Home
News

2021-ல் இவுங்க மாஸ்- அமோக லைக், ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட்கள்: பிரதமர் மோடி, விராட் கோலி, தளபதி விஜய் டாப்!

2021 ஆம் ஆண்டின் இறுதியை நோக்கி சென்று வெற்றி ஆண்டான 2022-ல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். இந்த நிலையில் டுவிட்டர் 2021-ல் இந்தியாவில் பெற்ற சிறந்த போக்குகள் மற்றும் டுவிட்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளது. இதில் அதிக விருப்ப டுவிட்களை பெற்ற பதிவுகளை விளையாட்டு, பொழுபோக்கு, வணிகம் மற்றும் அரசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 நிவாரண நிதி

2021 முக்கிய அறிவிப்புகளில் முதன்மையானது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் இந்தியாவின் கோவிட்-19 நிவாரண நிதிக்கு அவர் அளித்த பங்களிப்பு குறித்த டுவிட் ஆகும். அதிக ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட் இதுதான்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது பெண் குழந்தை குறித்த டுவிட்டை பதிவு செய்திருந்தார். இது நாட்டில் அதிகம் விரும்பப்பட்ட டுவட் ஆக இருக்கிறது. அதேபோல் #கோவிட்19 மற்றும் #FarmersProtest ஆகியவை அதிகம் டுவிட் செய்யப்பட்ட ஹேஸ்டேக்குகளாக இருக்கின்றன. அதேபோல் 2021-ல் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய அனைத்து டுவிட்களின் விவரங்களையும் டுவிட்டர் வெளியிட்டிருக்கிறது.

கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதி

கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதி

அதிகம் ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட் ஆனது 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு பாட் கம்மின்ஸ் அளித்த பங்களிப்பு குறித்த பதிவு ஆகும். இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவிட் இதுவாகும். இதுவரை இந்த டுவிட் 487.1K லைக்குகள், 114.2K ரீடுவீட்கள் மற்றும் 21.9K மேற்கோள்களை பெற்றிருக்கிறது.

விராட் கோலி டுவிட்

விராட் கோலி டுவிட்

2021 ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட டுவிட் ஆனது விராட் கோலி தனது பெண் குழந்தை குறித்த பதிவிடப்பட்ட டுவிட் ஆகும். இது 50.7K ரீடுவீட்கள், 539.1K விருப்பங்கள் மற்றும் 9421 மேற்கோள்களைப் பெற்றது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 2020 ஆம் ஆண்டில் அதிக விருப்பங்களை பெற்றது விராட் கோலி டுவிட் தான். அது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்ட டுவிட் ஆகும்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி

இந்த ஆண்டு அதிக ரீடுவிட் செய்யப்பட்ட அரசாங்க டுவிட் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து பெற்றிருக்கிறது. அவர் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திவிட்டதாக பதிவிட்ட டுவிட் தான். இந்த டுவிட் பதிவில் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த உதவிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த டுவிட் ஆனது 5.1K ரீடுவீட்களைப் பெற்றிருக்கிறது.

பிரதமர் மோடி டுவிட்

இந்த ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட அரசாங்க டுவிட் பட்டியலிலும் பிரதமர் மோடி டுவிட் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட டுவிட்தான் அது. இந்த டுவிட் 297.9K லைக்குகளைப் பெற்றது.

வர்த்தகம் தொடர்பான டுவிட்கள்

அதேபோல் வர்த்தகம் தொடர்பான டுவிட்கள் குறித்து பார்க்கையில், 70 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியாவை டாடா குழுமம் பெற்றது தொடர்பாக பதிவிடப்பட்ட டுவிட் அதிக ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட் ஆகும். இது ரத்தன் டாடாவின் டுவிட் ஆகும். இந்த டுவிட் 82.9K ரீடுவீட்களையும் 404K லைக்குகளையும் பெற்றது. வணிக பிரிவில் அதிக ரீடுவிட் லைக் பெற்ற டுவிட் ஆகும்.

பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

அதிகம் ரீடுவிட் செய்யப்பட்ட என்டர்டெயின்மென்ட் டுவிட் குறித்து பார்க்கையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தான். இது என்டர்டெயின்மென்ட் பிரிவில் அதிக ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட் ஆகும். இது 342.3K லைக்குகள் மற்றும் 140.3K ரீடுவீட்களுடன் இந்த ஆண்டு பொழுதுபோக்கு பிரிவில் அதிகம் விரும்பப்பட்ட டுவீட் ஆக இருக்கிறது.

விராட் கோலி பதிவிட்ட பாராட்டு டுவிட்

அதேபோல் விளையாட்டு பிரிவு குறித்து பார்க்கையில், எம்எஸ் தோனியின் மேட்ச் வின்னிங் குறித்து பாராட்டி விராட் கோலி பதிவிட்ட டுவிட் அதிக ரீடுவிட் பெற்றிருக்கிறது. 529.6K லைக்குகளையும் 91.7K ரீடுவீட்களையும் பெற்று இந்த ஆண்டு விளையாட்டு பிரிவில் அதிகம் விரும்பப்பட்ட டுவிட் ஆக இருக்கிறது.

இமோஜிகள் மற்றும் ஹேஷ்டேக்குகள்

இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் டுவிட் செய்யப்பட்ட இமோஜிகள் மற்றும் ஹேஷ்டேக்குகள் குறித்த தகவலையும் டுவிட்டர் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இமோஜிகள் குறித்து பார்க்கையில், சிரிப்பு தொடர்பான இமோஜி அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஃபயர் (தீ) இமோஜி அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட சிறந்த ஹேஷ்டேக்குகளின் விவரங்களையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் #கோவிட்19 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. தொடர்ந்து #FarmersProtest இரண்டாவது இடத்தையும் #TeamIndia மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்

அதேபோல் கூகுள் அதன் தளத்தில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் குறித்த விவரங்களை பகிர்ந்திருக்கிறது. கூகுள் இந்தியா தனது "இயர் இன் சர்ச்" அதாவது ஆண்டு தேடுதல் முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்மூலம் ஜெய் பீரம், ஷெர்ஷா ஆகியவை பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன. அதேபோல் 2021-ல் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட திரைப்பட பிரபலமாக ஆர்யன் கான் இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகர் சூர்யாவின் "ஜெய் பீம்" படம் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Twitter 2021- Most Like and Retweets Tweet in 2021: Narendra modi, Virat kohli, Actor Vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X