சுந்தர் பிச்சையை கடுமையாக திட்டிய ஜனாதிபதி டிரம்ப்.! காரணம் இது தான்.!

|

சுந்தர் பிச்சை தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த புதிய அம்சங்களை கொண்டே வந்துகொண்டே தான் இருக்கிறார், குறிப்பாக உலகளவில் சிறந்த சிஇஒ என்ற பெயரைப் பெற்றுள்ளார் சுந்தர் பிச்சை அவர்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது டிவிட்டர் பக்கத்தின் வழியாக கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சையையும், கூகுள் நிறுவனத்தையும் தகாத வார்த்தைகளை கூறி சாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 டிரம்ப் டிவீட்-ன் துவக்கம்...

டிரம்ப் டிவீட்-ன் துவக்கம்...

டிரம்ப் தொடர்ந்து டிவிட்டர் வழியே சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவனத்தை தாக்கி பேச காரணம்? ஓவர் அலுவலகத்தில் சுந்தர் பிச்சையை சந்தித்தேன், நிர்வாகம் 2016-ம ஆண்டு நடந்த தேர்தலில் ஹுலாரி உடன் சேர்ந்து எனக்கு எதிராக என்னென்னெ செய்தீர்கள்? சீன ராணுவத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லைய? போன்ற கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் சொல்ல தடுமாறினர்...

இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் அருகில் தோன்றிய ஏலியன் விண்கலம்!இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் அருகில் தோன்றிய ஏலியன் விண்கலம்!

அதன்பின்பு வெளிவந்த ட்வீட்

அதன்பின்பு வெளிவந்த ட்வீட்

கூகுள் பொறியியலாளலான கெவின் செர்னகீயை அறியும் வரை அவர்கள் 2020 தேர்தலை சட்டவிரோதமாக பாதிப்படைய செய்வதற்க்கு திட்டமிடவில்லை என்று நம்பினேன். ஆனால் 2016-ம் ஆண்டில் அவர்கள் செய்ததை பற்றிய பயங்கரமான விஷயங்களை அறிந்ததும் டிரம்ப் தோல்வி அடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை அறியும் வரை எல்லாமே நன்றாக இருந்தது என்று தான் கூறவேண்டும்.

டிரம்ப்-ன் மூன்றாவது ட்விட்.!

டிரம்ப்-ன் மூன்றாவது ட்விட்.!

இவை அனைத்தும் சட்டவிரோதமானது, நாங்கள் கூகுளை மிகவும் உன்னிப்பாக கவனத்து வருகிறோம். பின்பு டிரம்ப் அவர்களின் இந்த கோபத்திற்கு காரணம் 2020-ல் டிரம்ப் தோற்க்க வேண்டும் என கூகுள் விருமப்புகிறது. குறிப்பாக
அது தான் (டிரம்ப் தோற்க்க வேண்டும்) அவர்களின் நோக்கம் என்று கூறிய கெவின் செர்னகீ என்பவர் சமீபத்தில் கூகுள்
நிறுவனத்தால் வேலையை விட்டு தூக்கப்பட்டவர் ஆவார்.

கெவின் செர்னகீ

கெவின் செர்னகீ

ஆனால் கெவின் செர்னகீ தனிப்பட்ட சாதனத்தில் உள்ள கூகுள் ஆவணங்களை பதிவிறக்குவது உட்பட பல நிறுவன கொள்கைகளை மீறயதற்காக அவரை வேலையை விட்டு விடுவித்ததாக கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் திட்டமிட்டுள்ளது

கூகுள் திட்டமிட்டுள்ளது

2020-ல் டிரம்ப் தோற்க்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டுள்ளது என்று கூறிய கெவின் செர்னகீயின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்று கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், முன்னால் ஊழியர் அளித்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை. அரசியல் சாராமல் செயல்படுவதே கூகுளின் கொள்ளை.

ட்ரூகாலர் செயலிக்கு இப்படியொரு சோதனையா? என்.பி.சி.ஐ எடுத்த நடவடிக்கை என்ன?ட்ரூகாலர் செயலிக்கு இப்படியொரு சோதனையா? என்.பி.சி.ஐ எடுத்த நடவடிக்கை என்ன?

பயனுள்ள உள்ளடக்கத்தை வழங்கவேண்டும் என்பதே எங்கள் கொள்கை

பயனுள்ள உள்ளடக்கத்தை வழங்கவேண்டும் என்பதே எங்கள் கொள்கை

பின்பு அரசியல் நோக்கங்களுக்காக முடிவுகளை சிதைப்பதென்பது எங்கள் வணிகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் அது பயனர்களுக்கு பயனுள்ள உள்ளடக்கத்தை வழங்கவேண்டும் என்பதே எங்கள் கொள்கை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Trump Slams Google CEO Sundar Pichai Ahead of US election 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X