உலக நாட்டாமையின் சொம்பு ஒடுங்கியது.!

இந்நிலையில், உலக நாடுகளுக்காக அமெரிக்கா இனி போலீஸ் வேலை பார்க்காது என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது, அமெரிக்காவின் சொம்பு தற்போது ஒடுங்கியுள்ளதை காட்டுகின்றது.

|

அமெரிக்கா என்றாலே பஞ்சாயத்து செய்யும் நாட்டாமை என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல்வேறு நாடுகளில் பிரச்னைகளிலும் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வருகின்றது.

எந்த நாட்டில் பிரச்னை நடந்தாலும், அங்கு தனது படை, போலீஸ் உள்ளிட்டவைகளை அனுப்பி நாட்டாமையாக அமர்ந்து பஞ்சாயத்து செய்து, பிரச்னை தீர்க்கும் நாடு அமெரிக்கா.

உலக நாட்டாமையின் சொம்பு ஒடுங்கியது.!

உலக அரங்கில் அமெரிக்கா இன்று வரை நாட்டாமையாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில், நாட்டாமை பஞ்சாயத்துக்கு சென்றாலும் அவர் எச்சில் துப்ப பயன்படுத்தும் சொம்பு முக்கியமானதாக இருக்கும்.

இந்நிலையில், உலக நாடுகளுக்காக அமெரிக்கா இனி போலீஸ் வேலை பார்க்காது என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது, அமெரிக்காவின் சொம்பு தற்போது ஒடுங்கியுள்ளதை காட்டுகின்றது. இது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

 ஈராக் பயணம்:

ஈராக் பயணம்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாஷிங்டனில் இருந்து டிரம்ப்புடன் புறப்பட்ட விமானம், மேற்கு ஈராக்கின் அல் அசாத் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

100 சிறப்பு படை வீரர்களுடன் சந்திப்பு:

100 சிறப்பு படை வீரர்களுடன் சந்திப்பு:

ஈராக்க நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க ராணுவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சிறப்பு பிரிவு வீரர்களை சந்தித்து டிரம்ப் கலந்துரையாடினார்.

 ஈராக் பிரதமர் சந்திப்பு ரத்து:

ஈராக் பிரதமர் சந்திப்பு ரத்து:

இதனை தொடர்ந்து ஈராக் பிரதமர் அடெல் அப்தெல் உடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்தார். ஆனால் அவருடன் தொலைபேசியில் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிரியா, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்ப பெறும் முடிவில் உறுதியாக உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

வேறு நாடுகளுக்கு கொடுக்க முடியாது:

வேறு நாடுகளுக்கு கொடுக்க முடியாது:

அமெரிக்கா மட்டுமே தனக்கு முக்கியம் என்றும் அமெரிக்காவின் செல்வத்தை வேறு நாடுகளுக்கு இலவசமாக கொடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். கூட்டுப்படைகள் என்கிற பெயரில் மற்ற நாட்டு ராணுவத்தற்கும் அமெரிக்கா செலவு செய்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

போலீஸ் வேலை பார்க்காது:

போலீஸ் வேலை பார்க்காது:

மேலும் உலக மக்கள் பலருக்கும் தெரியாத நாடுகளுக்கு கூட அமெரிக்கா ராணுவ வீரர்களை அனுப்பி பாதுகாப்பு வழங்கி வருவதாக அவர் கூறினார். இனியும் அந்த நாடுகளுக்கு போலீஸ் வேலை பார்க்க விரும்பவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

வரிப்பணம் வீணாகிறது:

வரிப்பணம் வீணாகிறது:

வேறு நாடுகளுக்கு அமெரிக்கா ராணுவ வீரர்களை அனுப்பி அந்நாட்டை பாதுகாப்பதன் மூலம் தங்கள் நாட்டு மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சொம்பு ஒடுங்கியது:

சொம்பு ஒடுங்கியது:

உலகத்திற்கே பஞ்சாயத்து செய்து நாட்டாமையாக இருக்கும் அமெரிக்காவின் சொம்பு தற்போது ஒடுங்க துவங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
trump visit angers iraqi lawmakers spurs calls for us pullout : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X