Subscribe to Gizbot

அமெரிக்கா VS சீனா : மூண்டது வர்த்தக யுத்தம்; ஓவர்நைட்டில் சரிந்தது பங்கு சந்தை.!

Written By:

அமெரிக்க ஜனாதிபதியான டோனால்ட் டிரம்ப் தனது ஜனாதிபதி பதவியின் மிகப்பெரிய பொருளாதார சூதாட்ட பகடையை உருட்டியுள்ளார். சீனா மற்றும் அமெரிக்கா எனும் உலகின் இரு மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே ஏற்கனவே பதட்டமான வர்த்தக உறவுகள் நிலவிவரும் நிலைப்பாட்டில், அதை மென்மேலும் அதிகரிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதாவது சீன சரக்குகளின் மீதான சுங்க வரிகளை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்விளைவாக விழுந்த முதல் அடி - போயிங் தலைமையிலான பங்குகள் சரிந்தன.!

சீனாவின் இறக்குமதியில் குறைந்தபட்சம் 50 பில்லியன் அமெரிக்க டால்ரகள் அளவிலான சுங்க வரியை விதிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான ராபர்ட் லைத்தைஸருக்கு உத்தரவிட்டார். இதுசார்ந்த நிறைவேற்று குறிப்பாணையும் வெள்ளை மாளிகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் இன்னும் 15 நாட்களுக்குள், சீனாவிற்கு எதிராக, அதிக அளவிலான சுங்க வரியை எதிர்கொள்ளும் தயாரிப்புகளின் முன்மொழியப்பட்ட பட்டியலை வழங்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
போயிங் பங்குகளை பொறுத்தமட்டில்..

போயிங் பங்குகளை பொறுத்தமட்டில்..

இந்த வர்த்தக யுத்தத்தின் விளைவாக, டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 724 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது, அதாவது கிட்டத்தட்ட 3 சதவிகித வீழிச்சி. இது கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிலான மிகப்பெரிய வீழ்ச்சியாகும். போயிங் பங்குகளை பொறுத்தமட்டில் 5 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒரு உண்மைத் தகவலின் படி..

ஒரு உண்மைத் தகவலின் படி..

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்டுள்ள ஒரு உண்மைத் தகவலின் படி, சீனாவின் வர்த்தக கொள்கைகளிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்படும் தீங்குகளை ஈடுகட்டும் முனைப்பின்கீழ் தான் சீன தயாரிப்புகளின் மீது 25 சதவிகிதம் அளவிலான வரி அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.

அடுத்த வரும்சில நாட்களில்..

அடுத்த வரும்சில நாட்களில்..

முன்மொழியப்பட்ட தயாரிப்பு பட்டியலில் - விண்வெளி, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் உட்பட பல சீன பொருட்கள் உள்ளடக்கம் என்பதும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகமானது, முன்மொழியப்பட்ட வரி அதிகரிப்பு பட்டியலை அடுத்த வரும்சில நாட்களில் அறிவிக்க உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிவார்ந்த சொத்து திருட்டு.!

அறிவார்ந்த சொத்து திருட்டு.!

இது (சீனாவிற்கு எதிரான நடவடிக்கையானது) நீண்ட காலமாக தயாரிக்கப்பட்ட (திட்டங்களில்) ஒன்றாகும்" என்றும், இந்த வரி அதிகரிப்பின் விளைவாக 60 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சரக்கு பொருட்கள் பாதிக்கக்கூடும் என்றும், டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க வர்த்தகத்தில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் அளவிலான சரிவை ஏற்படுத்தும் சீனாவினால் "ஒரு மிகப்பெரிய அறிவார்ந்த சொத்து திருட்டு சூழ்நிலை நிலவுகிறது" என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை சார்ந்த ஆவணங்களில் கையெழுத்திட்டபோது, ​​டிரம்ப் நிருபர்களிடம் "இது அனைத்திற்கும் மேலானது" என்று சூசகமாக கூறியுள்ளார்.

போராடுவோம், பழிவாங்குவோம்.!

போராடுவோம், பழிவாங்குவோம்.!

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சீனாவிலிருந்து ஒரு கூர்மையான கண்டனத்தை கிளப்ப மிகப்போதுமானதாக உள்ளதென்பது வெளிப்படை. "நாங்கள் ஒரு வர்த்தக யுத்தத்தை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதை கண்டு பயப்படவும் இல்லை" என்று சீன தூதரான கூயி டிங்காய் கூறியுள்ளார். மேலும் "யாரவது எங்கள் மீதொரு வர்த்தக யுத்தத்தை தொடுக்க முயற்சித்தால், நாங்கள் நிச்சயமாக போராடுவோம், பழிவாங்குவோம். யார் கடைசி வரை தாக்குபிடிக்கிறார்கள் என்பதை பார்போம்" என்றும் கூயி டிங்காய், தனது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
வால்மார்ட் தொடங்கி அமேசான்.காம் வரை.!

வால்மார்ட் தொடங்கி அமேசான்.காம் வரை.!

உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்களும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எல்லாவற்றிக்கும் மேலாக சீனாவிற்கு எதிரான இந்த நடவடிக்கையின் விளைவாக, வால்மார்ட் தொடங்கி அமேசான்.காம் வரையிலான வணிக குழுக்கள், நுகர்வோர் மற்றும் ஸ்வைட்ஸ்வைப் பங்குகளின் விலைகளை உயர்த்தும் நிலைமையும் உருவாகும். இது சார்ந்த மேலும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் செய்திகள் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Trump's China Tariffs Fuel Fears Of Trade War, Driving Down Stocks. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot