என்னா மனுஷன்யா.. திறமைக்கே என் சொத்து.. வாரிசுகளுக்கு கிடையாது.. Elon Musk மாஸ்!
பரம்பரை சொத்துக்களை வைத்து மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெரும் பலருக்கு மத்தியில், அது இல்லாமலேயே உலகின் மிகப்பெரும் பணக்காரராக உயர்ந்த எலான் மஸ்க் (Elon Musk) தன்னுடைய சொத்துக்களும் திறமையிடமே போய் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதுகுறித்து விளக்குகிறது, இந்த செய்தி தொகுப்பு.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 170 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். சொல்லப்போனால், பரம்பரை சொத்து என்பதே இல்லாமல், கோடீஸ்வரராக உயர்ந்தது மட்டுமல்லாமல், வெறும் 30 ஆண்டுகளில் உலகையே ஆளும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி காட்டியிருக்கிறார்.

இவர் அடைந்த உட்சத்தையும், புகழையும் போல வேறு எந்த பெரிய பணக்காரரும் பெற்றதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடுவது முதல், செயற்கை நுண்ணறிவையும் (Artificial Intelligence) மனிதனையும் இணைப்பதற்கான முயற்சிகளை எடுப்பது வரையில் பல்வேறு எதிர்கால திட்டங்களை, பல ஆண்டுகளுக்கு முன்பே எலான் மஸ்க் தொடங்கிவிட்டார்.
இவரின் சில ட்வீட்களை நீக்கிய ட்விட்டர் (Twitter) நிறுவனத்தையே சில மாதங்களில் பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டார். இவ்வளவு பெரிய ஆளுமை கொண்டிருக்கும் எலான் மஸ்க், தனது சொத்துக்களும், நிறுவனங்களும் "வாரிசுகள்" என்ற அடிப்படையில் மட்டும் யாருக்கும் சென்றுவிட கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். எலான் மஸ்க்குக்கு மகன்கள், மகள்கள் என்று 9 பிள்ளைகள் இருக்கின்றனர்.
அதில் முதல் மகனுக்கு 19 வயதாகிறது. கடைசி மகனுக்கு 3 வயதாகிறது. இவர்களில் அனைவரும் எலான் மஸ்க்குடன் தொடர்ந்து பழகிவருவது கிடையாது. இருப்பினும், அவர்கள் அனைவரையும் எலான் மஸ்க் கவனித்து வருகிறார். இவர்களில், டமியன் மஸ்க் (Damian Musk), காய் மஸ்க் (Kai Musk) இருவருக்கும் 18 வயது நெருங்கியதால், எலான் மஸ்க்கின் சொத்துக்களையும், பங்குகளையும் அவர்களின் பெயர்களில் மாற்ற அவரது நிதி ஆலோசகர்கள் பல முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர். ஆனால், எலான் மஸ்க் காலம் தாழ்த்தியே வந்தார்.
இப்போது, வாரிசு என்ற அடிப்படையில் மட்டும் எனது பங்குகளை தனது பிள்ளைகளுக்கு வழங்கப்போவது கிடையாது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல் (The Wall Street Journal) செய்தி நிறுவத்துக்கு அண்மையில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் மஸ்க் கூறுகையில், "எனது பிள்ளைகளுக்கு என்னுடைய சொத்துக்களையும், நிறுவனங்களையும் நிர்வகிப்பதற்கான திறமை, தகுதி, ஆர்வம் இல்லாதபோதிலும், அவர்களுக்கு எனது பங்குகளை வழங்கும் முடிவை நான் நிச்சயமாக எடுக்க மாட்டேன்.
ஏனென்றால், என்னை பொறுத்தவரையில் அதை தவறென்று நினைக்கிறேன். என்னுடைய பிசினஸில் விருப்பமில்லாத, பிள்ளைகளுக்கு எனது நிறுவனத்தின் பங்குகளை கொடுப்பதைவிட அந்த நிறுவனங்களுக்குள் இருக்கும் தகுதியான நபர்களிடம் அவற்றை ஒப்படைப்பது நல்லது. எனது நிறுவனங்களை நிர்வகிக்கும் திறமைகளை கொண்ட நபர்களை நான் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








