Trump Vs Musk: உத்தரவிட்டால் மண்டியிட்டே கெஞ்சிருப்பார்., இப்போ வளர்த்த கடா மார்பில் பாயுது!

|

டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இருவருக்கும் இடையே மோதல் தொடங்கி இருக்கிறது. தான் ஒரு பெரிய டிரம்ப் ரசிகர் எனவும் குடியரசுக் கட்சிகாரர் எனவும் அடையாளம் காட்டிக் கொள்ளும் மஸ்க் பிற அனைத்து விஷயங்களுக்காகவும் மன்றாடுகிறார் என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மஸ்க்கை டிரம்ப் இப்படி விமர்சிக்கவும் இந்த மோதலுக்கு காரணம் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.

எலான் மஸ்க் டொனால்ட் டிரம்ப் மோதல்

எலான் மஸ்க் டொனால்ட் டிரம்ப் மோதல்

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் தமக்கு வாக்களித்ததாக மஸ்க் பொய் சொன்னதற்கு டிரம்ப் தற்போது தன் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதிலில் இவர்களது நட்புறவு குறித்து பார்க்கலாம்.

டிரம்பை நல்ல மனிதர் என குறிப்பிட்ட மஸ்க்

டிரம்பை நல்ல மனிதர் என குறிப்பிட்ட மஸ்க்

ட்விட்டரை மஸ்க் கைப்பற்றியதாக இணையதளத்தில் செய்திகள் வெளியான போது, மஸ்க் ஒரு நல்ல மனிதர் என டிரம்ப் குறிப்பிட்டார். தொடர்ந்து டிரம்ப் இன் ட்விட்டர் கணக்குக்கு தடை விதித்தமைக்கு மஸ்க் பகிரங்கமான விமர்சனங்களை முன் வைத்தார். சமூகவலைதளத்தில் மீண்டும் இணையும்படி டிரம்புக்கு அழைப்பு விடுத்தார், ஆனால் அவரது அழைப்பு டிரம்ப் மூலம் பணிவுடன் நிராகரிக்கப்பட்டது.

யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படையாக அறிவித்த மஸ்க்

யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படையாக அறிவித்த மஸ்க்

தொழிற்சங்கங்களின் ஆதரவோடு தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள் வழங்கப்படும் என ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து தொழிற்சங்கங்கள் இல்லாத டெஸ்லா ஆலை கொண்ட மஸ்க், ஆளுங்கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்து, தனது ஆதரவு குடியரசுக்கட்சிக்கு தான் என வெளிப்படையாக அறிவித்தார். இதில்தான் தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதையும் வெளிப்படையாக குறிப்பிட்டார்.

இனி ஆதரவு டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு தான்: மஸ்க்

இனி ஆதரவு டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு தான்: மஸ்க்

அதில் கடந்த காலத்தில் நான் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களித்தேன், ஏனென்றால் அந்த கட்சி பெரும்பாலும் கருணைக் கட்சியாக இருந்தது. தற்போது இந்த கட்சி பிரிவு மற்றும் வெறுப்பின் கட்சியாக மாறிவிட்டது. எனவே இனி என்னால் அவர்களை ஆதரிக்க முடியாது. இனி குடியரசுக் கட்சிக்கு தான் வாக்களிப்பேன் என தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் ஆத்திரமடைய காரணம்

டொனால்ட் டிரம்ப் ஆத்திரமடைய காரணம்

இதன்மூலம் இதுநாள் வரை எலான் மஸ்க் ஜனநாயகக் கட்சிக்கு தான் ஆதரவளித்திருக்கிறார் என்பதை அறிந்த டொனால்ட் டிரம்ப் தனது கோபத்தை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார். ஜனநாயகக் கட்சியில் இருந்து குடியரசு கட்சிக்கு வருவது நல்லது தானே. பிறகு ஏன் டிரம்ப் கோபமடைய வேண்டும் என்ற கேள்வி வரலாம். அதற்கும் காரணம் இருக்கிறது.

டிரம்பிற்கு கோபம் வருமா., வராதா?

டிரம்பிற்கு கோபம் வருமா., வராதா?

டிரம்ப் அதிபராக இருந்த போது மஸ்க் அவரை நேரில் சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது தன்னை ஒரு பெரிய டிரம்ப் ரசிகர் என்றும் குடியரசுக் கட்சிகாரர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த தேர்தலில் டிரம்ப் இன் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்து ஜனநாயகக் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு தான் ஆதரவளித்தேன் என தற்போது மஸ்க் வெளிப்படையாக குறிப்பிட்டிருக்கிறார். டிரம்பிற்கு கோபம் வருமா., வராதா?

மற்றொரு புல்ஷிட் (மோசமான) கலைஞர்

மற்றொரு புல்ஷிட் (மோசமான) கலைஞர்

இந்த நிலையில் தான் டிரம்ப் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "மஸ்க் தனக்கு வாக்களித்ததாக பொய் சொன்னார் அவர் மற்றொரு புல்ஷிட் (மோசமான) கலைஞர்" என டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்பின் இந்த விமர்சனத்துக்கு மேலோட்டமான பதிலை மஸ்க் அளித்துள்ளார்.

டிரம்புக்கு பதிலளித்த எலான் மஸ்க்

டிரம்புக்கு பதிலளித்த எலான் மஸ்க்

டிரம்புக்கு பதிலளித்த மஸ்க், "தான் அந்த மனிதரை வெறுக்கவில்லை, ஆனால் டிரம்ப் சூரிய அஸ்தமன நேரத்தில் பயணம் செய்ய வேண்டிய நேரம் இது" என குறிப்பிட்டுள்ளார். அதாவது டிரம்ப் மாலை நேரத்தில் வாக்கிங் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது ஓய்வை அறிவித்துவிடலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப் உயிர் வாழ்வதற்கான ஒரே வழி ஜனாதிபதி பதவியை மீண்டும் பெறுவது தான் எனவும் மஸ்க் குறிப்பிட்டார்.

முழங்கால் மண்டியிட்டு கெஞ்சுங்கள் என நான் கூறியிருக்கலாம்

முழங்கால் மண்டியிட்டு கெஞ்சுங்கள் என நான் கூறியிருக்கலாம்

இதையடுத்து டிரம்ப் ஆக்ரோஷமான பதிலை தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் இருந்த போது எலான் மஸ்க் அவரை சந்திக்க நேரில் சென்ற நிகழ்வு அது. "எலான் மஸ்க் தனது பல திட்டங்களின் மானியங்களுக்காக என்னிடம் உதவி கேட்டு வெள்ளை மாளிகைக்கு வந்த போது, அவர் பல தோல்விகளை சந்தித்திருந்தார். மானியம் இல்லாமல் எதையும் செய்ய முடியாத நிலையில் பயனற்றவராக இருந்தார். தன்னிடம் தான் ஒரு பெரிய டிரம்ப் ரசிகர் என்றும் குடியரசுக் கட்சிக்காரர் எனவும் மஸ்க் தெரிவித்தார், முழங்கால் மண்டியிட்டு கெஞ்சுங்கள் என நான் கூறியிருக்கலாம், அவர் அதையும் செய்திருப்பார் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
Trump Vs Musk: Elon Musk Begged for Subsidies says Donald Trump

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X