இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..
நீங்கள் உங்கள் பிரௌசரிங் அனுபவத்திற்காகக் கூகிள் குரோம் வெப் பிரௌசரை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். குறிப்பாக நீங்கள் ஒரு மாணவர் என்றாலோ அல்லது உங்கள் வீட்டில் படிக்கும் வயதில் ஒரு மாணவர் இருந்தாலோ இந்த பதிவைத் தவறாமல் படியுங்கள். கூகிள் குரோம் பயன்பாட்டாளர்கள் அனைவரும் கட்டாயமாகக் கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் அம்சம் பற்றி அறிந்துகொள்வது சிறப்பானது. இந்த எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்துவது உங்கள் பிரௌஸிங் அனுபவத்தை மேம்படுத்துவதுடன் பாதுகாப்பான அனுபவத்தையும் வழங்குகிறது.

Google Chrome சேவையை உலகளவில் எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர்?
கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கணக்கின் படி, உலகளவில் சுமார் 3.2 பில்லியன் இணையப் பயனர்கள் Google Chrome பிரௌசர் சேவையை அவர்களின் முக்கிய உலாவியாகப் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், 576 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சஃபாரி உலகளவில் இரண்டாவது பிரபலமான இணைய உலாவியாகக் கூறப்படுகிறது. இது Chrome மற்றும் Safari இன் இணையப் பயனர்களின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள கடுமையான வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது.

கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
கூகிள் குரோம் பயனர்கள் அதிகமாக இந்த உலாவியைப் பயன்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணம் இதன் வேகம் மற்றும் எக்ஸ்டென்ஷன் என்று கூட நாம் கூறலாம். உங்களின் பெரும்பாலான உலாவி அனுபவத்தை நீங்கள் சிறப்பாகப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த Google Chrome எக்ஸ்டென்ஷன்கள் ஒரு சிறந்த வழியாகும். குறிப்பாக நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உற்பத்தித்திறன் மற்றும் படிப்பின் அடிப்படையில் Chrome இலிருந்து அதிகமானவற்றைப் பெற விரும்புவீர்கள் என்றால், இந்த எக்ஸ்டென்ஷன்கள் பற்றி அறிந்துகொள்வது சிறந்தது.

2022 ஆம் ஆண்டின் டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன்
2022 ஆம் ஆண்டில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த 2022 ஆம் ஆண்டில் மாணவர்களுக்காக Google Chrome பிரௌசர் அறிமுகம் செய்த எக்ஸ்டென்ஷன்களில் டாப் 5 இடத்தை பிடித்த மிக முக்கியமான மற்றும் அதிக தேவை கொண்ட எக்ஸ்டென்ஷன்களை இங்குத் தொகுத்துள்ளோம். இந்த 2022 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான சிறந்த Google Chrome எக்ஸ்டென்ஷன்கள் என்ற பிரிவில்,

மாணவர்களுக்கான டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் 2022
1. மை மெமோரைசர் டூல் (My Memorizer Tool)
2. பிளாஷ்கார்டுஸ் (Flashcards)
3. காமி (Kami)
4. கிளாக்கிஃபை (Clockify) மற்றும்
5. இமேஜஸ் (Imagus) ஆகியவை இடம்பிடித்துள்ளது.

மை மெமோரைசர் டூல்
நீங்கள் ஒரு தலைப்பையோ அல்லது முக்கியமான ஒன்றையோ ஆராய்ச்சி செய்யும் மாணவராக இருந்தால், இணையத்தில் நீங்கள் பார்க்கும் உங்கள் அறிவில் சேர்க்கக்கூடிய அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மை மெமோரைசர் டூல்ஸ் உங்களுக்குச் சிறந்தது. 'My Memorizer Tool' உங்களுக்கு மதிப்புமிக்க எந்த ஒரு தகவலையும் மனப்பாடம் செய்ய உதவுகிறது. நீங்கள் விரும்பும் முக்கியமான வரி அல்லது வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்து, வலது கிளிக் செய்து, மை மெமோரைசர் டூல் தேர்ந்தெடுக்கவும்.

மை மெமோரைசர் டூல் இதையும் செய்கிறதா?
இந்த கூகிள் குரோம் மை மெமோரைசர் டூல் எக்ஸ்டென்சன் அம்சம், நீங்கள் சேமித்து வைத்த அனைத்து வாக்கியங்களையும் எப்போது வேண்டுமானாலும் ரிவியூ செய்து பார்க்க உங்களை அனுமதிக்கிறது. எதிர்கால தேடுதல் தேவைக்கு இப்படி ஒரு பிரௌஸிங் உங்களிடம் இருப்பது அவசியம். அதேபோல், இந்த மை மெமோரைசர் டூல் எக்ஸ்டென்ஷன், உங்களுக்குப் பகலில் வினாடி வினா போன்ற விழிப்பூட்டல்களையும் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நீங்கள் சேமித்த விஷயங்களை வேகமாக மனப்பாடம் செய்ய உதவுகிறது.

ஃபிளாஷ் கார்ட்ஸ்
கூகுள் டிக்ஷனரி அல்லது கூகுள் மொழிபெயர்ப்பாளர்களில் ஏதேனும் புதிய சொற்றொடர் அல்லது சொல்லை நீங்கள் சந்தித்தால், இந்த 'ஃப்ளாஷ் கார்டுகஸ்' அம்சம் அவற்றை மனப்பாடம் செய்ய உதவும். சேமித்த கார்டுகள் அவற்றின் வரையறை மற்றும் அர்த்தத்தை அடிக்கடி உங்கள் நினைவகத்தைத் தூண்டுவதற்காக நீங்கள் பிரௌஸ் செய்யும் போதெல்லாம் உங்களுடைய உலாவியில் தோராயமாக பாப் அப் செய்யும். நீங்கள் CAT தேர்வுக்குத் தயாராகி இருந்தால், இந்த ஃபிளாஷ் கார்டுகஸ் எக்ஸ்டென்சன் மிகவும் பயனுள்ள கருவியாகும்.

காமி (Kami)
'காமி' என்பது ஒரு முழு மார்க்-அப் கருவியாகும், இதன் மூலம் எந்தவொரு ஆவணத்தையும் ஒரு தனிப்பட்ட மாணவர் திருத்தி அமைக்கலாம். அதாவது எளிதாக நீங்கள் எடிட் செய்துகொள்ளலாம். ஆன்லைன் ஆய்வுக் கட்டுரைகளில் உள்ள திருத்தங்களை உங்கள் வசதிக்கேற்ப மேம்படுத்தலாம். இந்த எக்ஸ்டென்சன் கூகிள் கிளாஸ்ரூம் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றில் குறைபாடற்ற முறையில் செயல்படும். ஸ்கேன் செய்யப்பட்ட PDF டாக்குமெண்ட்களை கூட நீங்கள் Kami எக்ஸ்டென்ஷன் மூலம் சில நொடியில் திருத்தி அமைக்கலாம்.

கிளாக்கிஃபை (Clockify)
நேர மேலாண்மை ஒரு சிக்கலாக இருந்தால், 'Clockify' எக்ஸ்டென்ஷன் 2022 ஆம் ஆண்டில் ஒரு மாணவருக்கு பெரும் சொத்தாக அமையும். இந்த எக்ஸ்டென்ஷன் மாணவர் பல்வேறு பள்ளி நடவடிக்கைகளில் செலவிடும் நேரத்தைப் பதிவுசெய்ய அனுமதிக்கும். இது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான சில செயல்பாடுகளைச் செய்வதற்குச் செலவழித்த நேரத்தைப் பகுப்பாய்வு செய்யவும் அனுமதிக்கிறது.

இமேஜஸ் (Imagus)
பட்டியலில் கடைசியாக Imagus எக்ஸ்டென்ஷன் உள்ளது, இது மாணவர்களின் ஈர்க்கக்கூடிய கருவியாகும். பயனர்கள் தங்கள் உலாவியில் உள்ள படங்களையும் வீடியோக்களையும் அவற்றின் மீது சுட்டியை நகர்த்துவதன் மூலம் பார்க்க இது அனுமதிக்கிறது. ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாகத் திறந்து மாணவர்கள் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. இதன் மூலம் நேரம் மிச்சமாகும். தற்போது மாணவர்களுக்குக் கிடைக்கும் இந்த Google Chrome எக்ஸ்டென்ஷன்களை நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.


Click it and Unblock the Notifications