Home
News

மிகவும் பயனுள்ள தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரட்டைச் சகோதரர்கள்: முதல்வர் பாராட்டு..!

மதுரையில் இருக்கும் மேலூர் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோரை முதல்வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதன்படி இந்த சகோதரர்கள் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடித்தது என்னவென்றால், உயிருக்கு

இவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், உயிருக்கு போராடுபவர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும் இரண்டு கிலோமீட்டர் தூரம் முன்பு அதில் இருக்கும் ஜிபிஎஸ் கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். பின்பு சர்க்யூட் போர்டு தானாக இயங்க ஆரம்பித்து ரோட்டோர மின் விளக்கில் கட்டப்பட்டுள்ள ஒலி பெருக்கியில் ஆம்புலன்ஸ் வருகிறது. வழிவிடுங்கள் என்று தெரிவிப்பதுடன் ஊதா நிறத்திலும் விளக்கு ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 தந்தை கண்ணன் விபத்தில்

இந்த சகோதரர்களின் தந்தை கண்ணன் விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரிழந்துள்ளார், தங்கள் தந்தைக்கு நிகழ்ந்த சோகம் வேறு யாருக்கும் நிகழ்ந்து விடக்கூடாது எண்ணிய லட்சிய இளைஞர்கள் ஆம்புலன்ஸ் வரும் வழியில் இந்த தானியங்கி சிக்னலை கண்டுபிடித்தோம் என்கின்றனர்.

தெளிவாக கூறவேண்டும் என்றால்

தெளிவாக கூறவேண்டும் என்றால், உயிருக்கு போராடுபவர்களையும் அவசர உதவி தேவைப்படுபவர்களையும் ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும் இரண்டு கிலோமீட்டர் துாரத்திற்கு முன்பே ஆம்புலன்சில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். அதன்பின்பு சர்க்யூட் போர்டு தானாக இயங்க ஆரம்பித்து ரோட்டோர கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒலி பெருக்கியில் ‘ஆம்புலன்ஸ் வருகிறது. வழிவிடுங்கள்' என்று தெரிவிப்பதோடு ஊதா நிறத்தில் விளக்குகளை ஒளிரச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு எஸ்எம்எஸ்

பின்பு ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட தூரத்தை கடந்ததும் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி சேவை ஆனது துண்டிக்கப்படும் மற்றும் அறிவிப்பு வெளியிடும் ஒலிபரப்பும் நிறுத்தப்படும்.

கோதரர்கள் மேலூர் அரசுப்பளிளில் 12-ம் வகுப்பு பயின்று வருவ

இந்த இரட்டைச் சகோதரர்கள் மேலூர் அரசுப்பளிளில் 12-ம் வகுப்பு பயின்று வருவதாக கூறப்படுகிறது. இளம் பருவம் முதலே கல்வி மீதும் கண்டுபிடிப்புகள் மீதும் தீரா மோகம் கொண்ட இவர்கள் சிறு சிறு கருவிகளைச் செய்து பள்ளிகளில் நடந்த போட்டிகளில் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

சகோதரர்களின் அருமையான

மேலும் இந்த சகோதரர்களின் அருமையான தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பை பற்றி அறிந்த
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ட்விட்டர் வழியாக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Twin brothers who developed the most effective technology: CM praise: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X