Home
News

Telegram ஜோலி முடிஞ்சது.. இனி ட்விட்டரில் புதுப்படங்கள் கிடைக்க போகுது.. இதெல்லாம் வேணுமா Elon Musk

டெலிகிராம் (Telegram), யூடியூப் (YouTube) ஆப்ஸ்களுக்கே ஆப்பு வைக்கும்படி எலான் மஸ்க் (Elon Musk) அதிரடி அப்டேட்டை கொடுத்துவிட்டார். இந்த புதிய அப்டேட் காரணமாக, ட்விட்டரில் (Twitter) திருட்டுத்தனமாக புதுப்புது திரைப்படங்கள் அப்லோட் செய்யப்படுவதை இனி யாராலும் தடுக்க முடியாது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

உலகின் மிகப்பெரும் பில்லியனரான எலான் மஸ்க், 2022ஆம் ஆண்டில், முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். கிட்டத்தட்ட ரூ.3.30 லட்சம் கோடி செலவு செய்து வாங்கிய ட்விட்டரில், அவருக்கு லாபம் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இனி ட்விட்டரில் புதுப்படங்கள் கிடைக்க போகுது! இது தேவையா  Elon Musk

அந்த வரிசையில், ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, ப்ளூ டிக் யூசர்களுக்கு கட்டணம் விதித்தது, பல பிரபலங்களின் ப்ளூ டிக்குகளை பறித்தது உள்ளிட்ட சில முடிவுகள் ட்விட்டர் மீதும், எலான் மஸ்க் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சொல்லப்போனால், பாதிக்குப் பாதி ப்ளூ டிக் யூசர்கள் தங்களது சந்தாவை ரத்து செய்துவிட்டனர். அதேபோல ட்விட்டரின் யூசர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.

இந்த நேரத்திலேயே எலான் மஸ்க் தானொரு வெற்றிகரமான வியாபாரி என்பதை நிரூபித்தார். அதாவது, ட்விட்டர் பயனர்களை தன்பக்கம் சாயும்படி, அதிரடி அப்டேட்களை கொடுக்கத் தொடங்கினார். அந்த வகையில், மெட்டாவின் மெசஞ்சர் (Messenger), வாட்ஸ்அப் (WhatsApp) ஆப்ஸ்களில் இருக்கும் ஆடியோ, வீடியோ கால் வசதிகளை போல ட்விட்டரிலும் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து புதிய ட்விட்டர் சிஇஓவை அறிமுகப்படுத்தினார். இப்படி அடிக்கடி அப்டேட் வெளியாகிவருகிறது. இதனால், ட்விட்டர் மீது அதிருப்தியில் இருந்த அதன் யூசர்கள் உற்சாகமடைந்தனர். இவர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியான அப்டேட்டை எலான் மஸ்க் இப்போது, கொடுத்துள்ளார். ட்விட்டரில் 2 மணி நேரம் நீளம் கொண்ட வீடியோக்களை அப்லோட் செய்யலாம் என்று அறிவித்துள்ளார்.

இந்த அப்டேட் மூலம் ஒரு முழு படத்தையே ட்விட்டரில் அப்லோட் செய்ய முடியும். முன்னதாக, ட்விட்டரில் 2 நிமிடம் 20 நொடிகள் நீளம் கொண்ட வீடியோக்களை மட்டுமே அப்லோட் செய்ய முடிந்தது. இந்த அளவை அதிகரிக்குமாறு ட்விட்டர் யூசர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சூழலில் எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்விட்டரில் அதிகபட்சம் 8ஜிபி அளவில், 2 மணி நேரம் நீளும் வீடியோக்களை ப்ளூ டிக் யூசர்கள் அப்லோட் செய்துகொள்ளலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்து உற்சாகம் அடைந்த ப்ளூ டிக் யூசர்களில் பலர், பல திரைப்படங்களையே அப்லோட் செய்து, எலான் மஸ்க் ட்வீட்டுக்கு பதிலளித்து வருகின்றனர். இந்த அப்டேட் காரணமாக டெலிகிராமை போல சட்டவிரோதமாக அப்லோட் செய்யப்பட்ட திரைப்படங்கள் ட்விட்டரிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதோபோல யூடியூப்பில் பார்த்துவரும் அனைத்து வீடியோக்களும் ட்விட்டரிலும் கிடைக்கும். இப்படி பல வீடியோ ஆப்ஸ்களுக்கு ஆப்பு வைக்கும்படி இந்த அப்டேட் அமைந்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல், புத்தம் புதிய திரைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்யும் கும்பல்களுக்கும், இந்த அப்டேட் வாய்ப்பளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Twitter boss Elon Musk allows subscriber to upload 2-hour-long videos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X