Elon Musk செய்த பட்டர் சிக்கன் சம்பவம்.. வட இந்தியர்களை தூண்டிவிட்ட ஒரேவொரு ட்வீட்
இந்திய உணவு வகைகளுக்கு உலகளவில் வரவேற்பு உள்ள நிலையில், பட்டர் சிக்கன் குறித்து எலான் மஸ்க் (Elon Musk) செய்துள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் புயலை தூண்டிவிடுள்ளது. இப்போது, ட்விட்டரை திறந்தால், எலான் மஸ்க், பட்டர் சிக்கன் சமைப்பது போலவும், சாப்பிடுவது போலவும் போட்டோக்களை பார்க்க முடிகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவில் பல வகையான உணவு வகையில் இருக்கிறது. அதில், பட்டர் சிக்கன் - நான் (Butter Chicken - Naan) காம்பினேஷன் பற்றி சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. வட இந்திய உணவான பட்டர் சிக்கன் - நான், நாடு முழுவதும் வெகுவாக விரும்பப்படுகிறது. ஹைவே ஹோட்டல்களில் பெரும்பாலும் பட்டர் சிக்கன் - நான் உணவே அதிகம் ஆர்டர் செய்யப்படுகிறது. இந்த பட்டர் சிக்கன் - நான் காம்பினேஷன் இப்போது உலகளவில் பேமஸாகிவிட்டது.

உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரில் (Twitter) மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவருக்கு கிட்டத்தட்ட 14 கோடி பாலோயர்கள் உள்ளனர். இவ்வளவு பாலோயர்களை கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஒவ்வொரு ட்வீட்டும் (Elon Musk Tweet), எவ்வளவு மக்களை சென்றுசேரும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இவரது ட்வீட் அவ்வப்போது சர்ச்சையும் கிளப்பும், சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும்.
அந்த வரிசையில், இந்திய உணவான பட்டர் சிக்கன் - நான் காம்பினேஷன் குறித்து அவர் செய்துள்ள ட்வீட் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால், வட இந்தியர்கள் ட்வீட்டரில் பண்ணும் அட்டகாசம் வேற லெவலில் இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த டேனியல் (Daniel) என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ்களை பகிர்வது, பிரபலங்களை கிண்டல் செய்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்துவருகிறார்.
இதை அவரது பாலோயர்களும் விரும்பி ரீட்வீட் செய்வது வழக்கம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவரை எலான் மஸ்க் பாலோ செய்து வருகிறார். இந்த சூழலில் டேனியல், அண்மையில் பட்டர் சிக்கன் - நான் உணவை சாப்பிட்டுள்ளார். இது அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே, தனது ட்விட்டர் பக்கத்தில், பட்டர் சிக்கன் - நான் போட்டோவை பகிர்ந்து, அதோடு "நான் இந்திய உணவை மிகவும் விரும்புகிறேன். அவை உண்மையிலேயே நன்றாக இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட் எலான் மஸ்க் கண்ணில் பட்டுள்ளது. அவரும் "உண்மை" என்று அந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் எலான் மஸ்க் இந்திய உணவுகளை சாப்பிட்டாரா? அவருக்கு பட்டர் சிக்கன் - நான் பிடிக்குமா? என்று ட்விட்டரில் பட்டிமன்றமே நடத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக, வட இந்தியர்கள் பலர், எலான் மஸ்க்கை தங்களது வீட்டிற்கு டின்னருக்கு வாருமாறு அழைப்பு விடுத்து ட்வீட் செய்துவருகின்றனர்.
இன்னும் சிலர் எலான் மஸ்க் பட்டர் சிக்கன் சாப்பிடுவது போலவும், சமைப்பது போலவும் போட்டோக்களை எடிட் செய்து பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. இவரது ஒரு ட்வீட் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








