பேஸ்புக், கூகுள் மீது டொனால்ட் டிரம்ப் வழக்கு.! காரணம் என்ன?
சமூக வலைத்தளங்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் இந்த தளங்களில் தவறான கருத்துக்கள் பதிவிட்டால் அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் தினசரி நிகழ்வுகளை மிகவும் எளிமையாக
தெரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற சமூக ஊடகங்களுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகாப் பார்ப்போம்.
அதாவது அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். பின்பு இவரின் சர்ச்சைக்குரிய அல்லது தவறான கருத்துக்கள் காரணமாக சமூக ஊடகங்கள் அவரது பதிவை நீக்கி உள்ளன.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அதாவது ஆதரவாளர்களை தூண்டும் விதமாக பதிவிட்டதாக கூறி டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கு அந்நிறுவனம் நிரந்தர தடை விதித்தது.
அதேபோல் பேஸ்புக்கை பயன்படுத்த டிரம்பிற்கு 2 ஆண்டுகள் தடை உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கடந்த ஜனவரி மாத வன்முறை காரணமாக கூகுள் நிறுவனத்தின் யூடியூப் தளம் டிரம்பின் வீடியோக்களை முடக்கியது என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கூகுள், ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்களுக்கு எதிராக ஃபுலோரிடா நீதிமன்றத்தில் டிரம்ப் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க், ட்விட்டரின் ஜாக் டோர்சி மற்றும் கூகுளின் சுந்தர் பிச்சை ஆகியோரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளார்.
மேலும் தன்னை தவறாக கண்காணித்ததாகவும், அந்தந்த தளங்களில் செயல்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் உரிமைகளை அவர்கள் மீறினர் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். பின்பு மீணடும் தனது கணக்குகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் அவர் மனுவில் கூறியுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அதிபர் டிரம்பின் ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு போன்ற பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் டிரம்ப் சமூகவலைதளங்களில் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக கூறி பல பதிவுகள் பதிவிட்டார்.
அதன்பின்பு தான் டிரம்ப் பதிவிட்ட பதிவுகள் வன்முறையை தூண்டும்விதமாக இருக்கிறது என அவரது ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் தளங்களை சமூகவலைதள நிறுவனங்கள் முழுமையாக முடக்கின. இதை தொடர்ந்து அப்போதே டிரம்ப தனக்கென சொந்தமாக சமூகவலைதளத்தை தொடங்குவார் என்ற ஒரு அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications