நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?

|

பெரும்பாலான மக்களுக்கு, கூகுள் மேப்ஸ் என்பது ஒரு இடத்தில் இருந்து அவர்கள் செல்ல விரும்பும் மற்றொரு இடத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்வதற்கான வழியைத் தெளிவாகக் காண்பிக்கும் ஒரு பயனுள்ள கருவியாகும். ஆனால், ஆர்வமுள்ள ஒரு சில சிறிய குழுவினருக்கு, கூகிள் மேப்ஸ் மூலம் உலகைச் சுற்றிப் பார்ப்பது என்பது ஒரு பொழுது போக்கு அம்சமாக இருக்கிறது. இவர்களுக்குக் கூகிள் மேப்ஸ் மூலம் பூமியின் விசித்திரமான மர்மங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு ஆதாரம் தேடுவதே வேலையாகிவிட்டது.

கூகிள் மேப்ஸ் வரைபடத்தில் காட்டப்பட்ட மர்ம இடம்

கூகிள் மேப்ஸ் வரைபடத்தில் காட்டப்பட்ட மர்ம இடம்

அப்படி சமீபத்தில், ஒரு ஆர்வமுள்ள நபர் கூகிள் மேப்ஸ் மூலம் பூமியின் வரைபடத்தைக் கண்காணித்த போது, நாடுகளுக்குள் ஒரு ராட்சத கருப்பு புள்ளியைக் கண்டிருக்கிறார். நாடுகளில் எப்படி இது போன்ற ஒரு அசாதாரண உருவம் தோன்ற முடியும். இதன் பின்னணியில் ஏதோ மர்மம் ஒளிந்துள்ளது என்று கணித்து. கூகிள் மேப்ஸ் வரைபடத்தில் காட்டப்பட்ட அந்த மர்ம இடத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு நெட்டிசன்ஸ்களின் ஆர்வத்திற்குத் தீனியாக்கினர்.

Google Maps காட்டிய படத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

Google Maps காட்டிய படத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

நீங்கள் இந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தால், யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை மறைப்பது போல் தோன்றும் விசித்திரமான படமாக இது காட்சியளிக்கிறது. அல்லது, இது Google Maps செயலியில் இருக்கும் எதோ பிழை காரணமாகச் சரியாக வேலை செய்ய வேண்டிய விஷயத்தில் கோளாறு எழுந்ததற்கான காரணங்களுக்கான அறிகுறிகளாக இது இருக்கலாமா என்று பலர் பலபட்ட கருத்தை இணையத்தில் முன் வைத்துள்ளனர். ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மையை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?

கடலின் நடுவில் காணப்பட்ட கருந்துளை நிறம்

கடலின் நடுவில் காணப்பட்ட கருந்துளை நிறம்

உண்மை ஏதுவாக இருந்தாலும், இது இப்போது விவாதத்தைத் தூண்டும் ஒரு பேசும் பொருளாக மாறிவிட்டது. கூகிள் மேப்ஸைப் பயன்படுத்தும் போது, ​​ரெடிட் பயனர் ஒருவர் கடலின் நடுவில் ஒரு கருந்துளையைக் கண்டறிந்தபோது இந்த அசாதாரணம் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் சப்ரெடிட் பக்கத்தில் கோகோபிளாக்ஸ் எழுதியது , "இது என்ன? இது ஒரு தீவு போல் தெரியவில்லை." என்றும், இந்த தீவு ஒரு இரகசிய இராணுவ தளமாக இருக்கலாம் என்று ஆரம்பக்கால பரிந்துரைகள் கூறுகின்றன.

கடலுக்கு நடுவில் 'சென்சார்' செய்யப்பட்ட தீவா?

கடலுக்கு நடுவில் 'சென்சார்' செய்யப்பட்ட தீவா?

"சில காரணங்களுக்காக இந்த தீவு சென்சார் செய்யப்பட்டதாகத் தெரிகிறது," என்று கோர்விஸ்கான் தனது பதிவில் எழுதியுள்ளார். இணையத்தில் இந்த பதிவு வெளியானது கோட்பாட்டர்களின் கருத்துக்கள் காட்டுத்தீயாய் பரவத்துவங்கியது. "எனது முதல் எண்ணம் இது தணிக்கை செய்யப்பட்டுள்ளது" என்று Jazzlike_Log_709 பதிலளித்தது. "இவ்வளவு ஆழமற்ற, சிறிய பவளப்பாறை தீவில் ஒரு இயற்கை உருவாக்கம் கருப்பு நிறத்தில் இருப்பது அர்த்தமற்றது." என்று மற்றொரு நபர் இணையத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!

கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் மங்கலான இடங்களை பார்த்தால் இது தான் அர்த்தம்

கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் மங்கலான இடங்களை பார்த்தால் இது தான் அர்த்தம்

கூகுள் அடிக்கடி இராணுவத் தளங்கள் அல்லது சிறைக் கூடங்கள் போன்ற "சில முக்கிய பாதுகாப்பு" தளங்களைக் கூகிள் மேப்ஸ் மங்கலாக்கியே பயனர்களுக்குக் காட்டுகிறது என்பதே உண்மையாக இருக்கிறது. அவற்றின் இருப்பிடம் மற்றும் அமைப்பு பற்றிய தகவல்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதற்காக இதைக் கூகிள் நிறுவனம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி, இந்த தீவும் மறைக்கப்பட்டுள்ளதா என்று மற்றொரு தரப்பு கருத்துக்களை வெளியிட்டது. ஆனால், இது கூகிளின் செயல் இல்லை என்பது தெளிவானது.

தீவு கருமையாக இருக்க என்ன காரணம்?

தீவு கருமையாக இருக்க என்ன காரணம்?

கடலுக்கு நடுவில் தோன்றிய இந்த கரும்புள்ளியைச் சுற்றிப் பல கோட்பாடுகள் வெளியாகின, "இது ஒரு நிலத்தடி எரிமலையாக இருக்கலாம், இது தான் அந்த தீவு கருமையாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் சிலர் கருதினர். இன்னும் சில பயனர்கள் இடுகையில் கேலி செய்ய வாய்ப்பைப் பயன்படுத்தினர், இது "லாஸ்ட்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தீவாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர். இன்னும் சிலர் "இது வெற்று பூமியின் நுழைவாயில்" என்றும் கூறியுள்ளனர்.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

ஹாலோ எர்த் கோட்பாட்டை இது குறிக்கிறதா?

ஹாலோ எர்த் கோட்பாட்டை இது குறிக்கிறதா?

பூமி முழுவதுமாக வெற்று என்று பரிந்துரைக்கும் ஹாலோ எர்த் கோட்பாட்டை இது குறிக்கிறது. இப்படிப் பல விசித்திரமான கருத்துக்களைத் தாண்டி ஒரு வழியாக இந்த நடுக்கடல் கருந்துளைக்குப் பின்னணியில் இருந்த உண்மை வெளியிடப்பட்டது. கூகிள் மேப்ஸில் காணப்படும் இந்த மர்மமான இடம் 'வோஸ்டாக் தீவு' என்பதை விஷயம் தெரிந்தவர்கள் வெளிப்படுத்தினர். விசித்திரமான கோட்பாடுகளை வெளியிட்ட அனைவரும் ஏமாற்றம் அடைந்தார்கள். இருப்பினும், ஒரு தீவு எப்படி கருப்பாகக் காட்சியளிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் இந்த தீவு கருப்பு நிறத்தில் இல்லையா?

உண்மையில் இந்த தீவு கருப்பு நிறத்தில் இல்லையா?

இது நியூசிலாந்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது மற்றும் மத்திய பசிபிக் பகுதியில் உள்ள 33 பவள பவளப்பாறைகள் மற்றும் தீவுகளை உள்ளடக்கிய தீவு நாடான கிரிபட்டி குடியரசிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையைச் சொல்லப் போனால், இது எந்தவொரு கோளாறு காரணமாகவும் எழவில்லை என்பது தெரிந்தது. கூகிள் மேப்ஸ் தகவலைச் சரியாகத் தான் காண்பித்துள்ளது என்பதும் உண்மை. ஆனால், படத்தில் காட்டப்பட்ட தீவு கருமையாக இருக்கவில்லை என்பதும் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டிய விஷயம்.

பால்வெளி மையத்திலிருந்து வெளிவந்த ரேடியோ சிக்னல்.. மர்மத்தை கட்டவிழ்க்க போராடும் வானியலாளர்கள்..பால்வெளி மையத்திலிருந்து வெளிவந்த ரேடியோ சிக்னல்.. மர்மத்தை கட்டவிழ்க்க போராடும் வானியலாளர்கள்..

இப்படி ஒரு பின்னணி உண்மையை ஏற்க மறுத்த இணையம்

இப்படி ஒரு பின்னணி உண்மையை ஏற்க மறுத்த இணையம்

நீங்கள் படத்தில் 'கருப்பு' நிறமாகப் பார்ப்பது உண்மையில் மிகுந்த அடர் பச்சை நிறமாகும். இந்த அடர் பச்சை நிறத்திற்குப் பின்னணியில் பிசோனியா மரங்களால் ஆன ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவு பற்றி இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் எல்லாம் கூகிளில் உள்ளது. இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கிய இந்த படத்தின் பின்னணியில் இருந்த உண்மை ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி என்பதைப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Truth Behind Mysterious Black Hole Found In Middle Of The Pacific Ocean Went Viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X