உங்க போன் அடிக்கடி சூடாகிறதா? அப்போ இதெல்லாம் தான் காரணம்.! உடனே மாத்துங்க.!

|

அதிக வெப்பம் மனிதர்களுக்கு மட்டுமில்லை - நீங்கள் எப்போதும் உங்கள் கைகளிலேயே பிடித்து சுற்றித்திரியும் ஸ்மார்ட்போனுக்கும் (smartphone) நல்லதில்லை.! ஆம், அதிக சூடும், குளிரும், நீரும் ஸ்மார்ட்போன்களுக்கு ஆகாது. எந்த பருவகாலமாக இருந்தாலும் உங்கள் போன் சூடாவதை (phone over heating) அடிக்கடி உங்களால் உணர முடிகிறது என்றால், கட்டாயம் இந்த விஷயங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் மக்களே.!

உங்க ஸ்மார்ட்போன் அடிக்கடி ஓவர் ஹீட் ஆகிறதா?

உங்க ஸ்மார்ட்போன் அடிக்கடி ஓவர் ஹீட் ஆகிறதா?

மனிதர்கள் தங்களை அதிக வெப்பத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சன் ஸ்கிரீன் லோஷன் போன்றவற்றைப் பாதுகாப்பு கவசங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல சில விஷயங்களை மேற்கொண்டு தான் உங்கள் ஸ்மார்ட்போனை அதிக வெப்பமாவதிலிருந்து நீங்கள் தடுக்க வேண்டும். உடனே சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டுமா? என்று கேலி செய்யாதீர்கள்.

ஸ்மார்ட்போன் அடிக்கடி ஓவர் ஹீட் ஆவதற்கு இதெல்லாம் தான் காரணமா?

ஸ்மார்ட்போன் அடிக்கடி ஓவர் ஹீட் ஆவதற்கு இதெல்லாம் தான் காரணமா?

உங்கள் போனிற்கு வேறு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். சரியாகச் சொன்னால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி ஓவர் ஹீட் (smartphone overheating problems) ஆவதை நம்மால் குறைக்க முடியும்.

ஸ்மார்ட்போன்கள் வெப்பம் ஆவதற்கு பல காரணங்கள் உள்ளது - சூரிய வெளிச்சத்திற்கு நேராக வைப்பது (direct sunlight); வெப்பமான இடத்தில் வைப்பது; சரியான காற்றோட்டம் இல்லாத இடங்களில் வைப்பது போன்றவை சில முக்கிய காரணங்களாகும்.

பிளாக் ஹோல் உள்ளே நீங்க சென்றால் என்ன ஆவீர்கள் தெரியுமா? அறிவியல் உண்மை இதான்.!பிளாக் ஹோல் உள்ளே நீங்க சென்றால் என்ன ஆவீர்கள் தெரியுமா? அறிவியல் உண்மை இதான்.!

உங்க போனை அதிக நேரம் யூஸ் செய்யுறீங்களா?

உங்க போனை அதிக நேரம் யூஸ் செய்யுறீங்களா?

இதைத் தவிர்த்து நாள் முழுவதும் ஸ்மார்ட்போனை பயன்படுத்திக் கொண்டே இருந்தால் கூட உங்கள் போன் ஹீட்டிங் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். பேட்டரி அதிக நேரம் வேலை பார்த்தால் கூட உங்கள் போன் ஓவர் ஹீட் ஆகலாம்.

அதிக அளவில் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால் அவை பேக்ரவுண்டில் செயல்பட்டுக் கொண்டே இருக்கும், இதன் காரணமாகவும் பேட்டரி சூடாகலாம்.

அளவுக்கு மீறி சார்ஜ் செய்தால் கூட போன் பாதிக்கப்படுமா?

அளவுக்கு மீறி சார்ஜ் செய்தால் கூட போன் பாதிக்கப்படுமா?

மற்றொரு முக்கிய காரணமாக ஓவர் சார்ஜிங் (over charging habit) பழக்கம் இருக்கும் பயனர்களின் ஸ்மார்ட்போன்கள் அதிகமாகச் சூடாகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி சார்ஜிங் செய்வதும், நீண்ட நேரம் சார்ஜிங் செய்வதும், 100% நிறைந்த பிறகும் போனை சார்ஜிங்கில் அப்படியே வைப்பதும் கூட காரணமாக கூறப்படுகிறது. இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன் பேட்டரி இனி தனியா வரணும்.! புது சட்ட சிக்கல்.! இது நன்மையா தீமையா?ஸ்மார்ட்போன் பேட்டரி இனி தனியா வரணும்.! புது சட்ட சிக்கல்.! இது நன்மையா தீமையா?

இந்த தவறை நாம் எல்லோருமே தெளிவாக செய்கிறோம்.!

இந்த தவறை நாம் எல்லோருமே தெளிவாக செய்கிறோம்.!

சூரிய வெளிச்சத்தில் போனை நேரடியாக வைப்பது உங்கள் போனை ஓவர் ஹீட் ஆவதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

சூரியனிலிருந்து வரும் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் உங்கள் போன் எளிதாக உள்வாங்கிக் கொண்டு விரைவில் ஓவர் ஹீட் ஆகிறது.

இதைத் தவிர்க்கச் சூரிய வெளிச்சத்தில் நேரடியாகப் படாதவாறு உங்கள் போனை வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக கார் கண்ணாடிக்கு அருகில் சூரிய ஒளி படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

50 வருடத்தில் பூமி இவ்வளவு மோசமா மாறிடுச்சா? NASA வெளியிட்ட வீடியோ சாதாரணமில்ல.!50 வருடத்தில் பூமி இவ்வளவு மோசமா மாறிடுச்சா? NASA வெளியிட்ட வீடியோ சாதாரணமில்ல.!

உங்கள் ஸ்கிரீன் பிரைட்னெஸ் செட்டிங்ஸை உடனே செக் செய்யுங்கள்.!

உங்கள் ஸ்கிரீன் பிரைட்னெஸ் செட்டிங்ஸை உடனே செக் செய்யுங்கள்.!

உங்கள் திரையின் பிரைட்னஸ் (disple brightness) ஐ அதிகமாக வைத்தால் உங்கள் பேட்டரி கூடுதல் வேலை பார்க்க நேரிடும் - இதன் காரணமாகவும் உங்கள் ஸ்மார்ட்போன் சீக்கிரம் ஓவர்ஹீட் ஆகலாம்.

எனவே, உங்கள் ஸ்கிரீன் பிரைட்னஸை குறைத்து வைத்து பயன்படுத்துவது நல்லது.

மேலும் ஆண்டி கிளாஸ் ஸ்கிரீன் ப்ரொடக்ஷனை பயன்படுத்தினால் சூரிய வெளிச்சத்தில் போன் உபயோகிக்கும் போது ஸ்கிரீன் பிரைட்னஸ்ஸை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது.

உங்க சார்ஜர் கூட உங்கள் போனை ஓவர் ஹீட் ஆக செய்யுமா?

உங்க சார்ஜர் கூட உங்கள் போனை ஓவர் ஹீட் ஆக செய்யுமா?

விலை கம்மியா இருக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு சார்ஜர் ஹெட்டை (smartphone charger head) பயன்படுத்தக் கூடாது. உங்களது ஸ்மார்ட்போன் நிறுவனம் பரிந்துரை செய்த தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து மட்டுமே சார்ஜரை (branded phone chargers) வாங்கி பயன்படுத்த வேண்டும்.

சேதமான சார்ஜரையோ அல்லது உங்கள் சார்ஜிங் போர்ட் சேதம் ஆகி இருந்தாலோ அதனைச் சரி செய்த பின்பு தான் போனை சார்ஜ் செய்ய வேண்டும். கோளாறான சார்ஜரால் உங்கள் போன் ஓவர் ஹீட் ஆகிவிடும்.

இந்த காரணம் உங்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.!

இந்த காரணம் உங்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.!

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு காரணம் தான், அதிகப்படியான பேக்ரவுண்ட் ஆப்ஸ்-கள் (background mobile apps) செயல்பாட்டில் இருந்தால் பேட்டரி சூடாகி போன் ஓவர் ஹீட் ஆக வாய்ப்புகள் அதிகம்.

எனவே, நீங்கள் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் ஆப்புகளை (smartphone apps) டர்ன் ஆப் செய்து கொள்வது நல்லது. அதேபோல், உங்கள் போனில் இருக்கும் ஆப்ஸ்களை அப்டேட்டில் (apps update) வைத்துக்கொள்வதும் முக்கியமானது.

பூமி போன்ற 2 கிரகங்கள் கண்டுபிடிப்பு? உயிரை ஆதரிக்கும் பூமி 2.0 எங்கிருக்கிறது?பூமி போன்ற 2 கிரகங்கள் கண்டுபிடிப்பு? உயிரை ஆதரிக்கும் பூமி 2.0 எங்கிருக்கிறது?

சூடான போனை குளிர்விப்பது எப்படி? இது தான் சரியான மெத்தட்.!

சூடான போனை குளிர்விப்பது எப்படி? இது தான் சரியான மெத்தட்.!

சரி, இப்போது சூடான உங்கள் போனை எப்படிக் குளிரவைப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.

முதலில் உங்கள் போனை பேன் முன் வைக்க வேண்டும் அல்லது நிழலான தரையில் வைக்க வேண்டும்.

ஓவர் அறிவாளியாகச் செயல்படுவதாக நினைத்து, உங்கள் போனை பிரிட்ஜ் அல்லது ஃபிரீஸர் பாக்சில் வைத்துவிடாதீர்கள்.

பிறகு உங்கள் போனுடன் பிரிட்ஜெ வெடிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் போனின் மொபைல் கேஸ்.. ப்ளூடூத்.. எல்லாமே செக் செய்யணும்.!

உங்கள் போனின் மொபைல் கேஸ்.. ப்ளூடூத்.. எல்லாமே செக் செய்யணும்.!

போன் சூடானால் உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் அதன் மேல் இருக்கும் மொபைல் கேஸை (mobile case) கழட்டுவதாகத் தான் இருக்க வேண்டும்.

உங்கள் போனின் ப்ளூடூத் (bluetooth) அம்சத்தை ஆப் (off) செய்யுங்கள். உங்கள் போனை Airplane mode-ல் வைத்துக்கொள்ளுங்கள்.

கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் மற்ற டிவைஸ்களில் இருந்து தனித்திடுங்கள் (unpair other device). இப்படிச் செய்தால் உங்கள் போனின் சூட்டை உங்களால் தணிக்க முடியும்.

முழு நட்சத்திரத்தை விழுங்கிய ராட்சச பிளாக்ஹோல்.! ஸ்டாரை தடயமே இல்லாமல் அழித்த வீடியோ.!முழு நட்சத்திரத்தை விழுங்கிய ராட்சச பிளாக்ஹோல்.! ஸ்டாரை தடயமே இல்லாமல் அழித்த வீடியோ.!

ஓவர் ஹீட்டிங் சிக்கலால் என்னவெல்லாம் நடக்கும்?

ஓவர் ஹீட்டிங் சிக்கலால் என்னவெல்லாம் நடக்கும்?

இந்த சிறிய-சிறிய மாற்றங்களை எல்லாம் பக்குவமாய் கண்காணித்து வந்தாலே உங்கள் போன் ஓவர் ஹீட் ஆவதை குறைக்க முடியும்.

இதைச் செய்யத் தவறினால், ஓவர் ஹீட் மூலம் உங்கள் போனின் பேட்டரி அடிக்கடி டிரெயின் ஆகும். அவ்வளவு ஏன், உங்கள் போனின் முக்கியமான பகுதிகள் உருக கூட வாய்ப்புகள் உண்டு.

இதனால், உங்கள் போன் ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்யப்பட்டு மீண்டும் ஆன் ஆகாமலே கூட போகலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போனை பாதுகாப்பாகப் பயன்படுத்த இந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Try These Top Tips To Stop Your Smartphone From Getting Into Overheating Problems

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X