டிவிட்டர்; ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொரோனாவுக்கு பிறகும் வீட்டிலிருந்தே வேலை?

|

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது,குறிப்பாக இதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. பின்பு பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

பாதிப்புக்கு 87பேர்

இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 87பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,206ல் இருந்து 2,293 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது.
பின்பு 22ஆயிரத்து 543 பேர் குணமடைந்தும், 46 ஆயிரத்து 8 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில்
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 152ல் இருந்து 70 ஆயிரத்து 756 ஆக உயர்வடைந்து இருந்தது.

வைரஸ் தொற்று உலகம்

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் 40 லட்சம் பேரை பாதித்துள்ளது. சுமார் 2லட்சத்துக்கும்அதிகமான மக்களை கொன்றுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஆய்வு செய்து
வருகின்றன.

Jio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு?Jio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு?

தொற்றுகளை போல் அல்லாமல்

மற்ற வைரஸ் தொற்றுகளை போல் அல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவுகிறது. அறிகுறிகள் தெரியும் முன்பே பலருக்கும் பரவிவிடுகிறது. இதனால் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது.

பிறகும், ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே

இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகும், ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என சமூக ஊடகமானடிவிட்டர் நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது. இந்த நோய் தொற்று பரவத் துவங்கியதும், பல்வேறு நாடுகளுக்கு ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தன. எனவே இதனால் சிறு கடைகள் முதல், மிகப் பெரிய தொழிற்சாலைகள் வரை, அனைத்தும் மூடப்பட்டன. பின்பு பல கோடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

டிவிட்டர் நிறுவனம்

சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதியளித்தன, அதன்படி கடந்த மார்ச் மாததுவகத்தில் இருந்து,தங்களது 5,000ஊழியர்களை, கொரோனா அலை ஓயும் வரை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யடிவிட்டர் நிறுவனம் அனுமதியளித்தது.

அனுமதி அளித்தால் அதை நாம்

டிவிட்டர் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் ஏற்பாடு,சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை,கடந்த சில மாதங்களில் நாம் நிரூபித்துள்ளோம்
இந்த கோரோனாவுக்கு பிறகும் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு,அவர்களின் வேலையும்,
சூழ்நிலையும் அனுமதி அளித்தால் அதை நாம் செய்துகொடுப்போம் என ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Twitter allows Employees to Work From Home Permanently: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X