ரயில் கழிவறையில் மாணவியின் அலறல் சத்தம்: ஆபாசமாக படம் எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!

|

ரயிலில் கழிவறைக்கு சென்ற மாணவியை தனது செல்போனின் மூலம் ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

ரயில் சேவை இயக்கம்

ரயில் சேவை இயக்கம்

கொரோனா தாக்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டு மாநிலங்களுக்கான ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளோடு ரயில் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேரன் அதிவிரைவு ரயலில் இரவில் பயணம்

சேரன் அதிவிரைவு ரயலில் இரவில் பயணம்

சென்னை கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலைப் படிப்பு படித்து வருகிறார். 22 வயதான மாணவி கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் அதிவிரைவு ரயலில் இரவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிகாலை ரயில் அரக்கோனத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த சமயத்தில் மாணவி கழிவறைக்கு சென்றுள்ளார்.

ஆபாசமாக படம்பிடிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்

ஆபாசமாக படம்பிடிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்

அதேநேரத்தில் கழிவறையின் வெளியே நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் மாணவியை தனது மொபைலில் ஆபாசமாக படம்பிடிக்க முயன்றாக செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த சக பயணிகள் மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

உஷார்: பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது.,அதிர்ச்சி சம்பவம்-எப்படி தெரியுமா?

செல்போன் சோதனை

செல்போன் சோதனை

மாணவி கூறிய காரணத்தை கேட்டு டிக்கெட் பரிசோதகரின் செல்போனை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அதில் மாணவியை ஆபாசமாக படம் பிடிக்க முயன்றது தெரிய வந்ததையடுத்து, ரயில்வே ஹெல்ப் லைனில் மாணவி புகார் தெரிவித்தார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர்

வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர்

பெரும்பூர் ரயில் நிலையில் தயாராக இருந்த ரயில்வே போலீஸார் விசாரித்து டிக்கெட் பரிசோதகரை கைது செய்தனர். டிக்கெட் பரிசோதகர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரின் பெயர் மேகநாதன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேகநாதன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
TTE arrested for trying to take video when girl use in Train bathroom in Chennai

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X