ஐபோனில் ஸ்பேஸ் இல்லையா, அப்ப இதை ட்ரை பன்னுங்க பாஸ்..
ஆப்பிள் கருவிகளை பயன்படுத்துகின்றீர்களா, அவ்வப்போது ஸ்பேஸ் இல்லை என்ற தகவல் உங்களை எரிச்சலூட்டுகின்றதா, கவலை கொள்ளாமல், மெமரியை நீட்டிப்பது எப்படி என்பதை பாருங்கள்.
அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஐபோன் அல்லது ஐபேட் போன்ற கருவிகளில் மெமரியை நீட்டிப்பது எப்படி என்பதை பாருங்கள்..

வயர்லெஸ் ஹார்டு டிரைவ்
சீகேட் மற்றும் வெஸ்டர்ன் டிஜிட்டல் வயர்லெஸ் ஹார்டு டிரைவ்களை தயாரித்து வருகின்றன. இவைகளை உங்களது ஐஓஎஸ் கருவிகளில் வைபை மூலம் இணைத்து கொள்ள முடியும். இந்த இரு நிறுவனங்களும் அதிகபட்சம் 200 ஜிபி வரை ஸ்பேஸ் வழங்குகின்றன.

தம்ப் டிரைவ்
கம்ப்யூட்டர்களில் யுஎஸ்பி பயன்படுத்துவதை போன்று தம்ப் டிரைவ்களை ஐஓஎஸ் கருவிகளில் பயன்படுத்த முடியும்.

பேட்டரி பேக்
மோஃபீ ஸ்பேஸ் பேக் உங்களது கருவின் கேஸ் போன்று இருப்பதோடு, கருவிக்கு சார்ஜ் செய்வதோடு, கருவியின் ஸ்டோரேஜினை இரு மடங்கு அதிகரிக்கின்றது.

க்ளவுட் சர்வீசஸ்
ஐஓஎஸ் கருவிகளில் போதிய ஸ்பேஸ் இல்லை என வருந்துபவர்களுக்கு க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








