புக்மார்க்ஸ் அம்சங்களுடன் கலக்கும் ட்விட்டர்.!
ட்விட்டர் ஹோம் பேஜ் சென்று புக்மார்க் செய்யப்பட்ட ட்விட்களை எளிமையாக பார்க்க முடியும், மேலும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி இந்த புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்கள் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் ட்விட்டர் இப்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

தற்சமயம் ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை சேமித்து வைக்க புதிய புக்மார்க்ஸ் (Bookmarks) எனும் வசதியை அறிமுகம் செயத்துள்ளது அந்நிறுவனம். இந்த புதிய வசதி பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ட்விட்டர் செயலியில் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கம் ஷேர் ஐகானை கிளக் செய்து ட்விட்களை மற்றவர்களுக்கு எளிமையாக பகிர்ந்து கொள்ளவோ, அவறறை புக்மார்க் செய்யவோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ட்விட்களை மிக எளிமையாக பகிர்ந்துகொள்ள ஷேர் எனும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு அம்சங்களும் ஷேர் எனும் ஒற்றை பட்டனில் வழங்கப்பட்டிருக்கிறது, இதனால் வாடிக்கையாளர்கள் மிக ட்விட்களை சேர் செய்யவும் மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் ஹோம் பேஜ் சென்று புக்மார்க் செய்யப்பட்ட ட்விட்களை எளிமையாக பார்க்க முடியும், மேலும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி இந்த புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு மேலும் பல்வேறு புதிய அம்சங்கள் ட்விட்டரில் இடம்பெறும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்ட புக்மார்க் அம்சம் பொறுத்தவரை மொமண்ட்ஸ் மற்றும் ட்விட்டர் ஆட்ஸ் ஆப்ஸ்களுக்கு இடையில் உள்ளது, மேலும் புக்மார்க் செய்த ட்விட்களை படித்ததும் அவற்றை புக்மார்க் பகுதியில் இருந்து நீக்க முடியும்.

ட்விட்டர் அறிமுகம் செய்துள்ள புக்மார்க்ஸ் அம்சம் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மற்றும் பல்வேறு வலைதளங்களில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications