Jio அந்த விஷயத்தை செய்யுமா ?- டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்
அமெரிக்க தூதரகத்தில் இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றி வருனார். இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள டிரம்ப்
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பை குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் அகமதாபாத், சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். அதன்பின் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதோடு தாஜ்மஹாலையும் பார்வையிட்டார். அதன்பின் டெல்லியில் தொழிலதிபர்கள் முன்னிலையில் டிரம்ப் பேசினார்.

இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அதிபர் டிரம்ப்
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றி வருனார். இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலைவாய்ப்பை தொழிலதிபர்கள் தான் உருவாக்க வேண்டும்
அந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், அனைத்துக்கும் அரசையே தொழிலதிபர்கள் எதிர்பார்க்கக் கூடாது என்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதில் தொழில்துறையினர் முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் டிரம்ப கூறினார்.

மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா
மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்கள் மிகச் சிறந்த திட்டங்களாகும் என்று கூறிய டிரம்ப், இந்தியா அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்குவது அமெரிக்காவுக்கு பெருமை எனவும் கூறினார்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே தனது நோக்கம்
அதேபோல் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே தனது நோக்கம் என்று கூறிய டிரம்ப் தான் வரும் தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று அமெரிக்க அதிபரானால் அமெரிக்கப் பங்குச் சந்தை வளர்ச்சி அடையும் என்று நம்புவாத கூறினார்.

அதிபர் டிரம்பிடம் ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானி
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் டிரம்பிடம் ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானி தங்கள் நிறுவனத்தின் முதலீடு குறித்து பேசினார். அதில் தாங்கள் அமெரிக்க எரிசக்தி துறையின் முதலீட்டாளர்களாக இருப்பதாக கூறினார்.

7 பில்லியன் டாலர் வரை முதலீடு
மேலும் அதற்காக 7 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இதைகேட்ட டிரம்ப், 7 பில்லியன் டாலர் பெரிய முதலீடு எனவும் நீங்கள் சிறந்த செயல் செய்துள்ளீர்கள் என்று கூறியதோடு நன்றி தெரிவித்து பாராட்டினார்.

சீன சாதனங்களை பயன்படுத்தாத ஒரே இந்திய நிறுவனம்
அதன்பின் டிரம்ப், ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானியிடம் ஜியோ 4ஜி துறை போன்றே 5 ஜி-யிலும் அடியெடுத்து வைக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு அம்பானி, உலகளவில் சீன கூறுகளைப் பயன்படுத்தாமல் 5 ஜி சோதனை செய்து வரும் ஒரே நிறுவனம் ஜியோ எனவும், சீன சாதனங்களை பயன்படுத்தாத ஒரே இந்திய நிறுவனம் நாங்கள் தான் எனவும் பெருமையோடு கூறினார்.

ஹூவாய் நிறுவனத்தை தடுப்புப் பட்டியலில் சேர்த்த டிரம்ப்
உளவுத்துறையில் சீன அரசாங்கத்திற்கு உதவுவதாகக் குற்றம் சாட்டி, ஹூவாய் நிறுவனத்தை தடுப்புப் பட்டியலில் சேர்க்க டிரம்ப் 2019 மே மாதம் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சீன அரசாங்கத்திடமிருந்து அவர்கள் பெறும் வலுவான ஆதரவின் காரணமாக அமெரிக்கா ஹவாய் நிறுவத்தை தடுப்பு பட்டியலில் சேர்த்தது.

பல்வேறு நாடுகளும் தடை
இதையடுத்து சீன தொலைத் தொடர்பு கியர் விற்பனையாளர்களான ஹூவாய் மற்றும் ZTE ஆகியவை பாதுகாப்பு அச்சுறுத்தல் அமெரிக்கா இந்த இரு நிறுவனங்களுக்கு தடை விதித்தது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் இந்த இரு நிறுவனங்கள் 5 ஜி நெட்வொர்க்குகளில் பங்கேற்க தடை விதித்துள்ளன.

சீன சாதனங்களை பயன்படுத்தாமல் 5ஜி சேவை செய்கிறோம்
அதேபோல் வாஷிங்டன் கடந்த காலங்களில் இந்தியா 5ஜி சேவையில் ஹூவாய் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், 5 ஜி சோதனைகளில் பங்கேற்க ஹவாய் மற்றும் ZTE ஆகிய நிறுவனங்களு இந்திய அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் தாங்கள் சீன சாதனங்களை பயன்படுத்தாமல் 5ஜி சேவை செய்கிறோம் என்று அம்பானி கூறியதன் மூலம் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட ஹூவாய் நிறுவன 5ஜி சேவைக்கு இந்தியாவில் அனுமதி அளித்ததை குறிப்பிடும்படியாக பேசியுள்ளார்.
Pic Courtesy: Social media


Click it and Unblock the Notifications