தீவிரவாதத் செயல்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்த ட்விட்டர்.!!

Written By:

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நிரூபிக்கும் விதமாக ட்விட்டர் நிறுவனம் சுமார் 235,000 ட்விட்டர் கணக்குகளை இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இதுபோன்று பல்வேறு ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் இடைநீக்கம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதத் செயல்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்த ட்விட்டர்.!!

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 125,000 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் இந்த ஆண்டின் துவக்கத்தில் இடைநீக்கம் செய்தது. 2015 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து இதுவரை மொத்தம் 360,000 ட்விட்டர் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதத் செயல்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்த ட்விட்டர்.!!

தீவிரவாத செயல்களுக்கு எந்த விதத்திலும் துணையாகிவிட கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தப் பணி தொடரும் என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி அடிப்படையில் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுவது சுமார் 80 சதவீதம் அதிகரித்திருக்கின்றது. ஒரு முறை இடைநீக்கம் செய்யப்பட்ட கணக்குகளை மீட்கும் காலகட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றும் அந்தச் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

English summary
Twitter blocks 235,000 accounts for promoting terrorism Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot