸ்க் எடுத்த முடிவு காரணமாக ட்விட்டரில் துப்புரவு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால், அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அந்த பணிகளை எங்களது பணியாளர்களை வைத்து செய்து வருகிறோம். இப்படி பல பணிகளுக்கு அங்கு ஆளேயில்லை.

இந்த நேரத்தில் வாடகையும் தரப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர். டிசம்பர் மாதத்தில் இருந்து வாடகை பாக்கி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ட்விட்டரின் சட்ட ஆலோசகரான மென்டோசா (Mendoza) வாடகை பாக்கி குறித்து, அண்மையில் எலான் மஸ்கிடம் விவாதித்துள்ளார். அதிகாலை 4 மணி வரையில் இருவரும் பேசியுள்ளனர். அப்போது எலான் மஸ்க், சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் "என் பிணத்தின் மீது தான் வாடகை செலுத்தப்படும்" என்று சொல்லி, தனது முடிவை மாற்றிக்கொள்ளமால் இருப்பதை தெரிவித்துள்ளார்.

இதனை மென்டோசா செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார். ஆகவே, வரும் காலங்களில் ட்விட்டர் நிறுவனம், மோசமான சட்டப்போராட்டங்களை எதிர்கொள்ளும் என்று தெரிகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் (Gizbot) சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Twitter boss Elon Musk refuses to pay office rent in San Francisco, London and New York City
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X