Home
News

Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன?- அது எங்க இருக்கு?-கூகுளை கலங்கடித்த அமெரிக்கா!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது குடும்பத்தாருடன் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் அகமதாபாத், சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார்.

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப்

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப்

இதனைத் தொடர்ந்து மோதிரா விளையாட்டு மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் சிறப்புரையாற்றினார். அகமதாபாத் நிகழ்ச்சிகளை நிறைவுசெய்த பின்னர், ஆக்ரா சென்றார் டிரம்ப். அங்கு மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலின் அழகை 1 மணிநேரம் ரசித்து மகிழ்ந்தார்.

இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வாரமாகக் கூகுளில் தேடப்பட்டவை

ஒரு வாரமாகக் கூகுளில் தேடப்பட்டவை

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகக் கூகுளில் சில கேள்விகள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றன. அந்தக் கேள்விகளில் பலவற்று வியக்க வைக்கும் விதமாக உள்ளது. இதில் தொடர்புடைய இந்தியா மற்றும் அமெரிக்கா நாட்டில் தேடப்பட்ட கேள்விகள் குறித்து தனித்தனியாக பார்க்கலாம்.

டொனால்ட் டிரம்ப் பாகுபலி

டொனால்ட் டிரம்ப் பாகுபலி

இந்தியர்கள் டிரம்பக் குறித்து தேடும்போது டிரம்ப் தங்கியிருந்த ஐடிசி மயூரா சொகுசு ஹோட்டல் குறித்து பலர் தேடியுள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் டொனால்ட் டிரம்ப் பாகுபலி என பலர் தேடியுள்ளனர். இந்திய அளவில் பெரிதும் வரவேற்பு பெற்ற படம் பாகுபலி. இந்த படத்தில் டிரம்ப்பை பாகுபலியாக சித்தரித்து டுவிட்டரில் ஒருவர் வடிவமைத்திருந்தார்.

டிரம்ப் செய்த ரீடுவிட்

டிரம்ப் செய்த ரீடுவிட்

டிரம்ப் பாகுபலி வீடியோவை டிரம்ப் இந்தியா வருவதற்கு முன்பு ரீடுவிட் செய்திருந்தார். இதையடுத்து இந்த வீடியோ பிரபலமானது. இருப்பினும் அந்த வீடியோ பல்வேறு காரணங்களால் டெலிட் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீடியோவை கூகுளில் பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் தேடித் தொடங்கினர்.

டிரம்ப் மகள் இவாங்க டிரம்ப் மற்றும் அவரது கணவர்

டிரம்ப் மகள் இவாங்க டிரம்ப் மற்றும் அவரது கணவர்

டொனால்ட் டிரம்ப் குடும்பம் குறித்தும் அவரது மகள் இவாங்க டிரம்ப் மற்றும் அவரது கணவர் ஜரேட் கூஷ்னர் குறித்து சிலர் கூகுளை நாடியுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையானது குஜராத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா எங்கே இருக்கிறது

இந்தியா எங்கே இருக்கிறது

அதேபோல் அமெரிக்காவை பொருத்தவரை சற்று வித்தியாசமாக தேடியுள்ளனர் என்றே கூறலாம். அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியா வருகிறார் என்று தெரிந்ததும் தங்கள் நாட்டு அதிபர் செல்லும் இந்தியா எங்கே இருக்கிறது என்ற தேடியுள்ளனர்.

இந்தியா என்றால் என்ன

இந்தியா என்றால் என்ன

இரண்டாவது என்னவென்று பார்த்தால் சற்று ஆச்சரியப்படுவிர்கள். இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா என்றால் என்ன என்ற வார்த்தை. இந்த கேள்வியை என்ன நோக்கில் தேடியிருப்பார்கள் என தெரியவில்லை. இந்தியா என்றால் என்ன என தேடுவது சற்று ஆச்சரியமாகத் தான் உள்ளது என்றே கூறலாம்.

நமஸ்தே என்றால் என்ன

நமஸ்தே என்றால் என்ன

மேலும் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் நமஸ்தே என்றால் என்ன அர்த்தம் என்று கூகுளில் தேடியுள்ளனர். அதேபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்றும் இந்திய பிரதமர் என்றும் சிலர் தேடியுள்ளனர் என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Trump visit: Americans are searching for what is india and where is india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X