விளைவுகளை சந்திக்கனும்: மத்திய அரசு., கொஞ்சம் டைம் கொடுங்க: டுவிட்டர்!

|

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களை பின்பற்றாத டுவிட்டர் நிறுவனம் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களை பின்பற்ற கால அவகாசம் அளிக்கும்படி மத்திய அரசிடம் டுவிட்டர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அர்ப்பணிப்போடு இருக்கும் டுவிட்டர்

அர்ப்பணிப்போடு இருக்கும் டுவிட்டர்

இந்திய மக்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்போடு டுவிட்டர் இருக்கிறது. தங்கள் சேவை பொது உரையாடலுக்கு முக்கியமானதாக இருக்கிறது எனவும் எங்கள் சேவை கிடைக்க இந்தியாவில் பொருந்தக் கூடிய சட்டத்திற்கு இணங்க முயற்சிப்போம் எனவும் டுவிட்டர் தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

முரண்பாடு மற்றும் டூல்கிட் விவகாரம்

முரண்பாடு மற்றும் டூல்கிட் விவகாரம்

மேலும் அரசுடன் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் டூல்கிட் பிரச்சனை குறித்து அவர் விளக்கம் அளித்தார். அதேபோல் பேச்சு உரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த அவர் இந்த விவகாரத்தில் காவல்துறை தங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி புதிய டிஜிட்டல் கொள்கையை ஏற்றுக் கொண்டாலும் பேச்சுரிமையை தடுக்கும் வகையில் விதிகள் இருந்தால் அதை எதிர்க்க டுவிட்டர் கண்டிப்பாக குரல் கொடுக்கும் என குறிப்பிட்டார்.

மத்திய அரசின் கோரிக்கைக்கு இணங்க நடவடிக்கை

மத்திய அரசின் கோரிக்கைக்கு இணங்க நடவடிக்கை

மறுபுறம் இந்திய அரசின் சட்டக் கோரிக்கைக்கு இணங்க இந்தியாவில் நான்கு கணக்குகளை டுவிட்டர் தடுத்தது. தெற்காசிய நாட்டிற்கு வெளியில் இருந்து இந்த கணக்கு அணுகியிருக்கலாம். விவசாய சீர்த்திருத்தங்கள் உட்பட பிரதமர் மோடியின் ஏழு ஆண்டுகால ஆட்சியை விமர்சிக்கும் வகையிலும் பிற டுவிட்களை வெளியிட்டனர். இந்த நான்கு கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. இதை ஏற்று டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள்

வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள்

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த தளங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது.

குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் அதிகாரி

குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

புதிய சமூக ஊடக விதிகள்

புதிய சமூக ஊடக விதிகள்

புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆபாச படங்கள் ஆகியவற்றை 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிட்டது.

தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு

தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் (இந்தியாவில் வசிக்கும் ஊழியர்கள்) ஆகியோரை நியமிக்க அனைத்து சமூகவலைதளத்திற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.

Best Mobiles in India

English summary
Twitter Asks Centre More Time to Execute New IT RUles

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X